ஏர்
இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முடிவு
செய்திருக்கிறதாம்... அதற்கு அமைச்சரவை ஒப்புதலும் கிடைத்து விட்டதாம்...
பொதுவாக
இந்த விமான நிறுவனங்களை பொறுத்தவரை கட்டணங்களில் எந்த விதமான
கட்டுப்பாடும் கிடையாது... பயணக்கட்டணம், எரிபொருள் செலவு, சேவைக்கட்டணம்
எல்லாமே பயணிகள் தலையிலேயே விடியும்... பண்டிகை காலங்கள், வெளிநாடுகளில்
பள்ளி விடுமுறை காலங்கள் போன்ற நேரங்களில் கட்டண உயர்வு சொல்லி மாளாது.... அப்படி அப்படி இருக்கும் பொழுது ஏர் இந்தியா நிறுவனம்
எப்படி 52 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குகிறது??? இதில் இன்னொரு விஷயம்...
மத்திய அரசு இந்த நிறுவனத்தை தூக்கி நிறுத்த சுமார் 30 ஆயிரம் கோடிகளை
கொட்டியும் கூட அது நிற்பதாயில்லை...
இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?? பொறுப்பற்ற நிர்வாகமும், தன கடைமையை சரி வர செய்யாத அதன் ஊழியர்க்களும்தான்....
அவர்கள் மட்டும் முறையான திட்டமிடுதலும், ஒழுங்கான பராமரிப்பும்-சேவையும் செய்திருந்தால்... பெரும்பாலான விமான நிறுவனங்களை போல ஏர் இந்தியா நிறுவனமும் லாபத்துடனே செயல்பட்டிருக்கும்...
இவ்வளவு நஷ்டத்தில் இயங்கும் ஒரு விமான நிறுவனத்தை தனியார் கையகப்படுத்த எப்படி முடியும்?? அவர்களால் மட்டும் எப்படி லாபத்தில் இயக்கி விட முடியும்...??
இந்திய அரசு ஊழியர்களை (மத்திய/மாநில) பொறுத்தவரை , வேலையில் சேர்ந்துவிட்டால் போதும்.. உடனே கொம்பு முளைத்து விடும்... 58/60 வயது வரை அவர்களின் வேலை உறுதி செய்யப்பட்டு விடும்... பணியில் இருக்கும் போது இறந்துவிட்டால் வாரிசுக்கும் வேலை உறுதி... வயதாகி ரிட்டயர்டு ஆனால் பென்ஷன் ....
அவர்கள் கடமையை செய்யாவிட்டாலும், ஊழல் செய்தாலும் அவர்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு நேர்மையாக இல்லாவிட்டாலும், அவர்களின் வேலைக்கான நோக்கத்தில் இருந்து விலகினாலும் பெரிதாக ஒரு பிரச்சினையும் இல்லை.... அதிகபட்சம் இடமாற்றம் அல்லது விசாரணை கமிஷன் அல்லது இடைநீக்கம்.... அவ்வளவுதான்....
பிரதமரே நேரடியாக நாட்டுமக்களுக்கு அறிவித்த 1000/500 ரூபாய் நோட்டு விவகாரத்தில் கூட விதிகளுக்கு புறம்பாக பணத்தை மாற்ற உதவிய வங்கி ஊழியர்களுக்கு கூட அதிகபட்ச தண்டனை "இடமாற்றம்" என்பது சமகால உதாரணங்கள்...
நோட்டுக்களை மாற்ற அரசு விதித்த கெடு முடிந்த ஆறு மாதம் கழித்தும் பழைய பணத்தை மாற்ற உதவிய ஒரு காவல்துறை ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டதுதான் அதிகபட்ச தண்டனை.... இது சமீபத்திய செய்தி...
அதையும் மீறி ஒருவேளை நடவடிக்கை எடுக்கப்பட்டால் "அரசு ஊழியர் சங்கங்கள்" வேலை நிறுத்தம் அறிவிப்பார்கள்... அதற்கு எதிர்கட்சிகள் குடை பிடிப்பார்கள்...
இப்படி இருக்கும் நிலையில் எவன் ஒழுங்காக வேலை செய்வான்....?? பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி லாபத்தில் இயங்கும்??? (பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் லாப நோக்கம் அற்றவை என்று சிலர் சொல்வார்கள்... ஆனால் நிர்வாகத்துறை வேறு... சேவைத்துறை வேறு.... உற்பத்தித்துறை வேறு.... நிர்வாகத்துறையில் லாபமே இருக்காது... சேவைத்துறையில் லாபம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நஷ்டம் இருக்க கூடாது.... உற்பத்தி துறை நிச்சயம் லாபத்தோடுதான் இருக்க வேண்டும் )
இவளோ நாள் எவன் எல்லாம் ஏமாத்தி, கடமையை ஒழுங்காக செய்யாமல், ஊழல் புரிந்து அந்த நிறுவனத்தை நஷ்டப்படுத்தினானோ அவனுக்கு எல்லாம் புதிதாக அந்த நிறுவனத்தை ஏற்று நடத்தப்போகும் தனியார் நிறுவனம் ஆப்பை செதுக்கி அடிக்கப்போகிறான்..
ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு உறுதியளிக்கும் என மத்திய அமைச்சர் சொல்லி இருப்பதாக செய்திகள் வருகின்றன...
அதனை அந்த தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளலாம்.... ஆனால் ஊழல் செய்வதற்கோ- பணியை ஒழுங்காக செய்யாமல் இருப்பதற்கோ அந்த தனியார் நிறுவனம் நிச்சயம் அனுமதிக்காது..... அதை அனுமதிக்க சொல்லி அரசும் நிர்பந்திக்க முடியாது.... ஏனென்றால்.... அந்த தனியார் நிறுவனம் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனம் அல்ல.... எவன் வேண்டுமானாலும் தின்னுவிட்டு போகட்டும்... நமக்கு நாம் ஆட்சியில் இருந்தால் போதும் என்று நினைக்க....
இது ஒரு எச்சரிக்கை மணி... அரசு ஊழியர்கள் தங்கள் கடைமையை சரி வர செய்ய வேண்டும்.... அரசு அதனை கண்காணிக்க வேண்டும்.... இல்லை என்றால்... இப்படி எல்லா நிறுவனங்களும் நஷ்டத்தில் கணக்கு காட்டி காட்டி.... பின்னாளில் அவைகள் தனியார் மயமாக்கப்பட்டு.... பிறகு தனியார் சொல்லும் விலைக்கு எல்லாவற்றையுமே வாங்கும் அவல நிலைக்கு பொதுமக்கள் ஆளாகப்போவது உறுதி...
அந்த "பொதுமக்களில்" இந்த அழிவுகளுக்கெல்லாம் காரணமான தற்போதைய அரசு ஊழியர்களும், அவர்கள் குடும்பமும் உள்ளடங்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக