வியாழன், 29 ஜூன், 2017

ரஜினியின் அமைச்சரவையும்- அதிகார மையங்களும்

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவாரா.... மாட்டாரா.... வரலாமா... கூடாதா.... வந்தால் தனிக்கட்சி தொடங்க வேண்டுமா... ஏதேனும் ஒரு கட்சியில் இணைய வேண்டுமா.... என்பதாக பல்வேறு ஊகங்கள், சந்தேகங்கள், கேள்விகள் என தமிழக அரசியல் ரஜினிகாந்த் அவர்களை மையப்படுத்தி சுழன்றுகொண்டிருக்கிறது..
Image may contain: 5 people, people smiling, beard and text
வழக்கம் போல தான் நடித்த திரைப்படம் திரைக்கு வரும் முன்பாக தன்னுடைய ரசிகர்களை சற்றே சூடேற்றும் விதமாக அவர் அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுவார் என்பதும்யல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுவார் என்பதும்...  திரைப்படம் வெளியான பின்பு அது வெற்றியோ-தோல்வியோ... அத்துடன் தன அரசியல் விமர்சனத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஆன்மீக பயணமோ... அடுத்த தொழில்முறை பயணமோ அவர் சென்று விடுவார்.... என்பதுதான் நாம் இதுவரை கண்ட உண்மை என்றாலும்... இம்முறை அப்படி என்ன தோன்றவில்லை...

ஏனென்றால்.... தமிழக அரசியல் களத்தில் வெல்ல முடியாத ஆளுமைகளாக இருந்தவர்கள் இப்போது இல்லாத சூழ்நிலையில் அடுத்த தலைவர் யார் என்பது பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது...

தற்போதைய கள நிலவரத்தில் , திரு கலைஞர் அவர்களால் உருக்குலையாமல் ஒப்படைக்கப்பட்ட தி மு க என்ற இயக்கத்தின் பலத்தோடு முன்னணியில் நிற்பவர் திரு ஸ்டாலின் அவர்கள்தான்... இவர் அனுபவமும் நிர்வாக திறமையும் நிறைந்தவர்...அதற்கடுத்தபடியாக... வட தமிழ்நாட்டின் செல்வாக்கு பெற்ற பா ம க வின் தலைவராக செயல்பட்டுகொண்டிருக்கும் திரு அன்புமணி ராமதாஸ்... படித்தவர், தொலைநோக்கு பார்வையும், திட்டங்களும் கொண்டவர்..

இவர்களுடன் அல்லது இவர்களுக்கு மேலாக திரு வைகோ அவர்கள்... ஆனால் மக்கள் செல்வாக்கை பெறமுடியாத இவருக்கான வாய்ப்பு இனி இல்லை என்ற நிலையை எட்டிவிட்டதால் இவரை நாம் கணக்கில் கொள்ள வேண்டியதில்லை..

திரு கலைஞர் அவர்களும் , அம்மா அவர்களும் களத்தில் நின்றபோதே ஒரு மாற்று சக்தி என்று எதிர்பார்க்கப்பட்ட திரு விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய முன் கோபத்தினாலும், அவரது மனைவியின் முறையல்லாத வழிகாட்டுதலாலும், ஊடக சதியாலும் இயல்பாகவே களத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்...

தேசியகட்சிகளான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் மட்டும் சில்லறை கட்சிகள் எல்லாம் எப்போதும் போல யாரோடோ ஒட்டிக்கொண்டு காலம் கழித்தே ஆக வேண்டும்..

இப்படியான ஒரு அரசியல் சூழ்நிலையில் சமீப காலமாக திரு ரஜினிகாந்த் அவர்களின் நடவடிக்கைகள் அவர் அரசியலுக்கு வந்தே விடுவார் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த.... அவரது ரசிகர்கள் புது ரத்தம் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்கள்..

இப்போது சாமான்யன் ஏதோ சொல்ல வருகிறார்... அதையும் கேட்போமா...??

வசனகர்த்தா எழுதிக்கொடுத்த வசனங்களை பேசி, சண்டை பயிற்சியாளர்கள் சொல்லிக்கொடுத்த அசைவுகளை செய்து, இயக்குனர்கள் சொல்வதை நடித்துக்கொடுப்பதுதான் ஒரு நடிகரின் வேலை.. அதை அவர் செய்கிறார்... அவ்வளவுதான்.. இயல்பில் அந்த நடிகரும் ஒரு சாமான்யர்தான்... சிந்தனாசக்தியை தொலைத்துவிட்ட ஒரு கூட்டம் எப்போதுமே அந்த செல்லுலாய்டு பிம்பங்களின் செயல்களை உண்மை என்றே நம்பி கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது முதல், பட்டாசு வெடிப்பதுவரை ஏராளமான கோமாளித்தனங்களை செய்வார்கள்... அவர்களை அப்படியே விட்டு விடலாம்... ஆனால்.... அவர்கள் அப்படியே இருக்கும் வரைதான் அவர்களை அப்படியே விடலாம்...

அந்த கோமாளித்தனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல முனையும்போது அவைகளை வெறும் கோமாளித்தனம் என்று ஒதுக்கி விட முடியாது...
ஒரு அரசு என்பது தனி நபர் சார்ந்த விஷயம் இல்லை... என்னதான் அரசு நிர்வாகத்தில் கல்வி-கேள்விகளில் தேர்ந்த உலக தரமுடைய அறிவாளிகள் இருந்தாலும்... அவர்களை இயக்குபவர்கள் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களே... ஒரு ஐ ஏ எஸ் – ஐ பி எஸ் படித்து தேர்ந்து பல ஆண்டுகள் அனுபவமுடைய அலுவலருக்கு ஆணை பிறப்பிப்பவர் ரவுடியிச, கள்ளச்சாராய, குற்றப்பின்னணி உடைய சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்பதுதான் நடைமுறை... இது ஒரு வெட்கக்கேடான, வேதனையான விஷயம் என்றாலும்... ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்...

திரு ஸ்டாலின் அவர்கள் நல்ல தலைவர் என்பதில் சற்றும் ஐயமில்லை.... திரு அன்புமணி அவர்கள் சிறந்த நிர்வாகியாக இருப்பார் என்பதில் மாற்றுகருத்து இல்லை... சீமான்-திருமாவளவன்-வைக்கோ இப்படி எல்லோருமே நல்ல தலைவர்கள்தான்... ஆனால்.. இவர்கள் மட்டுமே ஒரு ஆட்சியை நிகழ்த்திவிட முடியாது... இவர்கள் முதலமைச்சர்கள் என்றால்... இவர்களின் அடுத்தடுத்த உட்கட்டமைப்பு பதவிகளில் யாரை அமர வைப்பார்கள் என்பதுதான் கேள்விக்குறி... ஸ்டாலின்-அன்புமணி-சீமான்-திருமாவளவன்.. இப்படி “தலைவர்களின்” அறிவார்ந்த, புத்திசாலித்தனமான, வீராவேசமான, உணர்ச்சி மிகுந்த உரைகளை கேட்டு நாம “இவர்கள் நல்லவர்கள்.. திறமையான நிர்வாகிகள்..” என்று முடிவு செய்திருக்கலாம்... ஆனால்.. இவர்களுக்கு அடுத்தடுத்த படிகளில் அமரப்போகிறவர்கள்????

தற்போதைய திமுக, பாமக போன்ற கட்சிகள் ஏற்கெனவே ஒரு உள்கட்டமைப்பு வசதியை பெற்றவை.... பல அனுபவங்கள், தவறுகள், பாடங்கள் மூலம் நிறைய மாறுதல்களை செய்து அவைகள் ஓரளவிற்கு நிர்வாக சக்தியை பெற்று இருக்கிறார்கள்... அப்படி இருந்தும் கூட, தன்னுடைய நிலையை, வெற்றியை காப்பாற்றிக்கொள்ள.... “தவறானவர்கள்...” என்று தெரிந்தாலும் கூட சிலர் மீது எளிதாக நடவடிக்கை எடுத்துவிட முடியாது.... அப்படி ஏதேனும் நடவடிக்கை எடுத்தால் தன்னுடைய வெற்றிக்கு அவர்களால் ஏதேனும் குந்தகம் வந்துவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணம்.... கடந்த சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வேட்பாளராக நிற்கவைக்கப்பட்ட திரு முத்துக்கருப்பன் அவர்களே அதற்கு சமகால சாட்சி.....

வளர்ந்த கட்சிகளுக்கே இந்த நிலைமை என்றால்....

ஒருவேளை...... புதிதாக ஒரு கட்சியை திரு ரஜினிகாந்த் அவர்கள் தொடங்கினால்... அவருக்கு அடுத்தடுத்த படிகளில் அமரப்போகிறவர்கள் யார்...??? இவர் பொருளாதார நிபுணர்... இவர் கல்வியாளர்... இவர் பல ஆராய்ச்சிகளை செய்தவர்... இவர் சட்டத்தில் புலி..... என்று யாரோ ஒருவரை கொண்டுவந்து அமர வைக்க முடியுமா???
காலம் காலமாக தன்னுடைய கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்த ரசிகர்களை திரு ரஜினிகாந்த் அவர்கள் திருப்திபடுத்த வேண்டாமா??? அப்படி திருப்தி படுத்த அவர் என்ன செய்வார்....?? உள்ளூர், ஒன்றிய,வட்ட, மாவட்ட, மாநில பொறுப்பாளர்களாக இவர்களைத்தான் நியமிப்பார்... தேர்தலில் போட்டியிட நேர்ந்தால்... சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் இவர்களை தான் முன்னிறுத்துவார்...

ரஜினிகாந்த் என்ற ஒரு நடிகரை... ஒரு பெரிய காவல்துறை அதிகாரியாக, இருப்பதை எல்லாம் தானம் கொடுக்கும் பண்ணையாராக, நேர்மையான கடத்தல்காரனாக, கெடுதல் செய்வோரை எல்லாம் அடித்து துவைக்கும் நல்லவராக, உழைப்பாளியாக,தேவதூதனாக, கடவுளாக பார்த்து பார்த்து பரவசமடைந்திருகும் நாம்..... அவர் தேர்தலில் நின்றால்... நிச்சயம் நம்மையும் அதை போல காப்பாற்றுவார் என்று நம்பி அவருக்கு வாக்களிப்போம்.. வெற்றிபெறவும் செய்வோம்...
சத்தியமாக நாம் ரஜினிகாந்த் என்ற ஒரு நல்ல மனிதனுக்குதான் வாக்களிப்போம்... ஆனால்... நம்மை ஆளப்போகிரவர்கள்.... ??????????????

எஸ்.... அவர்களேதான்..... யார் உங்கள் ஊரில் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியான அன்று கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தானோ.... எவன் தன் தலைவனுக்கு வழுக்கை விழுந்துவிட்டது என்பதற்காக சலூன் கடைக்கு சென்று தன் தலையை வழுக்கையை போல சவரம் செய்துகொண்டானோ....
எவன் தன்னுடைய தலைவன் திரைப்படம் வெளியான அன்று உங்களூர் தியேட்டர்களின் தோரணம் கட்டினானோ..... அவனே தான்....
அவன்தான் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்... அவன்தான் உங்கள் அமைச்சர்... அவன்தான் உங்கள் நகரமன்ற தலைவர்... அவன்தான் உங்கள் ஒன்றிய தலைவர்...அவன்தான்.. உங்கள் மாவட்ட கவுன்சிலர்...

இவர்களின் ஆணைப்படிதான் படித்த, அனுபவமிக்க அரசு அலுவலர்கள் செயல்படுவார்கள்... இவர்களின் விருப்பப்படிதான் அரசு இயந்திரம் இயங்கும்...

நாம் ரஜினிகாந்த் அவர்களுக்குத்தான் வாக்களித்தோம்...

வாழ்க ஜனநாயகம்...!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக