சனி, 9 மே, 2015

இந்தியாவில் ஏன் பெட்ரோல் கிடைக்கவில்லை?

நேற்று தோஹாவில் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். 
''இங்கே மட்டும் ஏன் பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கின்றன? நம் நாட்டைவிட்டு வேலைக்காக இங்கே வரவேண்டி இருக்கிறதே?'' என்றேன்.
அதற்கு அவர் சொன்னார்... ''இங்கே கிடைக்கிறதாலதான் நீயும், நானும், நம்மைப் போல் லட்சக்கணக்கானோரும் வசதியாக வாழும் அளவுக்குச் சம்பாதிக்க முடியுது. இதே நம்ம நாட்டுல கிடைச்சிருந்தா டாடா, அம்பானி, மல்லையா போன்ற பெரும் பணக்காரங்களும், அரசியல்வாதிகளும்தான் வசதியா வாழ்ந்திருப்பாங்க. நம்ம பாடு திண்டாட்டமாகி இருக்கும்...''
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

அறிவுரை சொல்லும் பெரியோர்களுக்கு ஒரு அறிவுரை..

உங்களது அனுபவத்தால் விளைந்த நன்மைகள், பாதிப்புகள், 
மற்றவரின் அனுபவத்தில் பார்த்து நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள், 
படித்து தெரிந்து கொண்ட விஷயங்கள் ஆகியவற்றை இன்னொருவருக்கு அறிவுரையை சொல்கிறீர்கள்.. அது நிச்சயம் உங்கள் நல்லெண்ணத்தின் வெளிப்பாடுதான்.. 

நான் இந்த வழியில் சென்றேன்.. இப்படி நடந்தது.. நீ இப்படி செய்தால் இன்னும் நன்றாய் நடக்கும்.. என்று மற்றவருக்கு வழிகாட்டும் ஒரு அறிய முயற்சிதான் அது.. 
ஆனால் அறிவுரை சொல்வது யாருக்கு தான் பிடிக்கிறது.. 

எனவே.. நீங்கள் அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இடையில் நிறுத்தி 
ஒரு இரண்டு மூன்று நிமிடம் கழித்து "இப்போ என்ன சொல்லிட்டிருந்தேன் " என்று 
ஒரு கேள்வியை எழுப்புங்கள்.. 
கேட்டுக்கொண்டிருந்த நபர் மிக சரியாய் நீங்கள் சொன்னதை 
சொல்லிவிட்டால் தொடருங்கள்.. 
அவர் உங்கள் அறிவுரைக்கு செவிமடுக்கிறார் என்று அர்த்தம்.. மாறாக.. திரு திரு என்று முழித்தால்...



வெத்துக்காட்டுல விதை விதைக்காம பொய் ஆகவேண்டிய வேலைய பாருங்க.. சனியன் எப்படியோ ஒழியட்டும்...

சிறந்த பக்தன்

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் கதை...
நாரத முனி ஒரு முறை பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் கேட்டார்...
"பிரபு.. தங்களின் பக்தர்களில் தங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்..?"
"இதிலென்ன சந்தேகம்..?? 
என் பக்தன் செந்தில் கே நடேசன் தான் எனக்கு மிகவும் பிடித்தமானவன்.."
பகவான் தம்முடைய பெயரைத்தான் சொல்வார் என்று எதிர் பார்த்த
 நாரத முனிக்கு கோபம் வந்தது..

 "பிரபு.. இது அநியாயம்.. சதா சர்வகாலமும் நாராயணா நாராயணா என்று 
உங்கள் பெயரையே உச்சரிக்கும் என்னை தானே நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்...?"

நீ போய் செந்தில் கே நடேசன் என்ன செய்கிறான் என்று பார்த்து வா.. என 
நாரதரை அனுப்பினார் பகவான்..
அப்படி என்னதான் செய்கிறான் செந்தில் கே நடேசன்..?? 
ஆவல் மேலிட நாரதமுனி தொடர்ந்து இரண்டு நாட்கள் அவனை கவனித்தார்.. 
பிறகு ஸ்ரீமன் நாராயணனிடம் சென்றார்..
"பிரபு.. அவன் காலையில் ஒரு முறையும்.. இரவு உறங்க போகும் முன் 
ஒரு முறையும் மட்டுமே தங்கள் பெயரை உச்சரித்தான்.. 
மற்ற நேரங்களில் அவன் தங்களை பற்றி நினைக்க கூட இல்லை... 
அவனை எப்படி சிறந்த பக்தன் என்று சொல்கிறீர்கள்..?"
சில நாட்கள் போயிற்று..
ஒரு நாள் நாரதரை அழைத்த பகவான்.. ஒரு சிறிய கிண்ணத்தில் தழும்பும் அளவு 
எண்ணெய் நிரப்பி இதனை எடுத்துக்கொண்டு நீ இந்த உலகை 
இரண்டு நாள் வலம் வர வேண்டும் .. ஆனால் ஒரு துளி கூட கீழே சிந்த கூடாது..." என்றார்..
"இதென்ன பிரமாதம்.. இதோ போகிறேன்.." என்ற படியே 
நாரதர் சென்று இரண்டு நாட்கள் உலகை வலம் வந்து 
ஒரு துளி கூட கீழே சிந்தாமல் நாராயணனிடம் வந்தார்...
அற்புதம் என்று வாழ்த்திய ஸ்ரீமன் நாராயணன் நாரதரிடம் கேட்டார்...
"இந்த இரண்டு நாளில் நீ என் பெயரை எத்தனை முறை உச்சரித்தாய்...?/"
யோசித்த நாரதருக்கு உரைத்தது.. எண்ணெய் கீழே சிந்திவிட கூடாது என்ற 
கவனத்துடனேயே இருந்ததால் ஒரே ஒரு முறை கூட பகவானின் பெயரை 
நாரதர் உச்சரிக்க வில்லை...
ஸ்ரீமன் நாராயணன் நாரதரை பார்த்து புன்முறுவல் செய்தார்..
" நீ தேவலோக சுக வாசி.. உனக்கு வேறு எதுவும் வேலைகளோ 
கஷ்டங்களோ இல்லை.. ஆனால் செந்தில் கே நடேசனை பார்.. 
அவன் பூலோக வாசி..குடும்பத்திற்கு சம்பாதிக்க வேண்டும், 
கடன் காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டும், 
எதிர்காலத்திற்கு சேமிக்க வேண்டும், மேனேஜருக்கு பயந்தாவது வேலை 
செய்ய வேண்டும், பேஸ் புக்கில் மற்றவர்களின் பதிவை படித்து 
லைக் கமென்ட் போட வேண்டும்.. 
இவன் புதிது புதிதாய் ஸ்டேடஸ் யோசிக்க வேண்டும்... இத்தனையும் செய்து கொண்டு 
ஒரு நாளைக்கு என்னை இரண்டு முறை நினைக்கிறான் என்றால் 
அவன் தானே சிறந்த பக்தன்..??"
நாரதரும் ஒப்புக்கொண்டார்...

இந்த கதையை படித்தவர்கள், கேட்டவர்கள், லைக் போட்டவர்கள், 
கமென்ட் போட்டவர்கள் அனைவருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் அருள் கிட்டுவதாக.... 
நாராயண... நாராயண...

சிலைகள்

மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் என்பது அவர்களை கெளரவப்படுத்தவும்,
நினைவு கூறவும் மட்டுமே என்ற நிலை மாறி இப்போதைய காலங்களில் 
அவர்களை வைத்து ஜாதி- மத-அரசியல் கலவரங்களை தூண்டுவதற்கு 
என்று ஆகிவிட்டது... 


அந்த தலைவர்களின் ஆன்மா கூட இது போன்ற விஷயங்களை அனுமதிக்காது. 
எனவே அரசு இது போன்ற சிலை கலாச்சாரத்திற்கு தடை செய்து அவர்களை 
கவுரவப்படுத்த தபால் தலைகளை வெளியிடலாம்...

இதன் மூலம் சிலை அமைக்கும் செலவு, அதனை பாதுகாக்கும் செலவு, அதன் மூலம் ஏற்படும் கலவர துப்பாக்கிசூட்டிற்கு நஷ்ட்ட ஈடு கொடுக்கும் செலவு எல்லாம் அரசுக்கு மிச்சம்..

அதே நேரம் அப்படி அரசு செய்யுமாயின்... 
அஞ்சல் துறை எங்கள் தலைவரின் முகத்தில் கருப்பு மையில் அச்சிட்டு 
அவமதித்துவிட்டது என்று மற்றொரு கலவரத்திற்கு காரணம் தேடாமல் 
இருப்பார்கள் என்று நம்புவோமாக...

முதலில் நாம்..

மகன் தந்தைக்கு செய்யும் நன்றி "இப்படி ஒரு பிள்ளையை பெற 
இவனது தகப்பன் என்ன பேறு செய்தானோ.. "என்று சொல்ல வேண்டுமாம்..

இந்த குறளை மட்டும் படித்த தந்தைமார்கள் பின்வரும் 
அர்த்தமுடைய குறளை படிக்க தவறி விடுகின்றனர்...

"தந்தை மகனுக்கு செய்யும் உதவி உலகத்திற்கு முன்மாதிரி விளங்குவது..."

### நல்ல தந்தையாக முயற்ச்சிப்போம்.... 
அவர்கள் நமக்கு நிச்சயம் நல்ல பிள்ளைகளாவார்கள்..!!!

இரு அவதாரம்

‎""என் மகன் என் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்... என்னுடிய மருமகன் என் மகள் பேச்சை மட்டுமே கேட்க வேண்டும்."" - தாய்/மாமியார் அவதார கொள்கை.

"என்னுடைய கணவன் என் பேச்சை மட்டும் கேட்கவேண்டும்.. என்னுடைய தம்பி/அண்ணன் என் அம்மாவின் பேச்சை மட்டும் கேட்கவேண்டும்.." - மனைவி / சகோதரி அவதார கொள்கை.

## பெண்களின் இருவேறு அவதாரங்களின் இந்த மனநிலையே குடும்பத்தில் மாமியார் மருமகள் பிரச்சினை வளரவும், தனி குடித்தனம்- முதியோர் இல்லங்கள் பெருகவும் காரணம்..

மாமியார் வென்றால் தனி குடித்தனம்.. மருமகள் வென்றால் முதியோர் இல்லம்.. இரண்டு போரையும் சமன் செய்ய உலகில் யாராலுமே கண்டு பிடிக்க இயலாத ஒரு வழிமுறை தேடி தோற்று போய்.."ங்கே..." என்று விழிப்பது மட்டுமே ஆண்களின் அவல நிலை...

யாருக்கும் வெட்கமில்லை

கூரையை சரிக்க முயலும் தூண்கள்...

மத்திய அரசு முதல் மாநில அரசு வரை முதல் குடிமகன் முதல் கடைசி மனிதன் வரை, படித்தவர் முதல் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காதவர் வரை, பத்து ரூபாய் திருடியவர் முதல் ஒருலட்சத்து எழுபத்தாராயிரம் கோடி ரூபாய் திருடியவர் வரை எல்லோரையும் கேள்வி கேட்கும் அதிகாரம் மிக்க அமைப்பு நீதி துறை மட்டுமே... சில பல விஷயங்களில் அந்த நீதி துறையை சேர்ந்தவர்களும் விலை போனாலும் கூட இன்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை தக்க வைத்திருப்பது நீதி துறை மட்டுமே..

இத்தகைய நீதி துறையும் உயர்ந்த நாற்காலிகளில் அமர்ந்து அரசையோ மக்களையோ கேள்வி கேட்க வேண்டுமானால் அவர்கள் நிச்சயம் சட்ட வல்லுனர்களாக மட்டுமே இருக்க வேண்டும். ஒரு மருத்துவ தொழில் செய்பவரோ- பொறியாளர் தொழில் செய்பவரோ , இன்னும் படித்து/ படிக்காமல் ஏனைய தொழில் செய்பவரோ இந்த பதவிக்கு வந்து விட முடியாது.. இந்த நாற்காலியை அலங்கரிக்க கூடிய தகுதி உடையவர் நிச்சயம் சட்டக்கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 
இன்றைய இந்திய மக்களின் நம்பிக்கை நீதியரசர்கள் அனைவருமே நேற்றைய சட்டக்கல்லூரி மாணவர்கள்... இன்றைய சட்டக்கல்லூரி மாணவர்கள் நாளைய நீதி அரசர்கள்.. நாளைய இந்தியாவின் அதிகாரிகள் நேர்மையாக பணி செய்கின்றனரா, அரசு முறையாக செயல் படுகிறதா, மக்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழ்கின்றார்களா என்பதை கண்காணிக்கவும் இவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு குந்தகம் ஏற்பட்டால் தலையில் குட்டி கேள்வி கேட்கவும் வல்ல இன்றைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறார்கள்... அவர்களின் கோரிக்கையில் ஒன்று "இலவச மடி கணினி " வழங்காததை கண்டித்து...
ஓட்டு போடுவதுடன் நம் கடமை முடிந்தது.. கிடைத்த ஆயிரம் ஐநூறு ரூபாய்கள் நமக்கு லாபம் என்ற எண்ணம் கொண்ட பாமர மக்கள் இலவசம் கேட்டு போராடினார்கள்.. அவர்களை பற்றி நாம் வருத்தப்படவேண்டுமே தவிர கோபம் கொள்ள முடியாது.. ஏனென்றால் கல்வியை- வேலை வாய்ப்பை- விழிப்புணர்ச்சியை உருவாக்க வேண்டிய அரசாங்கங்கள் L அவர்களை இலவசத்திற்கு ஏங்கி காத்திருக்கும் ஏமாளி கூட்டமாய் மாற்றி வைத்திருக்கிறது..
நம் கோபம் அரசாங்கத்தின் மீது தான் திரும்ப வேண்டும்..

ஆனால் படித்த விபரம் புரிந்த நாளைய இந்தியாவை வழிநடத்த போகிற சட்ட கல்லூரி மாணவர்கள் இலவசம் கேட்டு போராடுகிறார்கள் என்றால்.. இவர்கள் தான் நாளை இந்தியாவின் நீதியை நிலை நாட்டி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க போகிறார்களா???
இப்படி ஒரு போராட்டம் நடத்த உங்களுக்கு வெட்கமாக இல்லை????

என்னுடைய நண்பர்கள் பட்டியலில் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள்.. சட்டக்கல்லூரி மாணவர்கள் இருக்கலாம்... உங்களை காயப்படுத்தும் நோக்கம் இல்லை... "யு டூ ப்ரூட்டஸ்..." என்ற சேக்ஸ்பியரின் பிரசித்தி பெற்ற வசனம்.. நம்பிக்கை துரோகி ஆகி விட்டாயே .. என்ற ஆதங்கம்... நீங்கள் இந்த நாட்டை பாதுகாப்பீர்கள்... நேர்வழியில் முன்னேற்றி செல்வீர்கள் என்ற நம்பிக்கை பொய்த்து போய் விடுமோ என்ற அச்சத்தில் இருக்கும் கோடானு கோடி இந்தியர்களில் ஒருவனின் கேள்வி... என்ன பதில் சொல்ல போகிறீர்கள்???

ஜெ.ஜெயலலிதா- ஒரு உளவியல் கண்ணோட்டம்.

முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களை அடிக்கடி மாற்றுவதற்கும், கிளை, வட்ட, மாவட்ட செயலாளர்களை மாற்றுவதற்கும், அரசு தலைமை அதிகாரிகளை மாற்றுவதற்கும் அவருக்கு ஏற்பட்டிருக்கும
 ் ஒரு வித உளவியல் பிரச்சினைகளே காரணம்.. தனக்கென குடும்பம் வாரிசு என்ற பாதுகாப்பில்லாமல் தனித்து வாழும் ஒரு பெண் என்ற முறையில் தனக்கு யாரும் உணர்வுப்பூர்வமான ஆதரவாக இல்லை என்பதாலும், தம்மை சுற்றி இருப்பவர்கள் ஆதாயம் வேண்டியே தமக்கு முன்பாக தரை வரை வளைகிறார்கள் என்பது நன்றாக தெரிந்தாதாலும், தமது நம்பிக்கைக்கு பாத்திரமாய் நினைத்தவர்கள் எல்லாம் தம் முதுகுக்கு பின்னால் சமயம் பார்த்து குத்த காத்திருந்தது தெரிய வந்ததாலும் தமக்கிருக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி அனைவரையும் கட்டுக்குள் வைக்க முயல்கிறார்.. ஒரு கூண்டிற்குள் அடைக்கப்பட்ட எலிக்கு உணவிட முனைந்தால் கூட அந்த உணவுதரும் கரண்டியை தாக்க முற்படுவது போலத்தான் இன்றைய ஜெயலலிதாவின் நிலை.. அவர் மீதான கீழ்த்தரமான விமர்சனங்களைக்காட்டிலும் அவருக்கு தெளிவான உளவியல் ஆலோசனையே இந்த நாட்டிற்கு ஒரு நல்ல முதல்வராக அடுத்த நான்கு ஆண்டுகளுக்காவது அவர் செயல் பட வழிவகுக்கும்.. # பூனைக்கு மணி கட்டுவது யார்..???

எப்படிப்பட்ட பெற்றோர் நீங்கள்..??

கஷ்டம் தெரியாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றன,,,

தற்போது இருக்கும் பெற்றோர்கள் ஓரளவு நன்கு சம்பாதிப்பதால் வசதியின் காரணமாக நாம் பட்ட கஷ்டங்கள் நம்முடைய பிள்ளை பட கூடாது என்ற எண்ணத்தாலும் தங்கள் பிள்ளைகளின் மீது வறுமையின் நிழல் கூட படிந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.. கேட்டதெல்லாம் கிடைத்து விடுவதால் இவர்கள் இளம் வயதில் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. இப்படி வளரும் பிள்ளைகளுக்கு மன உறுதி என்பது அறவே இருப்பதில்லை.. இதனால் பின்னாளில்  இவர்கள் வாழ்க்கையை நேரடியாய் எதிர்கொள்ளும் தருணங்களில் ஒரு சிறிய கஷ்டம் வந்தால் கூட தாங்க முடியாத அளவு மன உளைச்சலுக்கு  ஆளாக்கி  அது தற்கொலை முடிவு வரை சென்று விடுகிறார்கள்..
உங்கள் குழந்தைகளை ராஜா வீட்டு குழந்தை போல் வளர்க்க ஆசைப்படுவது தவறில்லை.. அதற்காக அவர்களை கோழைகளாய் வளர்க்க போகிறீர்களா?/  நீங்கள் கஷ்டப்பட்டு தான் உங்கள் குழந்தைகளுக்கு செய்கிறீர்கள்.. ஆனால் அந்த கஷ்டம் எப்படிப்பட்டது.. அதனை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு தெரிவியுங்கள்.. உங்களை உணர்ந்து வளரும் குழந்தைகள் மட்டுமே உங்கள் கனவுகளை நிறைவேற்றி தன்னுடைய கனவையும் நிறைவேற்றிக்கொள்ளும்.. 
உங்களை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது உங்கள் கடமை.. உங்கள்குழந்தைகளிடம் ஒளிவு மறைவு இல்லாமல் நட்பாயிருங்கள்.. நாளை அவர்கள் சாதிப்பதை பார்த்து பெருமையடையலாம்.. சாவதை பார்த்து அழவேண்டியதில்லை..!!!

ஞாயிறு, 8 மார்ச், 2015

ஓநாய் வர்க்கம்
















பொதுமக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு
வங்கிகள் தனியார் மயமாக்குவதை
கண்டித்து வங்கி ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்தம்..


#சில நாட்களுக்கு முன்பு சென்னையின் அடுத்தடுத்த பகுதிகளில் நிகழ்ந்த
வங்கிக் கொள்ளைகள் அதனை தொடர்ந்த என்கவுண்டர் கொலைகள்
தமிழ்நாட்டை உலுக்கியது நினைவில் இருக்கலாம்..
அதனை தொடர்ந்த பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து வங்கிகளிலும் 
கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று 
காவல்துறையினர் அறிவுறுத்தினார்கள்...

ஆனால் வங்கி நிர்வாகங்கள் அதனை செயல் படுத்த அதிக ஆர்வம் 
காட்டவில்லை..
ஒருவேளை அந்த அறிவிப்பை வங்கிகள் கடை பிடித்திருக்குமானால்


என்னென்ன நன்மைகள் விளையும்..??


1 . தங்கள் முதலீடு செய்யும் பணம் வங்கிகளில் பாதுகாப்பாய்தான் இருக்கும்
என்ற பொதுமக்களின் நம்பிக்கை கூடி இருக்கும்..


2 . அப்படி ஒருவேளை அதற்கு பிறகு ஏதேனும் கொள்ளை முயற்சி
நடந்திருப்பின் அது முறியடிக்கப்படவோ, அப்படி வெற்றி பெற்றிருப்பின்
அது எளிதில் கண்டுபிடிக்கப்படவோ உதவி இருக்கும்.


3 .அப்படி ஏதேனும் கொள்ளை முயற்சி நடக்கும் பொது கொள்ளையர்கள்
பாதுக்காப்புக்காய் ஏதேனும் கொலை செய்யக்கூட வாய்ப்பு இருக்கிறது..
அது தவிர்க்கப்படும்..


4 . அப்படி கொள்ளை முயற்சி வெற்றி பெற்று பிறகு அதனை 
கண்டுபிடிக்கப்போய் அதன் மூலம் நிகழும் என்கவுண்டர் கொலைகளுக்கு
அவசியமற்று போயிருக்கும்.


5 . கண்காணிப்பு வளையத்தில் இருப்பதால் ஊழியர்கள் ஒழுங்காக
வேலை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்..


6 . பொதுமக்களின் நம்பிக்கை அந்த வங்கியின் வியாபாரம் பெருக வழி
செய்திருக்கும்..


ஆனால் எந்த சம்மேளனமும் இதனை செய்ய சொல்லி எந்த வங்கி

நிர்வாகத்தையும் வற்புறுத்த வில்லை.. ஏனென்றால் இந்த காமிரா

பொருத்தப்படவில்லை என்றால் அவர்களின் பஞ்சப்படியோ-

பயனப்படியோ- அகவிலை- புறவிலை படியோ போனஸ்..

இத்யாதி சலுகைகளோ பறிக்கப்பட போவதில்லை..



மாறாக வங்கிகள் தனியார் மயமானால் இவர்களின் வேலை திறன்

சோதிக்கப்பட்டு அது கட்டாயப்படுத்தப்படும்.. அப்படி வேலை செய்யாமல்

சம்பளம் பெரும் ஆவல் உள்ளோர் உடனடியாய் துரத்தப்படுவர்..

இப்போது தான் இவர்களுக்கு பொதுமக்கள் மீது ஆர்வம் கொப்பளிக்கிறது...

பொதுமக்கள் பணத்திற்கு உத்திரவாதமோ- பாதுகாப்போ இல்லாமல்

போய்விடுமென துடிக்கிறார்கள்..


அதற்காக வங்கிகளை தனியார் மயம்மாக்குவது சரிதான் என்று

சொல்லவில்லை.. ஆனால் இந்த சம்மேளனமும் அந்த

தனியார் வங்கிகளின் சுயநலத்தொடுதானே இருக்கிறது??

வங்கிகளின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பணத்தின் மீதான

உத்திரவாதமளிக்க வங்கிகள் உடனடியாய் கண்காணிப்பு காமிராக்கள்

பொருத்த வேண்டுமென ஏன் எந்த சம்மேளனமும் மூச்சு கூட விட வில்லை..

உங்களுக்கு லாபம் என்றால் பொது மக்கள் எல்லாம் வேலை வெட்டி

இல்லாதவர்கள்.. அவர்கள் வீடு பற்றி எறிந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள்..

அதே உங்களுக்கு ஒரு ஆப்பு செதுக்கி கொண்டு யாராவது வருகிறார்கள்

என்றால் உடனே பொதுமக்கள் என்ற போர்வைக்குள் வந்து விடுவீர்கள்..
ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய்களை ஒழித்தாலே

பொதுமக்கள் நிம்மதியாய் இருப்பார்கள்..!!!


இவர்கள் மட்டுமல்ல.. அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும்

இதே ஓநாய் வர்க்கம் தான்.. அவர்களின் வருமானத்திற்கு

ஒத்த ரூபாய்க்கு கூட ஆபத்து இல்லாத வரை அவர்கள் எல்லாம்

பொதுமக்கள் ஜாதி இல்லை..!!!