ஒரு
மனநல மருத்துவரின் பேட்டியை எதார்த்தமாக பார்க்க நேர்ந்தது.... நியாயமாக
நாம் அதுமாதிரி பேட்டிகளில் எல்லாம் ஈடுபாடு காட்டுவதில்லை என்றாலும்...
அந்த மருத்துவரின் அழகு என்னை சேனல் மாற்ற விடாமல் நிறுத்தியது...
என்பதுதான் உண்மை...
ஆனால்.... அந்த பேட்டியின் ஊடாக அவர் சொன்ன ஒரு விஷயம் நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. .. தன்னுடைய தந்தையின் செல்போனில் எட்டுவயது குழந்தை ஒன்று ப்ளூ வேல் கேம் டவுன்லோட் செய்து வைத்திருப்பதை பார்த்த அவரது தாயார்.. கவுன்சலிங் கொடுக்க சொல்லி இந்த மருத்துவரிடம் கூட்டி வந்திருக்கிறார்...
முதலில்.... அந்த குழந்தை விபரம் (விபரீதம்)புரியாமல் செய்திருக்கும் என்று நினைத்த மருத்துவர் மெதுவாக பேச்சுக்கொடுக்க... கிடைத்த விஷயம் அப்படி ஒரு அதிர்ச்சி தர கூடியது...
குழந்தையின் தாயும் தந்தையும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ள... தாய் மீது கூடுதல் ஒட்டுதலுடன் இருக்கும் அந்த குழந்தை தந்தையை பழிவாங்க ப்ளூ வேல் கேமை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறது.... என்ன முடிவு என்பது தெரிந்தே....
இத்தனைக்கும் அந்த குழந்தையை அவர் திட்டியதோ- அடித்ததோ இல்லையாம்.... குழந்தைக்கு அவர் எப்போதுமே நல்ல தந்தையாகத்தான் இருந்திருக்கிறார்.... ஆனாலும்... அந்த குழந்தையின் சிந்தனை தாய்க்கு ஆதரவாக.... தந்தைக்கு தற்கொலைக்கு வழிகாட்டும் காரியத்தை செய்ய தூண்டி இருக்கிறது...
பெரும்பாலான அறிஞர்களும், ஆலோசகர்களும் சொல்லும் விஷயம்.... குழந்தைகளுக்கு முன்பாக சண்டை போடாதீர்கள்.... இது நல்ல விஷயம்தான் என்றாலும்... இதனை செயல்படுத்துவதில் இருக்கும் சிக்கல் நிறைய....
குழந்தைகள் தாயுடன் செலவழிக்கும் நேரம் தான் அதிகம் என்பதால்.. இயல்பில் தந்தையை விட தாயின் மீதே கூடுதல் ஈர்ப்புடன் இருக்கும்... நிறைய குழந்தைகள் தந்தை வாங்கி வரும் சாக்லேட்-சிப்ஸ் போன்றவற்றிற்காக மட்டுமே தந்தையை தேடும் நிலையும் உள்ளது... (இதில் தந்தைக்கும் பங்குண்டு... அதை சாவகாசமாக வேறொரு கட்டுரையில் கூடுதல் விரிவாக பார்க்கலாம் )
இப்படியான நிலையில் குழந்தைகள் தந்தையை விட்டு நிரந்தரமாக விலகாமல் இருக்கவும், ஒட்டுதல் ஏற்படுத்தவும் தாய்மார்கள் முனைய வேண்டும்.... குடும்பத்திற்கென தந்தை செய்யும் தியாகங்கள்.. அனுபவிக்கும் கஷ்டங்கள்... வருமானம் ஈட்ட படும் துயரங்கள்.. ஆகியவற்றை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்...
என்ன பிரச்சினை இருந்தாலும் கூடுமானவரை குழந்தைகளை வைத்துக்கொண்டு கணவனிடம் குறுக்கு விசாரணை செய்வதையோ- உறவுகளை பற்றி விமர்சிப்பதையோ... குறை கூறுவதையோ தவிர்க்க வேண்டும்... இதை பின்பற்றினாலே தொண்ணூறு சதவிகிதம்கு ழந்தைகளுக்கு முன்னான சண்டைகளை தவிர்த்து விடலாம்...
இதை கடைபிடித்தாலே நீங்கள் ஓரளவு நல்ல வளர்ப்பை கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம்...
ஆனால்.. இவைகளை நீங்கள் கடை பிடிக்க வேண்டுமானால் முதலில் நீங்கள் உங்கள் கணவனை புரிந்துகொள்ள வேண்டும்...
இல்லை என்றால்.... உங்கள் குழந்தைகளே உங்களை விதவை ஆக்கும் விபரீதம் நிகழலாம்...
( நான் சம்பாதிக்கிறேன்.... விதவை வேஷம் எல்லாம் எனக்கெதற்கு என்பவர்கள் இதை படித்ததையே மறந்து விடலாம்... இது உங்களுக்கான கட்டுரை அல்ல )
ஆனால்.... அந்த பேட்டியின் ஊடாக அவர் சொன்ன ஒரு விஷயம் நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது..