புதன், 28 ஜூன், 2017

அத்திரிபாச்சி பூநூல் கொழுக்கட்டை

ஒரு ஊர்ல இருந்து ஒருத்தன் ரொம்ப தூரம் இருக்க சொந்தக்காரங்க வீட்டுக்கு போனான்.... அங்க அவனுக்கு கொழுக்கட்டை செஞ்சு சாப்பிட கொடுத்தாங்க... இவன் அதுக்கும் முன்னாடி கொழுக்கட்டை சாப்பிட்டதே இல்ல... இவனுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.... இன்னும் கொஞ்சம் கொடுங்கன்னு கேட்கவும் வெக்கம்.... சோ.... வீட்ல போய் பொண்டாட்டிகிட்ட கொழுக்கட்டை செய்ய சொல்லி சாப்பிடனும்னு நினைச்சுகிட்டே வீட்டுக்கு கிளம்பி வந்தான்....

கொழுக்கட்டையோட பேர் மறந்திட கூடாதுன்னு "கொழுக்கட்டை" "கொழுக்கட்டை"ன்னு வழி எல்லாம் சொல்லிகிட்டே நடந்து வந்தான்... வர வழில ஒரு இடத்துல சின்னதா ஒரு கால்வாய் இருந்துச்சு.. அத தாண்டி தான் போகணும்.. அப்படி தாண்டும்போது "அத்திரி பாச்சி.."ன்னு சொல்லிகிட்டே தாண்டினான்.... கொழுக்கட்டைன்கிற பேர மறந்துட்டான்...

அதுக்கப்புறம் "அத்திரி பாச்சி.. அத்திரி பாச்சி.."ன்னு சொல்லிகிட்டே வீடு வந்து சேர்ந்தான்.... பொண்டாட்டிகிட்ட வந்து "எனக்கு அத்திர்பாச்சி செஞ்சு கொடு"ன்னு கேட்டான்...
அவளுக்கு ஒன்னும் புரியல.... அதென்னய்யா அத்திரி பாச்சி.. ன்னு கேட்டா.... சொந்தக்காரங்க வீட்டுல செஞ்சு கொடுத்தாங்காடி ன்னு சொன்னான்.. இவளுக்கு ஒன்னும் வெளங்கல... என்னதான்யா சொல்ற நீ.. அத்திரி பாச்சின்னு ஒரு பலகாரமும் இல்லையேன்னு சொன்னா.... இவனுக்கு கோபம் வந்துட்டுது... இது கூட தெரியாம என்னடி நீ... ன்னு அவல போட்டு அடி பின்னி எடுத்துட்டான்....இவ அழுதுகிட்டே படுத்திருந்தா.. அப்போ பக்கத்து வீட்டு ஆத்தா வந்து... என்ன ஆச்சுன்னு கேட்டிருக்காங்க.... அவ விஷயத்த சொன்னா.. அந்த ஆத்தாவுக்கும் வெளங்கல.... அய்யய்யோ இப்படி கொழுக்கட்டை மாதிரி வீங்கி கிடக்கே.. இப்படியா அடிப்பான் ஒரு பொம்பளைய....ன்னு இரக்கப்பட்டாங்க...

இப்போதான் நம்ம ஆளுக்கு கொழுக்கட்டை ஞாபகம் வந்துது.... ஆமா ஆமா.. கொழுக்கட்டை கொழுக்கட்டை ன்னு கூவினான்....

கத அம்புட்டு தானா....?? வழக்கமா நீ கதையோட சேர்த்து சமகால விஷயத்த கோர்த்து விடுவியே....

விட்டுட்டா போச்சு....

அந்த பெரிய மனுஷன் பாப்பார பய எல்லாம் உங்கள படிக்க விடாம சாமி கண்ணா குத்தும்.. பாவம் அது இதுன்னு கெளப்பி விட்டிருக்கான் டா... நீங்களும் நல்லா படிச்சு அவனுங்கள விட ஒரு படி மேல போகனும்டா.. அப்படிங்கிற அர்த்தத்துல பூணூல் காரனுங்கன்னு சொன்னான்... ஆனா இந்த முட்டாப்பய கூட்டமோ... அந்த தாடிக்கார கெழவன் சொன்னத மறந்துட்டு வெறும் பூநூல மட்டும் புடிச்சுகிட்டு தொங்குரானுங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக