புதன், 28 ஜூன், 2017

கலுங்கடி- வாழ்க்கையின் பாதை..!!!


"கலுங்கு" என்ற வார்த்தை கிராமவாசிகளுக்கு பழக்கமானது... நகர (நரக... ஹா ஹா ஹா)வாசிகளுக்கோ அயல்கிரஹ சொல்...

கிராமங்களில் இருக்கும் ஏரியின் முழுக்கொள்ளளவு நிரம்பிய உடன் உபரி நீரை வெளியேற்ற அமைக்கப்படும் வடிகாலுக்கு "கலுங்கு " என்று பெயர்...
அதாவது ஒரு சிறு அணைபோல செயல் படும் இந்த கலுங்கு நான்கு-ஐந்து மிகப்பெரிய குழாய்களுடன் இருக்கும்.. ஏரியின் நீர்மட்டம் உயர்ந்த உடன் தன்னிச்சையாக வெளியேறும் தண்ணீர் கால்வாய் வழியாக ஓடி காட்டாற்றில் கலந்து கடலை சென்றடையும்... இந்த கலுங்கின் உதவியால் ஏரியில் மற்ற பகுதியில் உடைப்பு ஏற்பட்டு விவசாயத்திற்கோ-குடியிருப்பு பகுதிக்கோ பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும்...

எங்கள் ஊர் ஏரியிலும் அப்படியான கலுங்கு இருக்கிறது.. தமிழகத்தில் அதிக மழை பெய்யும் ஐப்பசி-கார்த்திகை மாதங்களில் ஏறி முழுமையாக நிரம்பி அந்த ஏரியின் கலுங்கின் வழியாக உபரி நீர் அதிக அளவில் வெளியேறும்..

பெரும்பாலும் அப்படியான கலுங்கு ஐந்து அல்லது ஆறு குழாய்களுடன் இருக்கும்... அந்த குழாய்களின் ஊடாக உபரி நீர் மிக வேகமாக வெளியேறும்..

அப்படி வெளியேறும் நீரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த குதித்து நீந்தி விளையாடுவது வழக்கம்... அப்படி குதிக்கும் போது நடுவில் இருக்கும் குழாயில் இருந்து வெளியேறும் நீரில் சிலர் குதிப்பார்கள்.. இதன் வேகம் அதிகமாக இருக்கும்... நீரின் போக்கிலேயே நீண்ட தூரம் இழுத்துச்செல்லும்... வெகுதூரம் நீரோட்டத்தின் பாதையிலேயே பயணித்து கரையேறி வந்து மீண்டும் குதிப்பார்கள்.

இரண்டு கடைசியிலும் இருக்கும் குழாய்களில் வெளியேறும் நீர் பக்கவாட்டாக சுற்றிக்கொண்டு மீண்டும் தொடங்கும் இடத்திற்கே..(அதாவது நீர் வெளியேறும் பாதையருகிலேயே) கொண்டு வரும்... சற்று பயந்தவர்களும். புதிதாக குளிப்பவர்களும் இந்த ஓரத்தில் இருக்கும் குழாயில் வெளியேறும் தண்ணீரில் குதிப்பார்கள்.. அவர்களை நீர் இழுத்துசென்று மீண்டும் கரை ஓரத்தில் சேர்க்கும்...

இப்படித்தான் வாழ்க்கையும்... அதன் போக்கில் வேகமாக ஓடுகிறது... துணிந்து நடுவில் குதிப்பவர்களை வெகுதூரம் இழுத்துச்செல்கிறது.... தயங்கி ஓரத்தில் குதிப்பவர்களை சுழற்றிக்கொண்டு வந்து தொடங்கும் இடத்திலேயே விடுகிறது....

ஓரத்தில் குதிப்பவர்கள் பயத்துடன் தொடங்கிய இடத்திற்கே வந்து நிற்கிறார்கள்... நடுவில் துணிந்து குதிப்பவர்கள் புதிய புதிய அனுபவங்களை பெறுகிறார்கள்...!!!

தோற்ற மாணவர்களின் தற்கொலைகள் - தடுப்பது எப்படி???

கொஞ்சம் பெரிய பதிவு... இவன கண்டிப்பா ஏதாவது நல்ல விஷயமாத்தான் சொல்லி இருப்பான்ற நம்பிக்கை இருக்கவங்க மட்டும் முழுசா படிங்க...

பணம் என்ற மாரீச மானை துரத்தி துரத்தி பிடிபடாமல் ஏமார்ந்த ஆத்மாக்கள் தங்களின் வாரிசுகளாவது அந்த மானை வேட்டையாட வேண்டும் என்பதற்காக அவர்களின் வேகத்திற்காக பிடித்துக்கொடுக்கும் பஞ்சகல்யாணி குதிரையாய் கல்வியை மாற்ற முற்பட்டதன் விளைவே இந்த மாணவர் தற்கொலைகளும் மாணவர்கள் செய்யும் கொலைகளும்.
புத்தகங்களில் இருப்பதை எல்லாம் விடைத்தாள்களுக்கு மாற்றும் ஊடகப் பொருளாய் மாணவர்களை மாற்றும் கல்விமுறையும்....
மார்க்குகளின் அடிப்படியில் மட்டும் வேலை வாய்ப்புகளும் அதனை தொடர்ந்த ஐந்திலக்க ஊதியங்களை அள்ளிக்கொடுக்கும் கார்பொரேட் நிறுவனங்களும் மாணவர்களை கத்தியோ -கயிறோ எடுக்கத்தூண்டுகின்றன ..
இந்த பிரச்சினைக்கு என்னதான் தீர்வு... கல்லூரிகளில் கொடுக்கப்படும் கவுன்சிலிங் பயனளிக்குமா..?? மாணவர்களை கிழிக்கும் புத்தகங்களால் தான் நாளைய சமுதாயம் நடை போடுமா...?? கேள்விகள்... கேள்விகள்...
பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன..?

தங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்க வில்லையோ - தாங்கள் எங்கெல்லாம், என்ன காரணத்திற்காக புறக்கனிக்கப்பட்டோமோ - தங்களால் என்ன முடியவில்லையோ - தங்களின் எந்த கனவெல்லாம் நிறைவேற வில்லையோ - அதையெல்லாம் தங்களின் பிள்ளைகளின் மனதில் விதைக்க முற்படாமல் திணிக்க முற்படுவதால் தான் அவர்களை படி, படி, படி, என்று படுத்துகிற நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்... குழந்தைகள் கர்ப்பத்திலேயே முடிவு செய்துகொண்டு பிறப்பதில்லை... நான் எஞ்சினியர் ஆக வேண்டும்.. நான் டாக்டர் ஆக வேண்டும் என்று...

அவர்கள் வாழும் சூழலும், வளரும் சூழலுமே அவர்களுக்கு தாங்களும் அப்படி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன... பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதுசார்ந்த சூழ்நிலையை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.. அதன் உயர்வை அவர்களுக்குள் ஊட்ட வேண்டும்.. அந்த துறையின் ஜாம்பவான்களை அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.. தங்களின் சொத்துக்களுக்கு தமது பிள்ளைகள் எப்படி வாரிசோ... அதே போல் தான் தங்களின் கனவுகளுக்கும் தங்கள் பிள்ளைகள் வாரிசு என்று நினைப்பதில் தவறில்லை... ஆனால் அந்த கனவை பிள்ளைகளுக்குள் விதையுங்கள்... அதற்கு வாய்ப்பு என்னும் தண்ணீர் ஊற்றி வளருங்கள்... பின்னாளில் உங்கள் கண்முன் உங்கள் கனவுகள் விருட்சமாய் உங்கள் பிள்ளைகளாலேயே நிஜமாக்கி வளர்க்கப்படும்.


அரசாங்கத்தின் கடமை என்ன..??

வெளிநாட்டு முதலீடை ஈர்கிறேன் பேர்வழி என்ற பெயரில் உலகமயமாக்களில் கார்பொரேட் நிறுவனங்களுக்கு கதவுகளை அகல திறந்த அரசாங்கம் செருப்பின் அளவுக்கு காலை வெட்ட முயலுவதை என்னவென்று சொல்ல... இவர்கள் கம்பாஸ் இண்டர்வியூ என்ற பெயரில் மதிப்பெண்களை வைத்து ஆட்களை தேர்வு செய்ய பொறியியல் கல்லூரிகளை குறிவைக்க.. மனிதர்களையும் அறிஞர்களையும் உருவாக்கி வந்த கல்விக்கூடங்கள் இயந்திரங்களை வார்த்தெடுக்கும் மோல்டிங் தொழிற்சாலைகளாய் மாறிப்போயிருக்கிறது...


பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே நல்ல கூலிக்காரர்கள் கிடைப்பார்கள் கலை கல்லூரிகளில் படிப்பவர்கள் பியூன் வேலைக்கு கூட லாயக்கற்றவர்கள் என்ற மாயையை இந்த கார்பொரேட் நிறுவனங்கள் உருவாக்கி வைத்திருப்பதால் தான்.. புரிகிறதோ - புரியவில்லையோ.. பொறியியல் கல்லூரிக்குள் நுழைய மார்க் மட்டுமே அவசியம் என்று பள்ளிக்கல்வி நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் கதவுகளை தட்ட மார்க்குகள் தான் சாவிகள் என பொறியியல் கல்லூரி நிறுவனங்களும் மாணவர்களை பிழியத்தொடங்குவதால்.. என்ன படிக்கிறோம் என்ற சுயம் இழந்து மாணவர்கள் திண்டாடி திண்டாடி.. இதில் தொடரவும் முடியாமல் - விலகவும் முடியாமல்.. கடைசியாய் தற்கொலை - அல்லது கொலை என்ற முடிவெடுக்க முற்படுகிறார்கள்...

எதிர்கால தூண்கள் இப்படி தடம் மாறி போவதன் விளைவு இன்னும் இருபதாண்டுகளில் இந்திய ஒரு மனித இயந்திரங்களின் நாடு என்றோ - இல்லை மன நோயாளிகளின் கூடாரமென்றோ ஆகி விடாதா..??
நூறு தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனமென்றால் குறைந்த பட்சம் முப்பது சதவிகித ஆட்களாவது கலைக்கல்லூரிகளில் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கலாம்... இதன் மூலம் கலைக்கல்லூரியில் பயில்பவர்களுக்கும் பன்னாட்டு நிறுவனகளில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை மாணவர்கள் - பெற்றோர்கள் மனதில் விதைக்கலாம்..

பன்னிரெண்டாம் வகுப்பு முழுத்தேர்வில் எதோ ஒரு காரணத்தால் மதிப்பெண் குறைந்தால் நிச்சயம் அந்த மாணவனுக்கு நல்ல கல்லூரிகளில் மருத்துவமோ - பொறியியலோ படிக்க இயலாமல் போகும் நிலை மாற்ற... குறைந்த பட்சம் 10 , 11 , 12 ம வகுப்பு தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் அவர்களுக்கு அந்த பிரிவுகளில் இடமளிக்கப்பட்டால் ஒரு தேர்வில் மதிப்பெண் குறைந்திருந்தால் கூட அடுத்த தேர்வில் அதனை ஈடு செய்ய இயலும்..
பாடத்திட்டங்களில் மட்டும் மதிப்பெண்களை கணக்கிடாமல் விருப்பத்துறை - விளையாட்டு - கலை -மதிப்பெண்களில் இருந்து குறைந்த பட்சம் 10 சதவிகித மதிப்பெண்களையும் கணக்கிலெடுக்கும் போது அவர்களின் மனம் சார்ந்த விஷயங்களும் இந்த பொறியியல் - மருத்துவ துறைகளுக்கு அவசியம் என பெற்றோர்களும் - கல்வி நிறுவனங்களும் அதற்கும் முக்கியத்துவம் தர தொடங்குவார்கள்.. இதனால் மாணவர்களின் மன அழுத்தம் குறையும்..

கல்வி நிறுவனங்கள் செய்ய வேண்டியது என்ன...?

எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே... அவன் எஞ்சினியர் ஆவதும் டாக்டர் ஆவதும் எடுக்கும் மார்க்கினிலே... என்ற மோசமான நிலைமை அவர்களை அந்த நிலைமைக்கு தள்ளுகிறது... பத்தாம் வகுப்பு முழுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்று பேர்வாங்கி வைத்திருக்கும் பள்ளிகள் வாய்ப்புகளை வழங்குவதால்.. ஒன்பதாம் வகுப்பு முதலே மாணவர்கள் பத்தாம் வகுப்பிற்கான பாடத்திட்டத்தை படிக்க தூண்டப்படுகிறார்கள்... பன்னிரெண்டாம் வகுப்பில் முழுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் - பொறியியல் வாய்ப்புகள் 
வழங்கப்படுவதால் தான் அந்த மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாகி போகிறார்கள்...

நம்பர் ஒன் நம்பர் டூ என்ற தர வரிசை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவர்கள் அறிஞர்களை உருவாக்க முயல வேண்டும்... பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு மேல்நிலை தேர்வில் எத்தனை பாடப்பிரிவுகள் உள்ளன .. அவைகள் மூலம் எந்த துறை சார்ந்த கல்லூரிகளுக்கு செல்லலாம் என்பதை பத்தாம் வகுப்பிலேயே வழிகாட்ட வேண்டும்.. அதே போல்.. பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எந்த பாட பிரிவு தேர்ந்தெடுத்தால் என்னென்ன வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.. அவர்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்பது போன்ற தகவல்களை வழங்கும் மையங்களை அமைக்க முன்வர வேண்டும்...

எல்லாவற்றிற்கும் மேலாக மதிப்பெண்களின் அடிப்படையில் இடமளிப்பதை தவிர்த்து திறமைக்கு முன்னிடம் கொடுக்கவும், பின் தங்கிய மாணவர்களை முன்னேற்ற வாய்ப்பளித்தும் , வியாபாரம் தாண்டி - எதிர்கால இந்தியாவை உருவாக்குகிறோம் என்ற அவர்களின் கடைமையை உணர்ந்து செயலாற்றினால்..

இந்த மன அழுத்த தற்கொலைகளின் ஆணி வேறை பிடுங்க இயலும்...
செய்வார்களா..????


விவசாய தொழிலதிபர்கள்..!!!

எந்த பொருளை தயாரிக்கிற நிறுவன முதலாளியும் அவருடைய தொழிலகத்தில் தயாரான குறையுள்ள பொருளை தன்னுடைய உபயோகத்திற்காக வைத்துக்கொள்ள மாட்டார் ....


உதாரணமா ஒரு கார் தயாரிக்கிற கம்பெனிக்காரன் அவன் கம்பெனில தயாரிச்ச கார்ல எது நசுங்கி போய் இருக்கோ அத தன்னோட உபயோகத்துக்கு வச்சுக்க மாட்டான்....


அந்த முதலாளியின் உபயோகத்திற்கென பிரத்யோக கவனத்துடன் சிறப்பாக தயாரிக்கப்பட்ட பொருளை தான் உபயோகிப்பார்....


ஆனால் விவசாயியோ.... விதை போட்டு, நீரூற்றி, கண்ணும் கருத்துமாய் கவனித்து விளைச்சலை அறுவடை செய்து , விளைந்த பொருளில் பூச்சி, சொத்தை, கோணல், நொள்ளை என்று கழிவுகளாக தன்னுடைய உபயோகத்திற்கு எடுத்துக்கொண்டு நல்ல பொருட்களை சந்தைக்கு அனுப்புவான்...


அட பிச்சைக்கார விவசாயிங்களே.... இப்போ புரியுதா.. உங்கள எவனும் ஏன் தொழிலதிபர்ன்னு சொல்ல மாட்டேங்கிறான்னு...???

விளையிறதுல நல்ல தரமான பொருளா உங்க வீட்டு குழம்புக்கோ, கறிக்கோ எடுத்துகிட்டு மிச்சம் இருக்கிறத மட்டும் விற்பனைக்கு அனுப்புங்க.... இன்னும் ஒரு படி மேல போய் அந்த பொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்ற வழிமுறைகளை செயல்படுத்துங்க.... இடைத்தரகர்கள் இல்லாம நேரடியா சந்தைப்படுத்துற முயற்சியில இறங்குங்க....

அதுக்கப்புறம் பாருங்க.. அவன் ராக்கெட் தயாரிக்கிற கம்பெனி வச்சிருந்தாலும் உங்க காலடிக்கு கீழதான்... நீங்கதான் உலகத்துலேயே முதல் தொழிலதிபர் தரம் உடையவங்க....!!!!

திசை திருப்பல்.

"சின்னவயசுல நீ மட்டும் அம்மகுண்டியாக்கி அடிச்சு அவமானப்படுத்தாம இருந்திருந்தா நான் அந்த நகைய திருடிக்கிட்டு ஓடி இருக்க மாட்டேன்பா... இங்கனக்குள்ள நானும் ஒரு பொட்டிக்கடைய போட்டு பொழச்சு இருப்பேன்பா"

- வெயில் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியின் வசனம் இது!!




பெற்றவர்கள் அறியாமையின் காரணமாகவோ, அதிக கோபத்தால் அறிவிழந்தோ பிள்ளைகளுக்கு கொடுக்கும் தண்டனை அவமானங்கள் அவர்கள் வாழ்க்கையில் தவறான வழியை தேர்ந்தெடுக்க வைக்கும்...

அவமதிப்புகளும் , அலட்சியங்களுமே ஒரு பாதையில் இருந்து விலகி வேறொரு புதிய பாதையை தேட வைக்கிறது.. ஆனால் அப்படி தேர்ந்தெடுக்கும் புதிய பாதைகளில் 99% தவறான பாதையாக போய்விடுவதுதான் துரதிஷ்டம்...

இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல... பெரியோருக்கும் பொருந்தும்

நிலநடுக்கம் ஏன் வருகிறது

 


நிலநடுக்கம் ஏன் வருகிறது என்பதற்கு ஆயிரம் விளக்கங்களை அறிவியல் கொடுக்கும்.... அதை தாண்டிய மனச்சாட்சி கொடுக்கும் விளக்கம் இது...

ஒரு மனச்சாட்சி உள்ள கிராமத்தான் பார்வையில் நிலநடுக்கத்தை இப்படி எளிதாக விவரிக்கலாம்... மாடுகள் தங்கள் உடம்பின் மீது ஏதேனும் ஈ அமர்ந்து கடிக்கும் போது அந்த ஈயை விரட்டுவதற்காக அந்த இட்டத்தின் தோலை மட்டும் அதிர்வுற செய்யும் படி உலுக்கும்... அப்போது அங்கே அமர்ந்து கடிக்கும் ஈ ஓடிவிடும்....
அதுதான் நிலநடுக்கம்... தன் உடம்பில் இருந்து கடித்த ஏதோ ஒரு ஈயை (பூமிக்கு எதிரான நாசகார சக்தியை ஒழிக்க) விரட்டுவதற்கு பூமாதேவி தன்னுடைய தோலை அதிர்வுற செய்வதே நிலநடுக்கம்...

இதில் துரதிஷ்டமான உண்மை... அந்த கொடும் ஈயை விரட்டும் முயற்சியில் நல்லோரும் அழிந்துபோவதுதான்...

உலகம் இப்படித்தான் தன்னை சமப்படுத்திக்கொண்டு சுழன்று கொண்டே இருக்கிறது....


(தசாவதாரம் படத்தில் கெமிக்கல் விஷம் பரவாமல் ஒரே நேரத்தில் உப்புத்தண்ணீர் தெளிக்கக வேண்டி ஆழிப்பேரலை சுனாமியாய் ஊருக்குள் ஊர்வலம் நடத்தியது என்ற கற்பனையும் - ஒருவேளை அப்படி எதுவும் நடந்துகூட இருக்கலாம்.... எவர் கண்டார் - இந்த அப்பாவி விவசாயியின் கற்பனையும் ஒன்றுதான்.... இறைவன் எதையோ தடுக்க சில அழிவுகளை மேற்கொள்கிறான்...)

கூடுமான வரையில் பாவத்தை தவிருங்கள்.... உலகம் உய்யும்.....

தாது வருட பஞ்சம்










18 ம் நூற்றாண்டின் கடைசி காலகட்டத்தில் சற்றேறக்குறைய 14 ஆண்டுகள் மழையே பெய்யாமல் வானம் வஞ்சித்து விட... பஞ்சம் ஆடிய கோரத்தாண்டவத்தில் மடிந்தவர்கள் லட்சங்களில் ......

தமிழர் வரலாறு இதை தாது வருட பஞ்சம் என்று நடுக்கத்தோடு நினைவு கூறகிறது...

அந்த பஞ்ச காலத்திலும் உயிர் உற்பத்தி தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.... நாமே உயிர் பிழைப்போமோ இல்லையோ..... நாம் பெற்றுப்போடுவதை யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்து நம் முன்னோர்கள் உயிர் உற்பத்தியை நிறுத்தி இருந்தால்... இன்று நீங்களோ- நானோ இல்லை...

(அந்த காலகட்டத்தில் தான் மதுரை பகுதியில் கஞ்சித்தொட்டி அறிமுகமானது.... ஒரு தாசியின் தயவால்.... இந்த தாசி பற்றி நான் ஏற்கெனவே எழுதி இருப்பது உங்கள் ஞாபகத்தில் இருக்கலாம்-"கஞ்சித்தொட்டி - குஞ்சரம்மாள்"  )

நம்பிக்கை.... அதானே எல்லாம்...!!!

தாகூரும் - கவிதையும்.

  


ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒருமுறை பவுர்ணமி இரவில், கங்கை நதியில் படகுப்பயணம் செய்த படி மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கவிதை எழுத யோசித்தபடி இருந்தாராம்...

கீதாஞ்சலிகாக நோபல் பரிசை அள்ளி வந்த தாகூருடன் கவிதை கண்ணாமூச்சி ஆடியதாம்.... ஒரு வரி கூட எழுத முடியாத நிலையில் மெழுகு வர்த்தியை அணைத்துவிட்டு மல்லார்ந்து படுத்த படி வானத்தை ரசிக்க ஆரம்பித்தாராம்..

நட்சத்திர தோழிகளுடன் உலாவரும் இளவரசி பவுர்ணமி நிலா... சில்லென்ற காற்று... கங்கை நதியின் சல சலப்பு.... படகோட்டியின் நாட்டுப்புற பாடல்.... தாகூருடன் இப்போது கவிதை கலவி செய்ய தயாரானதாம்....

தாகூருக்கு மெழுகுவர்த்தி..... நம்மில் நிறைய பேருக்கு ஆண்ட்ராய்ட் / லேப்டாப்

ரசிப்பதற்கான விஷயங்களை இந்த சில்லறை வெளிச்சம் தடை செய்து கொண்டே இருக்கிறது... உலகம் ரொம்ப பெரியது....

அத்திரிபாச்சி பூநூல் கொழுக்கட்டை





ஒரு ஊர்ல இருந்து ஒருத்தன் ரொம்ப தூரம் இருக்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போனான்.... அங்க அவனுக்கு கொழுக்கட்டை செஞ்சு சாப்பிட கொடுத்தாங்க... இவன் அதுக்கும் முன்னாடி கொழுக்கட்டை சாப்பிட்டதே இல்ல... இவனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.... இன்னும் கொஞ்சம் கொடுங்கன்னு கேட்கவும் வெக்கம்.... சோ.... வீட்ல போய் பொண்டாட்டிகிட்ட கொழுக்கட்டை செய்ய சொல்லி சாப்பிடனும்னு நினைச்சுகிட்டே வீட்டுக்கு கிளம்பி வந்தான்....

கொழுக்கட்டையோட பேர் மறந்திட கூடாதுன்னு "கொழுக்கட்டை" "கொழுக்கட்டை"ன்னு வழி எல்லாம் சொல்லிகிட்டே நடந்து வந்தான்... வர வழில ஒரு இடத்துல சின்னதா ஒரு கால்வாய் இருந்துச்சு.. அத தாண்டி தான் போகணும்.. அப்படி தாண்டும்போது "அத்திரி பாச்சி.."ன்னு சொல்லிகிட்டே தாண்டினான்.... கொழுக்கட்டைன்கிற பேர மறந்துட்டான்...

அதுக்கப்புறம் "அத்திரி பாச்சி.. அத்திரி பாச்சி.."ன்னு சொல்லிகிட்டே வீடு வந்து சேர்ந்தான்.... பொண்டாட்டிகிட்ட வந்து "எனக்கு அத்திர்பாச்சி செஞ்சு கொடு"ன்னு கேட்டான்...
அவளுக்கு ஒன்னும் புரியல.... அதென்னய்யா அத்திரி பாச்சி.. ன்னு கேட்டா.... சொந்தக்காரங்க வீட்டுல செஞ்சு கொடுத்தாங்காடி ன்னு சொன்னான்.. இவளுக்கு ஒன்னும் வெளங்கல... என்னதான்யா சொல்ற நீ.. அத்திரி பாச்சின்னு ஒரு பலகாரமும் இல்லையேன்னு சொன்னா.... இவனுக்கு கோபம் வந்துட்டுது... இது கூட தெரியாம என்னடி நீ... ன்னு அவல போட்டு அடி பின்னி எடுத்துட்டான்....



இவ அழுதுகிட்டே படுத்திருந்தா.. அப்போ பக்கத்து வீட்டு ஆத்தா வந்து... என்ன ஆச்சுன்னு கேட்டிருக்காங்க.... அவ விஷயத்த சொன்னா.. அந்த ஆத்தாவுக்கும் வெளங்கல.... அய்யய்யோ இப்படி கொழுக்கட்டை மாதிரி வீங்கி கிடக்கே.. இப்படியா அடிப்பான் ஒரு பொம்பளைய....ன்னு இரக்கப்பட்டாங்க...

இப்போதான் நம்ம ஆளுக்கு கொழுக்கட்டை ஞாபகம் வந்துது.... ஆமா ஆமா.. கொழுக்கட்டை கொழுக்கட்டை ன்னு கூவினான்....

கத அம்புட்டு தானா....?? வழக்கமா நீ கதையோட சேர்த்து சமகால விஷயத்த கோர்த்து விடுவியே....

விட்டுட்டா போச்சு....

அந்த பெரிய மனுஷன் பாப்பார பய எல்லாம் உங்கள படிக்க விடாம சாமி கண்ணா குத்தும்.. பாவம் அது இதுன்னு கெளப்பி விட்டிருக்கான் டா... நீங்களும் நல்லா படிச்சு அவனுங்கள விட ஒரு படி மேல போகனும்டா.. அப்படிங்கிற அர்த்தத்துல பூணூல் காரனுங்கன்னு சொன்னான்... ஆனா இந்த முட்டாப்பய கூட்டமோ... அந்த தாடிக்கார கெழவன் சொன்னத மறந்துட்டு வெறும் பூநூல மட்டும் புடிச்சுகிட்டு தொங்குரானுங்க....

லீ குவான் யூ


சிங்கப்பூரின் தந்தை திரு லீ குவான் யூ அவர்கள் மறைந்ததற்கு எங்கள் பகுதியின் பெரும்பாலான கிராமங்களில் அஞ்சலிப் பதாகைகள், இரங்கல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நிகழ்த்துகிறார்கள்...

நன்றி உணர்ச்சியின் மொத்த வெளிப்பாடு இது.. எங்கள் பகுதி இன்று இந்த அளவிற்கு வசதி வாய்ப்போடு இருப்பதற்கும் (+).. என் போன்ற இளைய தலை முறை இளமையை தொலைத்தும் திரைகடலோடும் கனவுக்குள் விழுந்ததற்கும் (-) எங்கள் பகுதி மக்களின் பல்லாண்டுகால வெளி நாட்டு தொடர்புகள் தான் காரணம்.. அதில் மிகவும் தொன்மையானது சிங்கப்பூர்....




அங்கு நிலைகொண்டிருக்கும் மக்கள் தத்தம் கிராம முன்னேற்றத்திற்கும், பள்ளி, கோயில் போன்ற பொதுப்பணிகளுக்கும் அங்கு சேர்த்த செல்வங்களை அள்ளிக்கொடுத்ததற்கு காரணம்., அவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை அதில் நிலைகொள்ளச்செய்ய திரு லீ குவான் யூ அவர்கள்தான் அடித்தளம் அமைத்து உறுதுணை நின்றார்கள் என்ற நன்றிப்பெருக்கே இன்று பதகைகளாகவும், ஊர்வலமாகவும் வெளிப்படுகிறது....

சிங்கப்பூருக்கும் எமக்கும் நேரடியாக எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும்.. எம்பகுதிக்கும், எம் மக்களுக்கும் இருக்கும் நன்றி உணர்ச்சியின் கூட்டோடு.. எமது வருத்தங்களையும் பதிவிடுகிறோம்.....

எங்க பகுதி எங்கபகுதின்னு சொல்றியே... உங்க ஊர்ல யாரும் இல்லையா...?? உங்க ஊர்ல பதாகைகள் எதுவும்....????

ம்க்கூக்கும் ......இருந்தார்.,.. ஒரே ஒருத்தர் இருந்தார்.. அவரும் இறந்து போய்ட்டார்... மத்தவங்க எல்லாம் சொந்த ஊர்காரன பார்த்தாலே டீ வாங்கி கொடுக்கனுமோன்னு பயந்து சந்துக்குள்ள ஒளிஞ்சுகிற நல்லவனுங்க.....

இவர்கள் இந்தியப் பெண்கள்..





"கற்பழிப்பை தவிர்க்க முடியாது என்று தெரிந்துவிட்டால்.... சேர்ந்து அனுபவித்து விடு"

இது ஒரு ஆங்கில பழமொழியின் தமிழாக்கம்.... ஆனா இந்த பழமொழிய எதிர்த்து எந்த ஆங்கிலேய பெண்கள் இயக்கமும் போராடினதா தெரியல....

"அந்த பொண்ணு ஒத்துகிட்டிருந்தா கொலை வரைக்கும் போயிருக்க மாட்டோம்"ன்னு அவன் பேட்டி கொடுத்தா இங்க கோபத்துல குமுறுறாங்க....

என்ன காரணம்னு யோசிச்சு பார்த்தா..... என்னதான் வெள்ளைக்காரிங்க மாதிரி குட்டை பாவாடையும், லெக்கின்சும் போட்டுக்கிட்டு ராத்திரி பதினோரு மணிக்கு மேல பப்புக்கு போற அளவுக்கு வந்திருந்தாலும், உள்ளுக்குள்ளயே உறைஞ்சிருக்குற "இந்தியப்பெண்"அப்படிங்கிற பாரம்பரிய கலாச்சாரம் தான் இப்படி கோபப்பட வைக்குது....



பெண் சுதந்திரம், மேற்கத்திய நாகரீகம், குட்டை பாவாடை எல்லாம் இந்த கார்பொரேட் சைத்தான்கள் போடற பிச்சைக்காச வாங்கிகிட்டு ஊடக பிசாசுகள் ஏற்படுத்தி வச்சிருக்கிற மாய வலை..... அந்த மாய வலைதான் உண்மைன்னு நினைச்சுகிட்டு நம்மூர் பொண்ணுங்க ராத்திரி பதினோரு மணிக்கும் மேல எங்கள வெளில நடமாட விடறது இல்ல.... எங்களுக்கு சுதந்திரம் இல்லன்னு முட்டாள்தனமா உளறினாலும், சந்தர்ப்பம் வரப்போ இயல்பு நிலைக்கு திரும்பிட்றாங்க....

எத்தனயோ மொழிகளை சரளமா பேசத் தெரிஞ்ச ஒருத்தன்,, வலிக்கும்போது மட்டும் தாய்மொழில கத்துவானாம்.... அப்படித்தான் இது..... இதுதான் ஒரிஜினாலிட்டி....

ஒரு வெள்ளைக்கார பொம்பளைய, அறிமுகமில்லாத ஒரு ஆண் அணுகி, இன்று ஒருநாள் இரவை என்னோடு கழிக்கிறாயா... என் கேட்டால்... அந்த பெண் விருப்பம் இருந்தால் ஒப்புக்கொள்வாள்.... இல்லை என்றால்..."சாரி....." என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள்.....

அதே நம்மூர் பெண்ணிடம் அப்படி கேட்க முடியுமா..... கேட்டால் என்ன ஆகும்.. ஒன்று அந்த பெண்ணே செருப்பை கழட்டி அடிப்பாள்.... இல்லை என்றால்.... அண்ணன்- தம்பி- கணவன் என்ற ஆண் துணைகளை விட்டு அடிக்கச்சொல்வாள்.... ஏனென்றால்... ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் ஆழ்மனதில் ஊறிப்போன கலாச்சாரம்..... உரிமை உள்ளவன் மட்டுமே ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்று காலம் காலமாய் நாம் ஏற்படுத்திய பழக்கம்...

கார்பொரேட் விளம்பர மோகத்தில் ஏமார்ந்து மேற்கத்திய கலாச்சார வர்ணம் பூசிக்கொண்டு இருந்தாலும் கூட, நேரடியாய் சீண்டப்படும்போது ஒரு பெண்ணுக்குள் உறைந்திருக்கும் இந்திய பெண் விழித்துக்கொள்கிறாள்....

அந்த இந்தியப்பெண்ணின் சீற்றம் தான் இந்த கோபம்....!!! இந்த கோபத்திற்கு முன்னால் கார்பொரேட் சைத்தான்களின் மாயவலை வெகுகாலம் நிலைக்க முடியாது....!!