சனி, 9 மே, 2015

சிறந்த பக்தன்

கோகுலாஷ்டமி ஸ்பெஷல் கதை...
நாரத முனி ஒரு முறை பகவான் ஸ்ரீமன் நாராயணனிடம் கேட்டார்...
"பிரபு.. தங்களின் பக்தர்களில் தங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் யார்..?"
"இதிலென்ன சந்தேகம்..?? 
என் பக்தன் செந்தில் கே நடேசன் தான் எனக்கு மிகவும் பிடித்தமானவன்.."
பகவான் தம்முடைய பெயரைத்தான் சொல்வார் என்று எதிர் பார்த்த
 நாரத முனிக்கு கோபம் வந்தது..

 "பிரபு.. இது அநியாயம்.. சதா சர்வகாலமும் நாராயணா நாராயணா என்று 
உங்கள் பெயரையே உச்சரிக்கும் என்னை தானே நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்...?"

நீ போய் செந்தில் கே நடேசன் என்ன செய்கிறான் என்று பார்த்து வா.. என 
நாரதரை அனுப்பினார் பகவான்..
அப்படி என்னதான் செய்கிறான் செந்தில் கே நடேசன்..?? 
ஆவல் மேலிட நாரதமுனி தொடர்ந்து இரண்டு நாட்கள் அவனை கவனித்தார்.. 
பிறகு ஸ்ரீமன் நாராயணனிடம் சென்றார்..
"பிரபு.. அவன் காலையில் ஒரு முறையும்.. இரவு உறங்க போகும் முன் 
ஒரு முறையும் மட்டுமே தங்கள் பெயரை உச்சரித்தான்.. 
மற்ற நேரங்களில் அவன் தங்களை பற்றி நினைக்க கூட இல்லை... 
அவனை எப்படி சிறந்த பக்தன் என்று சொல்கிறீர்கள்..?"
சில நாட்கள் போயிற்று..
ஒரு நாள் நாரதரை அழைத்த பகவான்.. ஒரு சிறிய கிண்ணத்தில் தழும்பும் அளவு 
எண்ணெய் நிரப்பி இதனை எடுத்துக்கொண்டு நீ இந்த உலகை 
இரண்டு நாள் வலம் வர வேண்டும் .. ஆனால் ஒரு துளி கூட கீழே சிந்த கூடாது..." என்றார்..
"இதென்ன பிரமாதம்.. இதோ போகிறேன்.." என்ற படியே 
நாரதர் சென்று இரண்டு நாட்கள் உலகை வலம் வந்து 
ஒரு துளி கூட கீழே சிந்தாமல் நாராயணனிடம் வந்தார்...
அற்புதம் என்று வாழ்த்திய ஸ்ரீமன் நாராயணன் நாரதரிடம் கேட்டார்...
"இந்த இரண்டு நாளில் நீ என் பெயரை எத்தனை முறை உச்சரித்தாய்...?/"
யோசித்த நாரதருக்கு உரைத்தது.. எண்ணெய் கீழே சிந்திவிட கூடாது என்ற 
கவனத்துடனேயே இருந்ததால் ஒரே ஒரு முறை கூட பகவானின் பெயரை 
நாரதர் உச்சரிக்க வில்லை...
ஸ்ரீமன் நாராயணன் நாரதரை பார்த்து புன்முறுவல் செய்தார்..
" நீ தேவலோக சுக வாசி.. உனக்கு வேறு எதுவும் வேலைகளோ 
கஷ்டங்களோ இல்லை.. ஆனால் செந்தில் கே நடேசனை பார்.. 
அவன் பூலோக வாசி..குடும்பத்திற்கு சம்பாதிக்க வேண்டும், 
கடன் காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டும், 
எதிர்காலத்திற்கு சேமிக்க வேண்டும், மேனேஜருக்கு பயந்தாவது வேலை 
செய்ய வேண்டும், பேஸ் புக்கில் மற்றவர்களின் பதிவை படித்து 
லைக் கமென்ட் போட வேண்டும்.. 
இவன் புதிது புதிதாய் ஸ்டேடஸ் யோசிக்க வேண்டும்... இத்தனையும் செய்து கொண்டு 
ஒரு நாளைக்கு என்னை இரண்டு முறை நினைக்கிறான் என்றால் 
அவன் தானே சிறந்த பக்தன்..??"
நாரதரும் ஒப்புக்கொண்டார்...

இந்த கதையை படித்தவர்கள், கேட்டவர்கள், லைக் போட்டவர்கள், 
கமென்ட் போட்டவர்கள் அனைவருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் அருள் கிட்டுவதாக.... 
நாராயண... நாராயண...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக