பொதுமக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்தம்.. #சில நாட்களுக்கு முன்பு சென்னையின் அடுத்தடுத்த பகுதிகளில் நிகழ்ந்த வங்கிக் கொள்ளைகள் அதனை தொடர்ந்த என்கவுண்டர் கொலைகள் தமிழ்நாட்டை உலுக்கியது நினைவில் இருக்கலாம்.. அதனை தொடர்ந்த பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து வங்கிகளிலும்
கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று
காவல்துறையினர் அறிவுறுத்தினார்கள்...
ஆனால் வங்கி நிர்வாகங்கள் அதனை செயல் படுத்த அதிக ஆர்வம்
காட்டவில்லை..
ஒருவேளை அந்த அறிவிப்பை வங்கிகள் கடை பிடித்திருக்குமானால் என்னென்ன நன்மைகள் விளையும்..?? 1 . தங்கள் முதலீடு செய்யும் பணம் வங்கிகளில் பாதுகாப்பாய்தான் இருக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கை கூடி இருக்கும்.. 2 . அப்படி ஒருவேளை அதற்கு பிறகு ஏதேனும் கொள்ளை முயற்சி நடந்திருப்பின் அது முறியடிக்கப்படவோ, அப்படி வெற்றி பெற்றிருப்பின் அது எளிதில் கண்டுபிடிக்கப்படவோ உதவி இருக்கும். 3 .அப்படி ஏதேனும் கொள்ளை முயற்சி நடக்கும் பொது கொள்ளையர்கள் பாதுக்காப்புக்காய் ஏதேனும் கொலை செய்யக்கூட வாய்ப்பு இருக்கிறது.. அது தவிர்க்கப்படும்.. 4 . அப்படி கொள்ளை முயற்சி வெற்றி பெற்று பிறகு அதனை
கண்டுபிடிக்கப்போய் அதன் மூலம் நிகழும் என்கவுண்டர் கொலைகளுக்கு
அவசியமற்று போயிருக்கும். 5 . கண்காணிப்பு வளையத்தில் இருப்பதால் ஊழியர்கள் ஒழுங்காக வேலை செய்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும்.. 6 . பொதுமக்களின் நம்பிக்கை அந்த வங்கியின் வியாபாரம் பெருக வழி செய்திருக்கும்.. ஆனால் எந்த சம்மேளனமும் இதனை செய்ய சொல்லி எந்த வங்கி நிர்வாகத்தையும் வற்புறுத்த வில்லை.. ஏனென்றால் இந்த காமிரா பொருத்தப்படவில்லை என்றால் அவர்களின் பஞ்சப்படியோ- பயனப்படியோ- அகவிலை- புறவிலை படியோ போனஸ்.. இத்யாதி சலுகைகளோ பறிக்கப்பட போவதில்லை.. மாறாக வங்கிகள் தனியார் மயமானால் இவர்களின் வேலை திறன் சோதிக்கப்பட்டு அது கட்டாயப்படுத்தப்படும்.. அப்படி வேலை செய்யாமல் சம்பளம் பெரும் ஆவல் உள்ளோர் உடனடியாய் துரத்தப்படுவர்.. இப்போது தான் இவர்களுக்கு பொதுமக்கள் மீது ஆர்வம் கொப்பளிக்கிறது... பொதுமக்கள் பணத்திற்கு உத்திரவாதமோ- பாதுகாப்போ இல்லாமல் போய்விடுமென துடிக்கிறார்கள்.. அதற்காக வங்கிகளை தனியார் மயம்மாக்குவது சரிதான் என்று சொல்லவில்லை.. ஆனால் இந்த சம்மேளனமும் அந்த தனியார் வங்கிகளின் சுயநலத்தொடுதானே இருக்கிறது?? வங்கிகளின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பணத்தின் மீதான உத்திரவாதமளிக்க வங்கிகள் உடனடியாய் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டுமென ஏன் எந்த சம்மேளனமும் மூச்சு கூட விட வில்லை.. உங்களுக்கு லாபம் என்றால் பொது மக்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்கள்.. அவர்கள் வீடு பற்றி எறிந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள்.. அதே உங்களுக்கு ஒரு ஆப்பு செதுக்கி கொண்டு யாராவது வருகிறார்கள் என்றால் உடனே பொதுமக்கள் என்ற போர்வைக்குள் வந்து விடுவீர்கள்..
ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய்களை ஒழித்தாலே
பொதுமக்கள் நிம்மதியாய் இருப்பார்கள்..!!! இவர்கள் மட்டுமல்ல.. அனைத்து அரசு ஊழியர் சங்கங்களும் இதே ஓநாய் வர்க்கம் தான்.. அவர்களின் வருமானத்திற்கு ஒத்த ரூபாய்க்கு கூட ஆபத்து இல்லாத வரை அவர்கள் எல்லாம் பொதுமக்கள் ஜாதி இல்லை..!!! |
சொல்லடி சிவ சக்தி... என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்...! வல்லமை தாராயோ... இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே...!!!
ஞாயிறு, 8 மார்ச், 2015
ஓநாய் வர்க்கம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக