ஞாயிறு, 21 அக்டோபர், 2018

"கழுவி ஊற்றுதல்"

இந்த பதிவை உங்களால் படிக்காமல் கடக்க முடியாது.... ஆனால்.. படித்தவர்கள் எல்லோருமே விருப்பக்குறி விடுவார்களா என்றால்.... நிச்சயமாய் சொல்ல முடியும்.... அதற்கு வாய்ப்பே இல்லை...

ஆம்..... அவர்களில் பெரும்பாலானோர் "நாங்கள் எல்லாம் நாகரீகமானவர்கள்.... இப்படி எல்லாம் பேசமாட்டோம்... இந்த செந்தில் கே நடேசனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை... பொது இடத்தில் எப்படி எழுவதென்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத இறுமாப்பு மிக்க முட்டாள்...." என்ற போலி முகமூடி அணிந்து, நல்லது சொல்பவனை குற்றம் சொல்லிக்கொண்டே எல்லாவிதமான ஒழுக்க கேடுகளையும் ரகசியமாய் செய்பவர்கள்....

இந்த பதிவிற்கு ஒரே ஒரு விருப்பக்குறி இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை..... ஏனென்றால்... 10-15 விருப்பக்குறி கூட இல்லாவிட்டால் நம் பிரபலத்தன்மை மீது சந்தேகம் வந்துவிடுமோ.. என்ற எந்த விதமான இமேஜ் ஃபிரேமிற்குள்ளும் என்னை நான் அடைத்துக்கொண்டதே இல்லை...

நான் சில ஆண்டுகளுக்கு முன்பே பதிவிட்டிருந்தேன்.... இந்த சொல்லாடலின் ஆரிஜின் தெரியாமல்.. அதன் முழு உள்ளர்த்தமும் தெரியாமல் பல அப்பாவிகள் இந்த வார்த்தைகளை மிகவும் சாதாரணமாய் உச்சரிக்கிறார்கள்..... என்று...

"கழுவி ஊத்துறது....." என்பதுதான் அது.... இதன் ஆரிஜின் சென்னை பகுதியை சுற்றி உள்ள நாலாந்தர குப்பங்கள்.... மனிதநாகரீகமோ, கல்வி அறிவோ , இங்கிதமோ தெரியாத பெண் தன்மை (குணங்கள்) கொஞ்சம் கூட இல்லாத பெண்கள் தான் இந்த வார்த்தையின் உற்பத்தியாளர்கள்..... யாருடனாவது சண்டை போடும்பொழுது "கூதி கழுவி அவன் மூஞ்சில ஊத்துடி...." " ங்கோத்தா.... கூதி கழுவி மூஞ்சில ஊத்திடுவேன்..." போன்ற வார்த்தைகளால் எதிராளியை அவமானப்படுத்துவார்கள்...




ஆனால்... இந்த "கழுவி ஊற்றுதல்" என்பது மிக சர்வசாதாரண புழக்கத்திற்கு வந்துவிட்ட நல்ல வார்த்தையாகி விட்டிருக்கிறது....

பெற்றோர்கள், அக்கம்பக்கத்தவர்கள் உச்சரிக்கும் வார்த்தைகளை கொண்டே ஒரு குழந்தை பேசக்கற்றுக்கொள்கிறது.... அந்த வார்த்தைகளையே அந்த குழந்தைகளும் பேச ஆரம்பிக்கிறது... ஆகவே குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டை போட கூடாது..... அநாகரீக வார்த்தைகளை உச்சரிக்க கூடாது.. என்றெல்லாம் உளவியல் நிபுணர்களும், குழைந்தைகள் நல ஆலோசகர்களும் கழுதையாய் காத்துக்கொண்டிருக்கிறார்... ஆனால்.. சமூக நகர்வுகளில் அதற்கான வாய்ப்பு மங்கிக்கொண்டே வருகிறது..... நம் குழந்தைகள் முன்பாக நாம் பேசாமல் தவிர்க்கலாம்.. ஆனால்... சமூகத்தின் பல வெளிச்ச விஷயங்கள் இம்மாதிரிதான் சத்தமாக உச்ச்சரித்துக்கொண்டிருக்கிறது..... இந்த வார்த்தைகளை கேட்க விடாமல் நம்மால் குழந்தைகளின் காதுகளை பொத்தி விட முடியாது...

சமீபத்தில் வெளியான "வடசென்னை" என்றொரு திரைப்படத்தில் இம்மாதிரியான வார்த்தைகள் மிக சாதாரணமாய் புழங்ககப்படுகிறது.... கதாநாயகனை பார்த்து "மொக்க கூதி" என்கிறார் கதாநாயகி... "ங்கொம்மால" என்று அடிக்கடி கூவுகிறார்கள் பல கதாபாத்திரங்கள்....

இந்த படங்களை தியேட்டர்களிலோ, டவுன்லோடு செய்தோ பார்த்தே ஆகவேண்டும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டோம் நாம்.... அப்படியே இதை தியேட்டரிலோ, இணையத்திலோ பார்க்காமல் தவிர்த்தாலும்... "உலகத்தொலைக்காட்ச்சிகளில் முதல் முறையாக.." என்று ராகமாய் கூவி அதை திரையிட்டு காட்டக்கூடிய தொல்லைக்காட்சி சேனல்களை நாம் நம் படுக்கை அறை வரை கொண்டு வந்துவிட்டோம்... இனிமேல் தடுக்கவே முடியாது...

எதார்த்தம், சுதந்திரம், இயல்பு, புரட்சி என்று பல சொல்லாடல்களும், வெளிச்சங்களும் சமூக சீரழிவுகளை முன்னெடுத்து அழிவை நோக்கி நம்மை நகர்த்துவதற்கு நாமும் ஆதரவளித்து கைதட்டி உற்சாகப்படுத்திக்கொண்டிருக்கிறோம்...

என்ன செய்ய.... என்ன செய்ய.. என்ன செய்ய... கேள்விகள் மட்டுமே நம் போன்ற சாமானியர்களை குடைந்துகொண்டே இருக்கிறது....

சரணம் அய்யப்பா....

எங்கள் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி மேரிமாதா ஆலயம், நாகூர் தர்கா போன்ற கிறிஸ்தவ , இஸ்லாமிய ஆலயங்களுக்கு நிறையபேர் செல்வார்கள்... நானும் கூட சென்றிருக்கிறேன்.... அவர்கள் பிறப்பால் இந்துக்களாக இருந்தாலும், மாரியம்மன், காளியம்மன், முருகன், வீரனார், அய்யனார் என்று இந்துமதத்தின் பல்வேறு கடவுள்களை பக்தியோடு வணங்கினாலும் இந்த வேளாங்கண்ணி மாதாவையும், நாகூர் ஆண்டவரையும் கடவுள்களாக மட்டுமே பார்த்து பழகியவர்கள்.... கடவுள் என்ற பக்தி மட்டுமே நோக்கமாக இருக்கும்பொழுது அங்கே இந்துவோ, இஸ்லாமியமோ, கிறிஸ்தவமோ குறுக்கிடுவதில்லை.... அவர்களை அங்கெல்லாம் யாரும் தடுத்ததும் இல்லை... கேட்டதும் இல்லை....

தற்போது எல்லாவயதிற்குட்பட்ட பெண்களும் ஐயப்பன் கோயிலுக்கு போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ரெஹானா, ஃபாத்திமா, எபி , கவிதா கோஷி போன்ற சில பெண்கள் சபரிமலைக்கு கிளம்பி விட்டார்கள்...




இந்த பெயர்களை பார்த்த உடனேயே நமக்கு தெரிந்திருக்கும்.. இவர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்கள் இல்லை... அப்படியானால் இவ்வளவு காலமும் ஐயப்பன் மேல் மிகவும் பக்தியாக இருந்து, தாம் வேறு மதத்தை சேர்ந்தவர்.. நம் அய்யப்பன் பக்தியை வெளியில் காட்டிக்கொண்டால் யாராவது தவறாக நினைப்பார்கள் என்று ரகசியமாய் வைத்திருந்து , ஐயகோ... நான் 30-40 வயதுகளில் இருக்கும் ஒரே காரணத்தால் நம்மால் அய்யப்பனை தரிசிக்க முடியாமல் போய் விட்டதே..... அய்யப்பனை தரிசிக்க இன்னும் 10-20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. என்று ஏங்கி கிடந்து, தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை சொன்னதும்..... "அடடா... என் கடவுளை தரிசிக்க..... நான் யாரை பார்க்க முடியுமா என்று ஏங்கிக்கிடந்தேனோ.... அந்த அய்யப்பனை தரிசிக்க உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டது..... இனிமேல் மதங்களோ, சட்டங்களோ என்னை தடுக்க முடியாது..... என் தெய்வத்தை தரிசித்தே தீருவேன்.. என்று பக்தி சிரத்தையுடன் வைராக்கியமாக கிளம்பியவர்களா..... என்று யோசித்தால்.... அதற்கான பதில்...... "இல்லை... இல்லவே இல்லை..." என்று மிக சத்தமாய் கேட்கிறது....

அப்படி என்றால்..... இந்த தீர்ப்பு இவர்களை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல எந்த விதத்தில் தூண்டியது.. என்ற அடுத்த கேள்வி வரும்போதுதான்... நம் உளவியல் அறிவு கண் விழித்து, சோம்பல் முறைத்தபடி பதில் சொல்கிறது....

இந்த பெண்கள் ஓரளவு விஷய ஞானம் உள்ளவர்கள்.... பழைய செய்திகளை, நிறைய புரட்சியாளர்களின் வரலாறுகளை படித்து அறிந்தவர்கள்... சமூக நகர்வுகளை மிகத்தெளிவாய் உற்று நோக்குபவர்கள்.. அதன் தாக்கங்களை துல்லியமாய் கணிக்கத்தெரிந்தவர்கள்.... இத்தனை திறமை இருந்தும் என்ன பயன்.... இவர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் யாருக்கும் தெரியவில்லை... ஆகவே அதற்கான வாய்ப்புக்காய் காத்திருந்தவர்கள்...

விபச்சாரிகளை கூப்பிட்டு விருது கொடுத்து பாராட்டும் சமூகத்திடமிருந்து...... குடும்ப உறவுகளை உதறித்தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாக வாழும் பெண்களை மேடையேற்றி சால்வை போர்த்தி கவுரவிக்கும் சமூகத்திடமிருந்து...... இயற்கைக்கு முரணாய், கலாச்சாரத்திற்கு முரணாய்.... பாரம்பரியத்தை சீரழிப்பதாய் செய்யப்படும் செயல்களுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகத்திடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட விஷயம் இதுதான்....

"இங்கே என்ன செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. ஏதாவது ஒரு பழைய விஷயத்தை முரனாக்கி.. அதை மீறினால் நமக்கு சட்ட, தார்மீக பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும்.... நம் மீது ஊடக வெளிச்சம் பாயும்.. நாமும் பலர் அறிந்த பிரபலமாவோம்... நாம் எங்கு சென்றாலும் நம்மை தெரிந்தவர்கள் நம்மை சூழ்ந்து கொள்வார்கள்... வரலாறு நம் பெயரையும் தாங்கி நிற்கும்...."

இந்த அப்ஷர்வேஷனின் வெளிப்பாடே அந்த பெண்களை அய்யப்பன் கோயிலை நோக்கி தள்ளி விட்டிருக்கிறது.... நிச்சயமாய் அய்யப்பன் கோயில் வரலாற்றை எதிர்காலத்தில் எழுதும்பொழுது இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துவிட்டு எழுதி விட முடியாது.... ஒருவேளை இதற்கு பிறகு எல்லா வயது பெண்களும் சுமூகமாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டால்..... "முதலில் ஐயப்பன் கோயிலுக்கு சென்ற "மாதவிடாய் கால வயதுள்ள பெண்கள்" என்று இவர்கள் பெயர்கள் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
ஒருவேளை தடுக்கப்பட்டால்.... நிச்சயம் இம்மாதிரி செயல்களின் மீது உடனடியாய் பாயும் ஊடக வெளிச்சம் நம் மீதும் பாய்ந்து நாம் இந்திய அளவில் - உலக அளவில் பிரபலமாக, அறியப்பட்டவராக ஆகலாம்....

ஆகவே தான் அவர்கள் இப்படி வம்படியாய் அய்யப்பனை தரிசிக்க கிளம்பி விட்டார்கள்...

இதற்கு இவர்களை மட்டும் குற்றம் சாட்டுவதால் நாம் தப்பித்தது விட முடியாது.. ஏனென்றால்... இந்த பெண்களை குற்றவாளி என்று ஒருவிரலால் நாம் சுட்டிக்காட்டும் பொழுது.... "இம்மாதிரி செயல்களை ஆதரித்த, அப்படி செய்பவர்களை கூட்டம் கூடி வேடிக்கை பார்த்த, அவர்களை மேடையேற்றிய, அவர்களுக்கு விருதுகள் கொடுத்த நம்மை நோக்கி மற்ற மூன்று விரல்களும் நீண்டிருப்பதை நாம் உணர வேண்டும்..

அனுபவங்களே நம் அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கிறது...

சரணம் அய்யப்பா....

ஆயிர பூஜ


இந்த வார்த்தையின் அர்த்தம் ஆயிரம் முறை பூஜை என்றோ ... ஆயிரம் கோயில்களில் பூஜை என்பதோ அல்ல.... ஆயுத பூஜைதான் எனக்கு விபரம் தெரிய ஆரம்பித்த காலத்தில் "ஆயிர பூஜ" அறிமுகமாயிருந்தது...

பூஜை கொண்டாடப்படும் நாளிலோ, அதற்கு ஒருநாள் முன்னதாகவோ வீடுகளில் இருக்கும் அம்மாவோ, அம்மாச்சியோ, ஆயாவோ... குரல் கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.... "ஏள்ள (ஏ புள்ள)... இந்த சாமான எல்லாம் வெளில அள்ளிப்போட்டு கழுவு...."




வீட்டில் இருக்கும் படி-மரக்கால் முதல், மாட்டுக்கு கட்டும் சலங்கை, அறுவடை காலத்தில் பயன்படுத்தப்படும் கொக்காலி (வைக்கோல், கடலை கொடி, உளுந்து கொடி போன்றவற்றை கொத்தாக பற்றி அள்ள பயன்படுவது) , உழவாரம் (சமதரையில் படர்ந்திருக்கும் புற்களை செதுக்கி எடுக்க பயன்படுவது) , கருக்கருவாள் (கதிர் அறுக்க பயன்படுவது ) கோடாரி, பாரை, மண்வெட்டி , களவறி (களை எடுக்கவும், பயிர்களின் ஊடே நிலத்தை கீறிவிடவும் பயன்படுவது ) என எல்லா பொருட்களும் குடத்தடிக்கு வரும்... தேங்காய் நாறில் சாம்பல் ஒற்றி எடுத்தது துலக்கி கழுவி காயவைக்கப்பட்டு நடுவீட்டில் சுவரோரமாய் குடியேறும்...

வண்டி, கலப்பை, நுகத்தடி எல்லாம் கழுவி காயவைக்கப்பட்டு பத்தாயத்தில் (நெல் சேகரிப்பு கலன்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும்... சில வருடங்கள் மழை தாமதத்தாலோ, ஆற்றுநீர் தாமதத்தாலோ ஆயுத பூஜை நாட்களில் நடவிற்கான உழவு வேலை நடக்கும்.. அந்நேரம் கலப்பை நுகத்தடி மட்டும் பூஜையில் கலந்துகொள்ளாமல் வயலில் தங்கிப்போகும்...

காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலையை அவித்து தாளித்து ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... பச்சை அரிசியில் வெல்லம் , நிலக்கடலை பருப்பு கலந்து கிண்டி ஒரு பாத்திரத்தில் இருக்கும்.... (சில வீடுகளில் வெல்லப்பாகு செய்து, இந்த பச்சரிசியை திருவையிலிட்டு குருணையாய் உடைத்து , நிலக்கடலை பருப்பை வறுத்து போட்டு பச்சரிசி கிண்டுவார்கள்....)
அவல், அரிசி பொறி, சர்க்கரை, பொட்டுக்கடலை கலந்து ஒரு பாத்திரத்திலிருக்கும்.... எல்லா வருடமும் ஆயுதபூஜைக்கு இந்த மூன்று பதார்த்தங்களும் மாண்டடரி ....

அப்பா எங்கிருந்தோ கொண்டுவந்த நாவல் கொழுந்து, இண்டங்கொழுந்து, அரளிக்கொழுந்து, ஆவாரம் கொழுந்து எல்லாம் பூஜை இடத்தினருகில் வைக்கப்பட்டிருக்கும்.... மாலை சூரியன் மறைந்து இருள் கவியத்தொடங்கும் நேரம் பூஜை தொடங்கும்..... ஒரு கிண்ணத்தில் சந்தனம் கரைக்கப்பட்டிருக்கும்... ஒரு கிண்ணத்தில் குங்குமம்... அம்மா ஊதுபத்தி கொளுத்தி, சாம்பிராணி புகைபோட்டு, வாழைப்பழம், வெற்றிலை-பாக்கு, தேங்காய், பூ (கதம்பம்) அத்துடன் ஒரு சிறிய அளவிலான புத்தகம் ஆகியவற்றை ஒரு தாம்பூலத்தட்டில் வைத்து பூஜைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்க..... வீட்டிற்கு பின்னாலிருந்த பலாமரத்தில் இருந்து ஒடித்துக்கொண்டுவந்த இலைகளை வைத்து அப்பா தொன்னை தைத்துக்கொண்டிருப்பார்... இரண்டு அல்லது மூன்று இலைகளை இணைத்து அழகாக தொன்னை தைப்பார்...

பெரியக்கா கரைத்து வைத்த சந்தன கிண்ணத்தில் இருந்து சந்தனம் எடுத்து எல்லா பொருட்களுக்கும் சந்தன பொட்டு வைக்க... சின்னக்கா அந்த சந்தனப்பொட்டின் மேல் குங்குமம் வைத்துக்கொண்டிருப்பாள்... பத்தாயம், அம்மாவுக்கு சீர்வரிசையாய் வந்த பீரோ, கலப்பை, நுகத்தடி, கூனு, நிலைப்படி, கதவு என எல்லா இடங்களிலும் சந்தன-குங்கும பொட்டு வைத்து முடித்ததும் பூஜை தொடங்கும்...

(வயலில் தங்கிவிட்ட கலப்பை-நுகத்தடிக்கு அப்பா காலையில் சென்று பொட்டு வைத்து பூ சூட்டுவார் )

அப்பா தைத்த தொன்னைகளில் கொண்டக்கடலை, பச்சரிசி, அவல்-பொறி நிறைக்கப்பட்டு சாமிக்கு படையல் வைக்கப்பட்டிருக்கும்...

எல்லா பொருட்களுக்கும் பொட்டுவைத்துவிட்டு அக்காள்கள் பூஜை இடத்திற்கு வந்ததும் அம்மா மறக்காமல் கேட்பாள்...."ஏள்ள... பீரோலுக்கு பொட்டுவச்சியா...."

என்னதான் வீட்டில் ஆயிரம் பொருட்கள் இருந்தாலும், திருமணமாகி எத்தனை ஆண்டுகளானாலும் பெண்களை பொறுத்தவரை பிறந்தவீட்டு சீதனம் மட்டும் எல்லாவற்றிலும் உயர்வானதுதான்...

எங்களின் புத்தகப்பைகள் பூஜையில் முக்கிய இடம் பிடிக்கும்.... ஓரிரு புத்தகங்களுக்கும் கூட சந்தனம்-குங்குமம் வைக்கப்படும்...

இதுவரை சுவாரஸ்யமாய் போய்க்கொண்டிருந்த பூஜை... இப்போது லேசாக திணற ஆரம்பிக்கும்... "ஏம்பா.. எல்லோரும் ஒம்பொஸ்தவத்தை எடுத்து ஏதாவது படிங்க...."
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள... சின்னக்கா மட்டும் உஷாராகி புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவாள்.... எனக்கும்-பெரியக்காவிற்கும் படிக்கிறதுன்னா பாழுங்கிணத்துல குதிக்கிற மாதிரி ஒரு பயம்....

இரண்டு மூன்றுமுறை சொல்லியும் நானும் பெரியக்காவும் கண்டுகொள்ள மாட்டோம்....

தாம்பூலத்தட்டில் இருக்கும் அந்த சிறிய புத்தகத்தை எடுத்து, அப்பா கணீர் குரலில் ராகமாய் வாசிக்கத்தொடங்குவார்....

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்...

கொஞ்சம் கொஞ்சமாய் அப்பாவின் குரல் உயரும்...

"நாவக்கொழுந்தே.. நாமஷ்ட்டே
இண்டங்கொழுந்தே நாமஷ்ட்டே
அரளிக்கொழுந்தே நாமஷ்ட்டே
ஆவாரங்கொழுந்தே நாமஷ்ட்டே ....."
என்று முடிப்பார்....

அப்பா சொல்லும் நாமஷ்ட்டே என்பதற்கான சரியான உச்சரிப்பை தெரிந்துகொள்ளும்பொழுது அப்பா இறந்து சில வருடங்கள் கழிந்திருந்தது..... "நமஸ்தே" என்பதைத்தான் அப்பா அப்போது ராகமாய் நீட்டி "நாமஷ்ட்டே " என்று உச்சரித்திருக்கிறார்...

அப்பா வாசித்து முடித்ததும் ஆளுக்கு ஒரு தொண்ணையாக எடுத்துக்கொள்வோம்...

இந்த ஆயுதபூஜை சந்தன-குங்கும பொட்டு சில மாதங்களுக்கு பின்னாலும் கூட எப்போதாவது சட்டையில் ஒட்டிக்கொள்ளும்....

ம்ம்ம்.....................

காரில் படிந்திருந்த தூசியை ப்ரெஷால் துடைத்துவிட்டு அலுவலக மடிக்கணினியில் பேஸ்புக்கில் நண்பர்களுக்கும், அலைபேசியில் அக்காள்களுக்கும் வாழ்த்து சொல்லி கழிந்துகொண்டிருக்கிறது என் ஆயுதபூஜை...

இத்தனை பெரிய பதிவு எழுதுவதற்கான அனுபவத்தை கொடுத்தது என் குழந்தைகால ஆயுதபூஜை.... இன்னும் சில- வருடங்கள் கழித்து எழுதுவதற்கு அபிக்கும்-ஆதிக்கும் நான் ஏதாவது நினைவுகளை சேர்த்து வைத்திருக்கிறேனா??? தெரியவில்லை....

ஆர்யா என்கிற பாஷ்யம்

ஆர்யாவை தெரியுமா என்று கேட்டால் நம்மில் அனைவரும் உடனே சொல்வோம்.. "அய்யே... ஆர்யா யாருன்னு கூட தெரியாதா....? அவர் பெரிய ஹீரோ..."

ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம் என்றால்.... நாம் உடனே பின்வாங்குவோம்... யோசிப்போம்.... நடிகர் ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யாமா... என கூகுள் செய்வோம்...."

தாம் எப்பாடு பட்டாவது தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று மாபெரும் கொள்கையுடன் "தமிழர் நலன்.. தமிழ் தேசியம்.." என்றெல்லாம் உணர்ச்சிகளை தூண்டிவிடும் சமகால தந்திரசாலிகளை தலைவன் என்று போற்றிக்கொண்டிருக்கும் நமக்கு இந்த ஆர்யா என்ற பாஷ்யம் சற்று அந்நியப்பட்ட பெயர்தான்...

1932 ஜனவரி மாதம் 25ம் நாள் அந்த ஆர்யா என்கிற பாஷ்யம் திருவல்லிக்கேணியின் கடைத்தெருவில் துணிக்கடைகளில் ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறான்... அவன் கேட்டது..."இங்கே இந்திய தேசியக்கொடி இருக்கிறதா.."

பலர் "இல்லை" என்று சொல்லிவிட்டார்கள்... சிலர் அவர்கள் ரகசியமாய் விற்பனைக்கு வைத்திருந்த சிறிய அளவிலான கொடியை காட்டினார்கள்....

பாஷ்யத்தின் தேவை அந்த சிறிய கொடி அல்ல... அவனின் கற்பனையில் இருந்த கொடியின் அளவில் காலேஅரைக்கால் அளவுகூட இல்லை அவர்கள் காட்டிய கொடி... அவனின் தேவை பெரிய அளவு... மிகப்பெரிய அளவு.... யோசித்தான்....

ஒரு பெரிய நான்கு முழ வேட்டியை வாங்கினான்... வண்ணப்பொடிக்கடையில் காவியும் பச்சையும் நீலமும் வாங்கிக்கொண்டான்.... தம்பு செட்டி தெருவில் தான் தங்கி இருந்த அறைக்கு வந்தான்.... வாங்கி வந்த வேட்டியில் ஒருபக்கம் காவியையும், ஒருபக்கம் பச்சையும் கரைத்து நனைத்து நடுவே நீல ராட்டை வரைந்து ஒரு இந்திய தேசியக்கொடியை உருவாக்கினான்.... அதில்..."இந்தியா இன்றுமுதல் சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது.." என்று எழுதினான்....அதை காயவைத்து மடித்து இடுப்பில் சுற்றிக்கொண்டான்... மேலே காக்கி அரைடவுசரும், காக்கி சட்டையும் அணிந்துகொண்டான்..

மீண்டும் திருவல்லிக்கேணி வந்தான்.... சுப்ரமணிய சிவாவின் மருமகன் வேணுகோபால சந்தித்தான்... "நான் எங்கு போனாலும் என் பின்னே தூரமாக தொடர்ந்து வா" என கட்டளையிட்டான்...

இருவருமாக மவுண்ட் ரோடில் இருந்த எல்பின்ஸ்டன் தியேட்டருக்குள் நுழைவுச்சீட்டு வாங்கி நுழைந்தார்கள்.. இரவு 12 மணி.. படம் முடிந்து அனைவரும் வெளியேற.... செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் காவல் பணிமுடிந்து பொழுதுபோக்க சினிமா பார்க்க வந்து வெளியேறியவர்களுடன் கலந்தான்... அதற்காகத்தான் அந்த காக்கி சீருடை தயார் நிலை...

காக்கி சீருடையில் கூட்டத்தில் கலந்து நுழைந்ததால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இவனை யாரும் கண்டுகொண்டு தடுக்கவில்லை...

காவலர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிக்கொண்டிருக்க... இவன் மட்டும் ரகசியமாய் பிரிந்து, கோட்டையின் கொடிமரம் நோக்கி நடந்தான்... 200 அடி உயர கொடிமரத்தில் 140 அடி ஏறிவிட்டான்.... அந்த அளவுவரைதான் கால் வைத்து ஏறும் வசதி இருந்தது.. அதற்கும் மேலே 60 அடி உயரம் வெறும் இரும்புக்குழாய் அமைப்புதான்.... மனதில் எரிந்த சுதந்திர வேட்கை , அந்த இரும்புக்குழாயை இறுகப்பற்றும் உறுதியை தந்தது அவனுக்கு...

அடி அடியாய் ஏறி 60 அடியையும் கடந்து உச்சியை அடைகிறான்... ஒரு உடும்பை போல தன்னை குழாய்களில் பிணைத்து இறுக்கிக்கொண்டு , தன இடுப்பில் இருந்த இந்திய தேசியக்கொடியை உதறி அந்த கம்பத்தில் கட்டுகிறான்...



சறுக்கியபடி கீழிறங்கி நழுவி. மீண்டும் தம்புச்செட்டித்தெருவை அடைகிறான்... மறுநாள் காலை ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டை அலுவலக அதிகாரிகளின் மத்தியில் பரபரப்பு பற்றிக்கொள்கிறது...... எல்லா உயரதிகாரிகளும் கோட்டை கொடிமரத்தின் அருகே குழுமுகிறார்கள்...

"யார்.. யார்.... "
கேள்விகள் அவர்கள் புருவங்களை உயர்த்த.. ஆத்திரம் அவர்களின் கண்களை சிவக்க வைக்க... கொடிமரத்தை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது... அந்த திகாரிகள் கூட்டம்.... அதுவே அந்த தேசியக்கொடிக்கு அவர்கள் மரியாதை கொடுப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தந்தது...

எதுவுமே தெரியாதது போல தம்புச்செட்டித்தெருவில் தனியாளாய் நடந்துகொண்டிருந்தன பாஷ்யம் என்ற ஆர்யா...

அதே 1932ம் வருடம் ஜனவரி 26ம் தேதியை நாம் சுதந்திரதினமாக கொண்டாடவேண்டும்.. என்று ஜவஹர்லால் நேரு விடுத்திருந்த அறைகூவலை செயலாக்கவே பாஷ்யம் கோட்டையில் கொடி ஏற்றினான்... இதை செய்தபோது அவனுக்கு வயது 25.

தற்போதைய திருவாரூர் மாவட்டம்.. அந்நாளைய தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அருகில் இருக்கும் சேரன் குளம் தான் அந்த ஆர்யா என்கிற பாஷ்யத்தின் சொந்த ஊர்...

இவன் ஒரு பார்ப்பனன் என்பதை இந்நேரம் கண்டுபிடித்திருந்தால்... நீங்கள் ஒரு சமகால சமூகநீதி காவலன் என்பதை சொல்லவே வேண்டாம்...

சீமானும், திருமுருகன் காந்தியும் பிரித்துக்கொண்டுபோக தமிழ்நாடு ஒன்றும் இவர்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல....... இந்தியாவை உருவாக்கியது நாம்.... தேசியத்தமிழ் என்று சொல்லிப்பழகுவோம்......... இந்த தந்திர நரிகளின் தலைமை ஆசைக்கு பலிக்கடாவாகி தமிழ் தேசியம் என்று சீரழிய வேண்டாம்...

டெல்லியோ, மும்பையோ, கொல்கத்தாவோ.... சுதந்திர ஒப்பந்தம் கையெழுத்தானப்பிறகுதான் அங்கிருந்த கோட்டைகளில் தேசியக்கொடி பறந்தது.... ஆனால்... சுதந்திரம் வாங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே கோட்டையில் இந்திய தேசியக்கொடியை ஏற்றி அழகுபார்த்தவர்கள் நாம்

யாரோ சிலரின் நாற்காலி ஆசைக்கு எம் தேசத்தை கூறுபோட அனுமதிப்பதா...??

பொருளாதார தேடலில் எங்கள் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்த "திரைகடலோடி திரவியம் தேட" நாங்கள் பூமிப்பந்தில் ஏதோ ஒரு மூலையில் நிலைகொண்டிருக்கலாம்... இந்தியா என் தேசம்.... என்ற நினைவுகள் நுரையீரல் முழுக்க நிரப்பிக்கொண்டுதான் நாங்கள் விமானமேறி இருக்கிறோம்....

வாழ்க இந்தியா....!!!