ஞாயிறு, 21 அக்டோபர், 2018

சரணம் அய்யப்பா....

எங்கள் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி மேரிமாதா ஆலயம், நாகூர் தர்கா போன்ற கிறிஸ்தவ , இஸ்லாமிய ஆலயங்களுக்கு நிறையபேர் செல்வார்கள்... நானும் கூட சென்றிருக்கிறேன்.... அவர்கள் பிறப்பால் இந்துக்களாக இருந்தாலும், மாரியம்மன், காளியம்மன், முருகன், வீரனார், அய்யனார் என்று இந்துமதத்தின் பல்வேறு கடவுள்களை பக்தியோடு வணங்கினாலும் இந்த வேளாங்கண்ணி மாதாவையும், நாகூர் ஆண்டவரையும் கடவுள்களாக மட்டுமே பார்த்து பழகியவர்கள்.... கடவுள் என்ற பக்தி மட்டுமே நோக்கமாக இருக்கும்பொழுது அங்கே இந்துவோ, இஸ்லாமியமோ, கிறிஸ்தவமோ குறுக்கிடுவதில்லை.... அவர்களை அங்கெல்லாம் யாரும் தடுத்ததும் இல்லை... கேட்டதும் இல்லை....

தற்போது எல்லாவயதிற்குட்பட்ட பெண்களும் ஐயப்பன் கோயிலுக்கு போகலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ரெஹானா, ஃபாத்திமா, எபி , கவிதா கோஷி போன்ற சில பெண்கள் சபரிமலைக்கு கிளம்பி விட்டார்கள்...




இந்த பெயர்களை பார்த்த உடனேயே நமக்கு தெரிந்திருக்கும்.. இவர்கள் இந்துமதத்தை சார்ந்தவர்கள் இல்லை... அப்படியானால் இவ்வளவு காலமும் ஐயப்பன் மேல் மிகவும் பக்தியாக இருந்து, தாம் வேறு மதத்தை சேர்ந்தவர்.. நம் அய்யப்பன் பக்தியை வெளியில் காட்டிக்கொண்டால் யாராவது தவறாக நினைப்பார்கள் என்று ரகசியமாய் வைத்திருந்து , ஐயகோ... நான் 30-40 வயதுகளில் இருக்கும் ஒரே காரணத்தால் நம்மால் அய்யப்பனை தரிசிக்க முடியாமல் போய் விட்டதே..... அய்யப்பனை தரிசிக்க இன்னும் 10-20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே. என்று ஏங்கி கிடந்து, தற்போது உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை சொன்னதும்..... "அடடா... என் கடவுளை தரிசிக்க..... நான் யாரை பார்க்க முடியுமா என்று ஏங்கிக்கிடந்தேனோ.... அந்த அய்யப்பனை தரிசிக்க உச்சநீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டது..... இனிமேல் மதங்களோ, சட்டங்களோ என்னை தடுக்க முடியாது..... என் தெய்வத்தை தரிசித்தே தீருவேன்.. என்று பக்தி சிரத்தையுடன் வைராக்கியமாக கிளம்பியவர்களா..... என்று யோசித்தால்.... அதற்கான பதில்...... "இல்லை... இல்லவே இல்லை..." என்று மிக சத்தமாய் கேட்கிறது....

அப்படி என்றால்..... இந்த தீர்ப்பு இவர்களை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல எந்த விதத்தில் தூண்டியது.. என்ற அடுத்த கேள்வி வரும்போதுதான்... நம் உளவியல் அறிவு கண் விழித்து, சோம்பல் முறைத்தபடி பதில் சொல்கிறது....

இந்த பெண்கள் ஓரளவு விஷய ஞானம் உள்ளவர்கள்.... பழைய செய்திகளை, நிறைய புரட்சியாளர்களின் வரலாறுகளை படித்து அறிந்தவர்கள்... சமூக நகர்வுகளை மிகத்தெளிவாய் உற்று நோக்குபவர்கள்.. அதன் தாக்கங்களை துல்லியமாய் கணிக்கத்தெரிந்தவர்கள்.... இத்தனை திறமை இருந்தும் என்ன பயன்.... இவர்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேல் யாருக்கும் தெரியவில்லை... ஆகவே அதற்கான வாய்ப்புக்காய் காத்திருந்தவர்கள்...

விபச்சாரிகளை கூப்பிட்டு விருது கொடுத்து பாராட்டும் சமூகத்திடமிருந்து...... குடும்ப உறவுகளை உதறித்தள்ளிவிட்டு தான்தோன்றித்தனமாக வாழும் பெண்களை மேடையேற்றி சால்வை போர்த்தி கவுரவிக்கும் சமூகத்திடமிருந்து...... இயற்கைக்கு முரணாய், கலாச்சாரத்திற்கு முரணாய்.... பாரம்பரியத்தை சீரழிப்பதாய் செய்யப்படும் செயல்களுக்கு ஆதரவு கொடுக்கும் சமூகத்திடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட விஷயம் இதுதான்....

"இங்கே என்ன செய்கிறோம் என்பது முக்கியமில்லை.. ஏதாவது ஒரு பழைய விஷயத்தை முரனாக்கி.. அதை மீறினால் நமக்கு சட்ட, தார்மீக பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும்.... நம் மீது ஊடக வெளிச்சம் பாயும்.. நாமும் பலர் அறிந்த பிரபலமாவோம்... நாம் எங்கு சென்றாலும் நம்மை தெரிந்தவர்கள் நம்மை சூழ்ந்து கொள்வார்கள்... வரலாறு நம் பெயரையும் தாங்கி நிற்கும்...."

இந்த அப்ஷர்வேஷனின் வெளிப்பாடே அந்த பெண்களை அய்யப்பன் கோயிலை நோக்கி தள்ளி விட்டிருக்கிறது.... நிச்சயமாய் அய்யப்பன் கோயில் வரலாற்றை எதிர்காலத்தில் எழுதும்பொழுது இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நிராகரித்துவிட்டு எழுதி விட முடியாது.... ஒருவேளை இதற்கு பிறகு எல்லா வயது பெண்களும் சுமூகமாக அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்பட்டால்..... "முதலில் ஐயப்பன் கோயிலுக்கு சென்ற "மாதவிடாய் கால வயதுள்ள பெண்கள்" என்று இவர்கள் பெயர்கள் நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்...
ஒருவேளை தடுக்கப்பட்டால்.... நிச்சயம் இம்மாதிரி செயல்களின் மீது உடனடியாய் பாயும் ஊடக வெளிச்சம் நம் மீதும் பாய்ந்து நாம் இந்திய அளவில் - உலக அளவில் பிரபலமாக, அறியப்பட்டவராக ஆகலாம்....

ஆகவே தான் அவர்கள் இப்படி வம்படியாய் அய்யப்பனை தரிசிக்க கிளம்பி விட்டார்கள்...

இதற்கு இவர்களை மட்டும் குற்றம் சாட்டுவதால் நாம் தப்பித்தது விட முடியாது.. ஏனென்றால்... இந்த பெண்களை குற்றவாளி என்று ஒருவிரலால் நாம் சுட்டிக்காட்டும் பொழுது.... "இம்மாதிரி செயல்களை ஆதரித்த, அப்படி செய்பவர்களை கூட்டம் கூடி வேடிக்கை பார்த்த, அவர்களை மேடையேற்றிய, அவர்களுக்கு விருதுகள் கொடுத்த நம்மை நோக்கி மற்ற மூன்று விரல்களும் நீண்டிருப்பதை நாம் உணர வேண்டும்..

அனுபவங்களே நம் அடுத்த நகர்வுகளை தீர்மானிக்கிறது...

சரணம் அய்யப்பா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக