“
I am a member of a team, and I rely on the team, I defer to it and
sacrifice for it, because the team, not the individual, is the ultimate
champion.”
அமெரிக்காவின் பிரபல கால்பந்தாட்ட வீராங்கனை “மாரியல் மார்கரெட் மியா
ஹாம்ம் கார்சியாபர்ரா” (Mariel Margaret "Mia" Hamm-Garciaparra) உதிர்த்த,
உலகம் முழுக்க பிரபலமான வாசகம்தான் நாம் மேலே சொன்னது...
ஒரு விளையாட்டு வீராங்கனையாக அவர் இதை சொல்லி இருந்தாலும்... இது எங்கெல்லாம் பொருந்தும் என்ற யோசனை சாமான்யனுக்குள் எழுந்தது...
ஒரு விளையாட்டு குழுவில்.... ஒரு அலுவலக குழுவில்... ஒரு அரசியல் குழுவில்... என பல இடங்களுக்கும் பொருத்தமான வாசகம் இது... sacrifice என்ற ஆங்கில வார்த்தையை தியாகம் என்று தமிழ்படுத்துவதை காட்டிலும் அனுசரித்துபோதல், விட்டுக்கொடுத்தல் போன்ற தமிழாக்கமே பொருத்தமாக இருக்கும் என்பது சாமான்யன் கருத்து...
இந்த அனுசரித்தலின்/
விளையாட்டுகுழுவில், நிறுவன பணியாளர் குழுவில், அரசியல் குழுவில்.. என பல குழுக்களில் இருக்கும்போது “எங்கே நம்மை குழுவில் இருந்து நீக்கி விடுவார்களோ” என்ற பயமோ, கிடைக்கும் சம்பளமோ, கிடைக்கும் புகழோ, கிடைக்கும் பதவியோ... அப்படி ஒரு அனுசரிக்கும் மனநிலையை நம்முள் விதைக்கிறது...
குடும்பம் என்பதும் ஒரு குழுதான்... குடும்பத்தில் இருக்கும் கணவன்-மனைவி-மாமியார்-மாமனா
யாரோ சில-பலருடன் இணைந்து குழுவாக செயல்படும்போது தன்னைத்தானே சாக்ரிபைஸ் செய்துகொள்ள தயாராகும் இவர்களால் ஏன் தன் உறவினர்களுடன், தன் மனைவியுடன், தன் கணவருடன் சாக்ரிபைஸ் செய்ய முடியவில்லை...??
உறவுகளை விட பணம்/பதவி/புகழ் இவைகள்தான் உயர்வானது என்ற விதை ஆழ்மனதில் ஒன்றப்பட்டு வேரோடி வளர்ந்ததன் கோர விளைவே இந்த சிதைதல்... இந்த சிதைவு மேலும் மேலும் வலுவாகி மொத்த மானுட கட்டமைப்பை உடைக்கும் முன்பாக விழித்துக்கொள்வது நல்லது...
கணவனுடன், மனைவியுடன், உறவுகளுடன் அவர்கள் குறைகளை முடிந்தால் நிறைகளாக்கி, இல்லை என்றால் அப்படியே ஏற்றுக்கொண்டு அனுசரித்து செல்லுங்கள்.. நாளடைவில் எல்லாமே நிறைகளாக தெரியும்...
மியா ஹாம்ம் அவர்கள் நீளமாக சொன்னதை நம் முன்னோர்கள் நான்கே வார்த்தைகளில் நறுக்கென்று சொல்லிவிட்டார்கள்..
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை..”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக