வியாழன், 29 ஜூன், 2017

இயந்திரக் கறி

இங்கன மாட்டுக்கறி சாப்பிட கூடாதுன்னு சட்டம் போட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதுல 50% க்கு மேல நிஜமாவே மாட்டுக்கறி சமைக்காதவங்க / சாப்பிடாதவிங்கதான்....
Image may contain: one or more people
அதே நேரம் , மாட்டுமேல பாவப்பட்டோ, அது லட்சுமின்னோ எல்லாம் சாப்பிடாம இருக்கிறது இல்ல.... பாட்ட-முப்பாட்டன் காலம் தொட்டே அவங்க வீட்ல சமைக்கல.... அதனால அவங்க அத சாப்பிடல...


பாட்ட-முப்பாட்டன் காலத்துல அவங்க ஏன் மாட்டுக்கறி சமைக்கலன்னா.... மாடுங்க அவங்க குடும்பத்துல ஒருத்தரா இருந்துதுங்க.... வண்டி இழுக்க, ஏர் உழுவ... கமலை இறைக்க... பிணையல் அடிக்க.... பால் கொடுக்க... இயற்கை உரம் கொடுக்க... பிள்ளையார் சாமி செய்ய.. வாசல் தெளிக்க... இப்படி நிறைய நிறைய உபயோகங்கள் மாட்டை வைத்து இருந்ததால்.... அந்த மாடுங்களும் குடும்பத்துல ஒருத்தர்.... நம்ம புள்ளைய நாம வெட்டி சாப்பிட முடியுமா... அதனால அவங்க காலத்துல அவங்க சமைக்கல... சாப்பிடல.... அம்புட்டுதேன்...

இப்போ இருக்கவங்களுக்கு போக்குவரத்துக்கு டீசல்/பெட்ரோல்ல ஓடுற வாகனங்கள் இருக்கு.. என்ன ரசாயனத்த கலந்தாலும் பால் பாக்கெட்டுல கிடைக்குது.... வாசல் தெளிக்க வேண்டிய அவசியம் இல்லாம அபார்ட்மென்ட் வாழ்க்கையாயிடுச்சு... வயல்ல உழுது பயிர் வச்சு வந்த காசுல படிச்சிருந்தாலும் கூட.... இவங்க உழுவுற, பயிர் வைக்கிற வேலைக்கு போகல.... அப்படியே போனாலும் அதுக்கு மாடு அவசியமில்லாம ட்ராக்டர, பாம்பு செட்டுன்னு எல்லாமே இயந்திரமயமா போச்சு..... இவிங்களுக்கு மாட்டோட அருமையும் தெரியாது...அருகாமையும் இல்ல.... சோ.... இவிங்க குடும்பங்கள்ல அந்த மாடுங்க ஒரு ஆளு கிடையாது.... அதனால மாட்டுக்கறி சாப்பிடறது இவிங்கள பொறுத்தவரை பெரிய பாவமெல்லாம் கிடையாது...


அப்படி இருந்தாலும்.... இவிங்க மாட்டுக்கறி சாப்பிட மாட்டாய்ங்க... காரணம்.... மேல சொன்னதுதான்... எங்க வீட்டுல அந்த காலத்துல இருந்தே நாங்க மாட்டுக்கறி சமைக்கறது இல்ல... அதனால சாப்பிட்றது இல்ல.... அவ்வளவுதான்...

நீதான் சாப்பிடமாட்டியே... அப்புறம் எவன் என்ன சட்டம் போட்டா உனக்கென்ன.... ஏன் இப்படி தம் கட்டிக்கிட்டு எதிர்க்கிற...??

ஒ.... அதுவா.... நாங்க வார்டன்னா அடிப்போம் குரூப்பு..... ஆட்சில இருக்கவன் மோடி.... அந்தாள் கவுருமென்டு என்ன சொன்னாலும் எதுக்கனும்.... அவ்வளவேதான்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக