கஷ்டம் தெரியாமல் வளர்க்கப்படும் குழந்தைகள் தான் அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றன,,,
தற்போது இருக்கும் பெற்றோர்கள் ஓரளவு நன்கு சம்பாதிப்பதால் வசதியின் காரணமாக நாம் பட்ட கஷ்டங்கள் நம்முடைய பிள்ளை பட கூடாது என்ற எண்ணத்தாலும் தங்கள் பிள்ளைகளின் மீது வறுமையின் நிழல் கூட படிந்து விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.. கேட்டதெல்லாம் கிடைத்து விடுவதால் இவர்கள் இளம் வயதில் கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்கிறார்கள்.. இப்படி வளரும் பிள்ளைகளுக்கு மன உறுதி என்பது அறவே இருப்பதில்லை.. இதனால் பின்னாளில் இவர்கள் வாழ்க்கையை நேரடியாய் எதிர்கொள்ளும் தருணங்களில் ஒரு சிறிய கஷ்டம் வந்தால் கூட தாங்க முடியாத அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கி அது தற்கொலை முடிவு வரை சென்று விடுகிறார்கள்..
உங்கள் குழந்தைகளை ராஜா வீட்டு குழந்தை போல் வளர்க்க ஆசைப்படுவது தவறில்லை.. அதற்காக அவர்களை கோழைகளாய் வளர்க்க போகிறீர்களா?/ நீங்கள் கஷ்டப்பட்டு தான் உங்கள் குழந்தைகளுக்கு செய்கிறீர்கள்.. ஆனால் அந்த கஷ்டம் எப்படிப்பட்டது.. அதனை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதையும் உங்கள் குழந்தைகளுக்கு தெரிவியுங்கள்.. உங்களை உணர்ந்து வளரும் குழந்தைகள் மட்டுமே உங்கள் கனவுகளை நிறைவேற்றி தன்னுடைய கனவையும் நிறைவேற்றிக்கொள்ளும்..
உங்களை அவர்களுக்கு உணர்த்த வேண்டியது உங்கள் கடமை.. உங்கள்குழந்தைகளிடம் ஒளிவு மறைவு இல்லாமல் நட்பாயிருங்கள்.. நாளை அவர்கள் சாதிப்பதை பார்த்து பெருமையடையலாம்.. சாவதை பார்த்து அழவேண்டியதில்லை..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக