வியாழன், 29 ஜூன், 2017

பறந்து விரிகிறது எதிர்மறை சிந்தனைகள்

போலீஸ்காரங்க சந்தேக கேஸ்ல புடிக்கிறாங்க...... வெப்பன்ஸ், கோட் வேர்ட், மேப் ன்னு சர்வதேச தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு யோசிக்கிறாங்க.... நாம என்னமோ...."அய்யோ.... போச்சு... போலீஸ்காரன் எல்லாத்தையும் புடுங்கிட்டு எதையாவது கேச போட்டு உள்ள தள்ளிடப்போறானுங்க...."ன்னு நினைக்கிற நேரத்துல..... வேறொருத்தர்கிட்டவிசாரிச்சுட்டு, அவங்க அப்பாவிங்கன்னு தெரிஞ்சதும் அவங்க கிட்ட இருந்து எடுத்த பணத்த கூட திரும்ப கொடுத்து அனுப்பிடறாங்க....
அந்த வயசுப்பொண்ணு தனியா லாரில ஏறி வருது.... அந்த டிரைவர்-கிளீனர் மூஞ்சியே சரி இல்ல.... "அடப்பாவமே.... இவனுங்க அந்த பொண்ண நாசம் பண்ண போறானுங்க"ன்னு நாம நினைக்கிற வேளையில... அந்த பொண்ண ரொம்ப பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டுட்டு போறார் அந்த லாரி டிரைவர்...
Image may contain: 1 person, beard
கடற்கரைல ஒரு பொண்ணு தனியா நிக்கிறத பார்த்துட்டு "இங்க என்னடி பண்ற.."ன்னு மிரட்டுற அந்த லேடி போலீஸ் இன்ஸ்பெக்டர பார்க்கவே கர்ண கொடூரமா இருக்கா.... "அய்யய்யோ.... இந்த பொண்ண புடிச்சு கொண்டுபோய் என்ன்ன பாடு படுத்த போறாளோ"ன்னு நாம நினைக்கும்போது.... பக்குவமா அட்வைஸ் பண்ணி ஒரு கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி பத்திரமா பஸ் ஏத்திவிட சொல்றாங்க அந்த இன்ஸ்பெக்டர்....

அந்த கான்ஸ்டபிள் என்னமோ பண்ணிடப்போறான்னு நாம நினைக்கும்போது.... ரொம்ப அன்பா விசாரிச்சு.... நீ தேடி வந்த ஆள இங்க தேடினியா.... அங்க தேடினியா..... அந்த இடத்துல போய் தேடு.... ரொம்ப இருட்டுற வரை நிக்காத.... கிடைக்கலன்னா பஸ் ஏறி ஊருக்கு போய்டு... செலவுக்கு காசு இருக்கான்னு கேட்டு நெகிழ வைக்கிறார் அந்த கான்ஸ்டபிள்....

இந்த "கயல்" படத்துல வர காட்சிகள் தான் நான் மேல குறிப்பிட்டது.... இதுல ஒரு பெரிய உளவியல் விஷயம் இருக்கு.... இந்த படத்துல எலா கட்சிகளுமே பாசிடிவ் விஷயங்களா இருக்கு.... ஆனா படம் பார்க்கிற ஒவ்வொருவருமே நெகடிவா ஏதாவது நடக்குமோன்னு பயந்துகிட்டும், எதிர்பார்த்துகிட்டும் இருக்கோம்....

இயல்பான மனிதர்களின் நற்குணங்கள் தான் அதுல சொல்லி இருக்க எல்லா விஷயமுமே.... இது ஒன்னும் பெரிய ஆச்சர்யமான விஷயமோ.... உலகத்துல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிற அதிசயமோ இல்ல.... ஆனா.... நாம ஏன் நெகடிவா ஏதாவது நடக்குமோன்னு எதிர்பாத்துகிட்டே இருக்கோம்....

ஏன்னா.... தினசரி தொலைக்காட்சி செய்திகள்.... சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள்... ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்ட சினிமாக்களின் தாக்கம் நம்ம மனசை எல்லாம் ஒரு நெகடிவ் திங்கிங் மெஷினா மாத்தி இருக்கு....

நம்ம யாரோட மனசுலயும் நேர்மை இல்லை.... சந்தோசம் இல்ல.... எதார்த்தம் இல்ல... எப்போதும் ஒரு பயம்.... ஒரு குறுக்குபுத்தி, கெட்ட சிந்தனை... எதிர்மறை எதிர்பார்ப்புகள்..... சபலம்.... இப்படி வேண்டாத குப்பைகளா நிறைஞ்சு கிடக்கு..... அதோட வெளிப்பாடுதான் நம்மளால எதையுமே நல்ல விதமா யோசிக்க முடியாம போகுது....

"இல்ல... நானெல்லாம் அப்படி இல்ல... "ன்னு உங்கள்ள யாராவது இங்க வாதம் பண்ணலாம்.... ஆனா.... அந்த வாதம் உண்மை இல்லைன்னு உங்க மனச்சாட்சி பிடரியில் அடிப்பதை உங்களால் தடுக்கவே முடியாது....

நல்ல விஷயங்களையும் பார்த்து வளர்ந்த நாமளே இப்படி மாறிட்டோமே..... நம்மள பார்த்து வளர்ற எதிர்கால சந்ததி எப்படி இருக்க போகுது....???

ஜஸ்ட் திங்க் பண்ணுங்க......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக