வியாழன், 29 ஜூன், 2017

ஒரு மானுட குமுறல்

Go..Grab your Sexual Rights..
Image may contain: one or more people
ஓத்தா...ஒம்மால...பாடு...

எத்தன பொண்ணுங்களால இந்த வார்த்தைகள வாய்விட்டு சொல்ல முடியும் ?

சொல்ல முடிஞ்சாலும், அந்த வார்த்தைக்கே உரிய வீரியத்தோட சொல்ல முடியுமா ?

எத்தன பொண்ணுங்களால A ஜோக்க கூச்சமில்லாம ஜோக்காவே ரசிச்சி சொல்ல முடியும் ?

எத்தன பொண்ணுங்களால நண்பர்கள் மத்தியில ஒரு தோழன் ரெட்டை அர்த்தத்துல காமெடி பண்ணா, அது புரிஞ்சதா காமிச்சிக்க முடியும்?

புரிஞ்சதா காமிச்சாலும், பசங்க எல்லாரும் சிரிக்குற மாதிரி 'கெக்க பெக்க'ன்னு சிரிக்க முடியுமா ?

எத்தன பொண்ணுங்க ரொமான்ஸ் அல்லது செக்ஸ் வீடியோஸ் பாப்பீங்க ?

பாத்ததுக்கப்புறம் இதெல்லாம் தப்புங்கிற உணர்வு ஒரு துளி கூட இல்லாம இருக்க முடியுமா ?

எத்தன பொண்ணுங்க காதலன் அல்லது கணவன் கிட்ட "உன் மேல என்னனு தெரியல இன்னைக்கு ரொம்ப ஆசையா இருக்குடா"ன்னு சொல்லுவீங்க ?

சொன்னதும் "அடியேய்..உனக்கு எப்பப்பாரு இதே யோசனை தானா"ன்னு பதில் வந்தா "ஆமா.. எப்போவும் உன் மேல் இதே யோசனை தான்டா என் கிறுக்கா"னு அதே ஆசையோடவே சொல்ல முடியுமா ?

பதில் எதுவும் சொல்லாட்டியும், வாய்விட்டு ஆசைய சொன்னதுக்காக குற்ற உணர்வு இல்லாம, 'இந்த மாதிரி விஷயத்த நா முதல்லஆரம்பிக்க கூடாதோ'ன்னு யோசிக்காம இருக்க முடியுமா ?

இதுல நெறைய கேள்விகளுக்கு மாட்டேன், முடியாதுன்னு பதில் சொன்னிங்கனா, இயற்கையா பெண்ணுக்கு இருக்குற அதீத காம உணர்ச்சிய நீங்களே கொஞ்ச கொஞ்சமா கம்மி பண்ணிட்டு வர்றீங்கன்னு அர்த்தம்.

இல்லாத 'கற்பு'ன்னு ஒண்ண பொண்ணுங்க மண்டைல விதைக்குறதுக்கும் அப்படி ஒண்ணு இல்லவே இல்லன்னு ஆணித்தரமா தெரிஞ்சாலும் அதுலயிருந்து வெளிய வர முடியாதபடி சமூகத்த கட்டமைக்குறதுக்கும் எத்தன சீதை கதைகள், எத்தன இதிகாசங்கள், எத்தன கலாச்சார காவியங்கள், எத்தன நூற்றாண்டுகள் ஆகிருக்கும்னு தெரியல. அந்த mental lockக ஒடச்சிட்டு வெளிய வரவே முடியாத நிலைமையில, இன்னொரு mental lock தயாராகிட்டு இருக்குன்னு தெரியுமா ?

ஒரு பொண்ண எல்லா விஷயத்துலயும் ஆண் அடக்கிட்டே வந்தாலும், கலவியில அவளோட உச்சநிலை இன்பத்த முழுசா குடுக்க முடியாம, அவளோட திருப்தியின்மைனால ஆண்மையின் பெருமைய கொண்டாட முடியாம, மாற்றான் மேலுள்ள அவளோட ஆசைய பொறுத்துக்கவும் முடியாம, கற்புக்கு செஞ்ச மாதிரியே அவளோட காம உணர்ச்சிகள அவள வச்சே மட்டுப்படுத்த உருவாக்குன பூட்டு தான் 'குடும்ப பொண்ணு' கான்செப்ட்.

கெட்ட வார்த்தைலாம் உனக்குத் தெரியுமா ?

என்னது பேச வேற செய்வீயா ?!!

அந்த A ஜோக் எனக்கே புரியல, உனக்கு எப்படி புரிஞ்சது ?

என்ன இந்தப் பொண்ணு A ஜோக்குக்கு இப்படி பையன் மாதிரி சிரிக்குறா ?!!

"இவ ஹர ஹர மஹாதேவக்கி என்ன, சமையல் மந்திரமே பாத்திருப்பாடா"

என்ன சொன்ன, செக்ஸ் வீடியோஸ் பாப்பியா..உனக்கே அசிங்கமா இருக்காதா இதுலாம் பாக்குறமேன்னு ??

அடியேய்..எப்பப்பாரு உனக்கு இதே யோசனை தானா?

நீ எல்லாம் ஒரு குடும்ப பொண்ணா..

குடும்ப பொண்ணுனா இப்டிலாம் பேசவே மாட்டாங்க. புருசன் கூப்டதும் வெக்கம் மட்டும் தான் படுவாங்க. அவங்களுக்கு திருப்தி இல்லனாலும் அத வெளிப்படுத்தாம, கணவனோட சந்தோசத்துக்காக "நீங்க என்ன ரொம்ப சந்தோசமா வச்சிருக்கீங்க"ன்னு தான் சொல்லுவாங்க. உன்ன மாதிரி இவ்ளோ கேவலமா இருக்க மாட்டாங்க. இப்படி பேசுறியே முதல்ல நீயெல்லாம் ஒரு பொண்ணா ??

இந்த மாதிரி பல வருசமா சொல்லி சொல்லித் தான் நம்ம பாட்டி, அம்மா எல்லாம் குடும்ப குத்துவிளக்காவே இருந்தாங்க.. இருக்கவும் செய்றாங்க.

அவங்கள விடுங்க இந்தக் காலத்துப் பொண்ணுங்களே "குடும்பத்துக்கு ஏத்தப் பொண்ணு"னு சொன்னா சந்தோசமாவும், மேல உள்ள எதாவது ஒரு கேள்வி இல்லனா கேலிய சந்திச்சா அசிங்கமாவும் தான நெனைக்குறாங்க.

இந்த mental lockக உடைக்குறது கண்டிப்பா ஒரே நாளுல சாத்தியம் கெடையாது. 'என்னோட பாலியல் உணர்வு இயற்கை எனக்குக் குடுத்த வரம். இத ஏன் நான் மட்டுப்படுத்தணும். என் புருசன்ட இத கேக்குறதுல என்ன அசிங்கம் இருக்கு. ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம்னு பாட்டே பாடுறங்க, நா என்னோட ஆசைய சொன்னா புரிஞ்சிக்க மாட்டாங்களா என்ன' - இப்படி நமக்குள்ளேயே நெறைய கேள்விக் கேட்டு, சில பதில்கள் அவமானமா உணர வச்சாலும் மறுபடியும் யோசிச்சு, சமயம் பாத்து புரிய வச்சி, இப்பத்துலயிருந்தே கொஞ்ச கொஞ்சமா வெளிய வர முயற்சி செய்வோம் தோழிகளே.

Try to break your mental lock and grab your sexual rights my dear women


மணி மண்டபம்

மணிமண்டபம் என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம்..
தகவல் தொடர்பு சாதனங்களை வரிசைப்படுத்த சொன்னால்.. போன், இ.மெயில், சமூக வலைத்தளங்கள் , கடிதங்கள், தந்தி என வரிசைப்படுத்தலாம்..


இன்னும் கொஞ்சம் யோசித்தால்... சங்கேத சப்தங்கள்.. கலங்கரை விளக்கம், ஒளிக்கற்றைகள்..
வாகனங்களில் இருக்கும் ஹார்ன், இண்டிகேட்டர்.. போன்றவை.. இன்னும் பின்னோக்கி பயணித்தால்... ஒற்றர்கள், புறா, கழுகு போன்றவை...
இவைகள் எல்லாமே ஒரு செய்தியை வேறொருவருக்கு கொண்டு செல்ல (சொல்ல ) பயன்படுத்தப்படுபவை..


அப்படியான ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான் மணிமண்டபம்...

Image may contain: plant, sky, tree and outdoor
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை தொடங்கிவிட்டதை நாற்பது மைல் தொலைவில் இருக்கும் பாளையங்கோட்டை பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அறிவிக்க
அப்போது இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... அதாவது கோயிலில் பூஜை தொடங்கும் நேரத்தில் அங்கிருக்கும் மணி ஒலிக்கும்.. அந்த சப்தம் கேட்கும் தூரத்தில் இருக்கும் இன்னொரு மணி உடனே ஒலிக்கச்செய்யப்படும்... இப்படியாக மணியோசை கேட்கும் தூரத்தில் இருக்கும் அடுத்தடுத்த மணிகள் ஒலிக்க.... “ஒலிவேகத்தில்” பூஜை தொடங்கிவிட்ட தகவல் மன்னரின் காதுகளை எட்டும்... அவரும் உடனே அரண்மனையில் பூஜையை தொடங்குவார்...


மணி கட்டப்பட்ட (மணிக்காக கட்டப்பட்ட) மண்டபங்கள் “மணி மண்டபம்”..

சமகாலத்தில் உள்ளூர் கவிஞர்கள்/ஜாதி தலைவர்கள் முதல்... இங்கிலாந்து பென்னிகுக் வரை ஒரு நினைவு மண்டபத்தை கட்டி அதற்கு “மணிமண்டபம்” என்று எதற்காக பெயரிட்டார்கள் என்பதே சாமான்யனின் சந்தேகம்...
விபரமறிந்தவர்கள் பகிர்தல் நலம்...!!! 

தோல்வியடைந்த மாற்று சிந்தனை

இன்று நம் வாழ்க்கை முறைக்கு உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களின் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி வரலாறு இருக்கும்.. மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாக்கப்பட்ட ஒரு பொருள் உபயோகத்திற்கு உகந்ததல்ல என ஒதுக்கப்பட்டிருக்கும்.. உதாரணமாக... சிகரெட் குடை, ஒற்றை சக்கர வாகனம் போன்றவை..


இதில் சிகரெட் குடை என்பது சிகரெட் ஹோல்டரின் முன்பகுதியில் சிகரெட் நட்டு வைக்கப்பட்டிருக்கும்.. அதற்கு மேலே ஒரு குடை இருக்கும். ம
ழை காலத்தில் சிகரெட் நனைந்து விடாமல் பற்றவைக்க இப்படி 
ஒரு கண்டுபிடிப்பு
 Image may contain: one or more people
ஒற்றை சக்கர வாகனம் என்பது.. ஒரு பெரிய சக்கரத்தின் நடுவில் அமைக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணிக்கும் வாகனம்.. இது பாதுகாப்பான பயணத்திற்கு உகந்ததல்ல என்று ஒதுக்கப்பட்டது...

No automatic alt text available.
அதே நேரம் சில ஆராய்ச்சி தவறான வழியில் சென்றதால்... உருவான பொருள் மிகப்பெரிய வெற்றியை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்த கதைகளும் உண்டு...

நிற்க... நாம் விஷயத்திற்கு வரலாம்..
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் 175 ஏக்கர் பரப்புள்ள சில்வர் லேக் என்ற நீர்த்தேக்கத்தில் சுமார் 96 மில்லியன் பிளாஸ்டிக் பந்துகள் கொட்டப்பட்டன.... இந்த பந்துகள் சம அளவில் பரவி நீர் தேக்கத்தின் மேல் மட்டத்தை மூடி விட்டதால்... நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டது... மிகக்கடுமையான கோடை காலத்தில் நீர் சேமிப்பை கையாள இந்த முறையை அவர்கள் செய்தார்கள்... இது ஒரு விஞ்ஞான யுக்தி...

அப்படியான ஒரு முயற்சிதான் தமிழக அமைச்சர் திரு செல்லூர் ராஜு மற்றும் அதிகாரிகளால் மிக சமீபத்தில் வைகை அணையில் சோதனை செய்யப்பட்டது.. எப்போதும் மிக குறைந்த செலவில் நிறைவான பயனை எதிர்பார்க்கும் சமயோசித இந்திய மூளையின் சிந்தனைதான் இது...


இது ஒரு கிண்டல் செய்யப்பட வேண்டிய விஷயமே இல்லை... ஒருவேளை இந்த முயற்சி வெற்றி பெற்றிருக்குமாயின் எத்தனை ஆயிரம் கன அடி நீர் சேமிக்கப்படும் தெரியுமா??

பிளாஸ்டிக் பந்துகள் உருளையாக இருப்பதால் ஒன்றின் மீது ஒன்றாக ஏற முடியாது... ஆனால் தெர்மோகோல் அட்டைகள் பரந்து தட்டையாக இருப்பதால் காற்றில் பறந்தும் ஒன்றின் மீது ஒன்றாக ஏறியும் விட்டன...

Image may contain: outdoor
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் 175 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்த்தேக்கத்தை ஆவியாதலில் இருந்து பாதுகாக்க கோடிகளில் செலவழிக்க முடியும்.. ஆனால்.. நாம் அப்படி அல்ல.... எப்போதுமே நம்மிடம் இருப்பதை வைத்து குறைந்த செலவில் பலனடையவே நாம் முயற்ச்சிப்போம்... அப்படியான ஒரு முயற்சிதான் அந்த அதிகாரிகளும் –அமைச்சரும் செய்தது...

வழக்கம் போல ஒரு கேவலமான விஷயத்தை பரபரப்பாக்கி காசு பார்க்கும் ஊடகங்கள்.. இந்த ஒரு நல்ல முயற்சியை கிண்டல் செய்தும்- கேலி செய்தும் செய்தியாக்கி விட்டன...

எப்போதும் போல ஊடகங்களை பின்பற்றியே ஆமாம் சாமி போட்டு பழக்கப்பட்ட நாம் இப்போது மட்டும் யோசிக்க போகிறோமா என்ன??

நிச்சயமாக இந்த அறிய சிந்தனையை மேலும் மெருகேற்றி மேம்படுத்தி செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றியை எட்ட முடியும்... அமெரிக்கர்கள் கொடிகளில் செலவு செய்து நடைமுறை படுத்திய விஷயத்த.. சில லட்சங்களிலேயே நம்மால் செய்துகாட்ட முடியும்..

CHILDREN OF HEAVEN

Image may contain: 2 people, people standing and outdoor
ஈரானின் தலைநகர்... டெஹ்ரானின் ஒரு ஏழ்மை நிறைந்த பகுதி... தங்கையின் (சாரா ) கிழிந்துபோன காலணியை தைக்க கொண்டுபோகும் அண்ணன்(அலி) .. அதை தைத்து வாங்கி ஒரு இடத்தில் மறைவாய் வைத்துவிட்டு, வேறு வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் வந்து பார்க்கையில் அந்த காலனி காணாமல் போய் விடுகிறது.... 



ஏழை தந்தையுடன் சொல்லி வேறு வாங்கித்தர சொன்னால் அடிப்பாரோ என்று பயந்த அந்த சிறுவர்கள், பள்ளிக்கூடம் செல்வதற்காக அண்ணனின் ஒரே காலணியை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு போவது வலியின் உச்சம்...
காணாமல் போன காலணியை உடன் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்து வர... அவளிடம் நேரடியாக கேட்காமல் அவளை பின் தொடர்ந்து அவளது வீடுவரை செல்கிறாள்.. சாரா...! காலணியை பறிகொடுத்த சிறுமி... அங்கு.. கண்பார்வை இல்லாத அவளின் தகப்பனின் நிலைகண்ட இந்த பிஞ்சு, அந்த காலணியை பற்றி எதுவும் கேட்காமல் திரும்பி விடுகிறது...



வேறொருநாள்... தான் தொலைத்த காலணியை அணிந்துவரும் சிறுமி, வேறொரு புதிய காலணியை அணிந்து வர... இப்போதாவது தன்னுடைய காலணி கிடைத்துவிடாதா.... என்ற ஆவலில் அந்த சிறுமியிடம்..”எங்கே உனது பழைய காலணிகள்..” என கேட்க... அவற்றை தன் தாயார் பழைய பொருட்கள் வாங்குபரிடம் கொடுத்துவிட்டதாய் சொல்கையில் நம் கதாநாயகி சிறுமி சாராவின் கண்களில் தெரியும் ஏமாற்றம் எமனையும் கலங்கவைக்கும்...



இப்படியான நிலையில் பள்ளிகளுக்கிடையே நடத்தப்படும் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டால் இரண்டாம் பரிசாக ஒரு புதிய காலணி கிடைக்கும் என்ற தகவல் கிடைத்த உடன், தங்கை “அண்ணா... எப்படியாவது இரண்டாம் பரிசு வாங்கி விடு..” என வேண்டுகோள் வைக்க.... நம் கதாநாயக சிறுவனும் இரண்டாம் பரிசை குறிவைத்து களமிறங்குகிறான்...

வெற்றியாளர்கள் வரிசையில் மூன்றாவதாக வந்துகொண்டிருக்கையில்.. நான்காவதாக வரும் வேறொரு சிறுவன் வேண்டுமென்றே காலை இடறிவிட.... விழுந்துவிடுபவனை பின்னால் வருபவர்கள் எல்லாம் முந்தி விடுகிறார்கள்... தங்கையின் தொலைந்துபோன காலணி... ஒருஜோடி காலணியை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடும் வேதனை.. எல்லாம் கண்முன்னே நிழலாட... வெறிகொண்டு எழுந்து ஓடுபவன்.. எல்லோரையும் முந்தி சென்று முதலாவதாய் வெற்றிக்கோட்டை தொடுகிறான்... பள்ளி ஆசிரியர்கள்.. சக மாணவர்கள்... போட்டி நடத்தியவர்கள் எல்லோரும் கொண்டாட.... ஆனால் இரண்டாம் பரிசாக காலணியை குறிவைத்து ஓடிய நம் கதாநாயக சிறுவனால்.. முதலாவதாக பெற்ற வெற்றியை முழுமையாக ஏற்கவோ.. கொண்டாடவோ முடியவில்லை.... கோப்பையுடன் வீடுதிரும்புபவன் வீட்டிற்குள் செல்லாமல் வெகுவாக தேய்ந்து கிழிந்த தன்னுடைய பழைய காலணியை கழற்றிவிட்டு புண்பட்ட காலை நீருக்குள் வைத்தபடி புழுங்குவதாய் கதை முடிகிறது..

இரண்டு சிறுவர்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு படத்தை எடுக்கமுடியுமா... என ஆச்சர்யப்பட வைக்கிறது...

(நிற்க... நம்மூர் காக்காமுட்டையும் இந்த ரகம் தான் என்பவர்கள் கருத்தும் ஏற்கப்படுகிறதுஆனாலும்.. இந்த படம் வெளியானது 1999 – ஜனவரி 22... ஆகவே நம்மூர் இயக்குனர் இந்த படத்தை கண்டு.. அதனை மாற்றி யோசித்து கூட காக்காமுட்டையை எடுத்திருக்கலாம் )


மாஜித் மாஜிதி அவர்கள் எழுதி இயக்கி இருக்கும் இந்த பெர்சிய மொழி திரைப்படம் ஒரு நெகிழ்வின் உச்சம்... இணையத்தில் பார்க்க கிடைக்கிறது.... நீங்களும் பார்க்கலாமே...

(பெர்சிய மொழி எல்லாம் உனக்கு தெரியுமா என கேட்கவேண்டாம்... உணர்வுகளை உணரவும் புரிந்துகொள்ளவும் முடிந்தவர்களுக்கு மொழிகள் அனாவசியம்..)

Need NEET

No automatic alt text available.
எனக்கு தெரிந்தவரை மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவம் சார்ந்த துறைகளில் பணிபுரிய வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளில் இருக்க கூடிய உடல்நலம் சார்ந்த அமைச்சகத்தில் (ministry Of Health / Supreme Council Of Health) பதிவு செய்து அவர்கள் நடத்தும் தேர்வில் வெற்றிபெற்று உரிமம் (License) பெற வேண்டும்.வேறு எந்த நாடுகளில் தங்க பதக்கத்துடன் மருத்துவ பட்டம் பெற்றிருந்தாலும் கூட இந்த தகுதித்தேர்வில் வெற்றிபெற வில்லை என்றால் அவர்கள் இந்த நாடுகளில் மருத்துவம் சார்ந்த தொழில்களில் (மருத்துவர், செவிலியர்,மருத்துவ தொடர்புடைய மற்ற வேலைகள்) ஈடுபட முடியாது..


மேற்கத்திய, தெற்காசிய நாடுகளிலும் இந்த வழக்கம் தான் பின்பற்றப்படும் என நம்புகிறேன்.. (அதுபற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை )
இந்தியாவில் மருத்துவம் பயில்வதற்கான தகுதியை நிர்ணயிக்க எல்லோருக்கும் பொதுவான ஒரு தேர்வை நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடிவெடுத்தால்.... மற்ற அனைத்து மாநில அரசுகளும் மக்களும் அந்த போட்டிக்கு தயாராக இருக்கும் நிலையில்.. தமிழக ஆட்சியாளர்களும்-அரசியல்வாதிகளும் மிக மூர்க்கமாய் எதிர்க்கிறார்கள்..


ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை சற்று யோசித்து ஐம்பது ஆண்டுகால அரசியல் நிகழ்வுகளை கிளறிப்பார்த்தால்... தமிழக மாணவர்களை எப்படி இந்திய மாணவர்களுடன் போட்டியிட முடியாத/ பயப்படும் அளவிற்கு மழுங்கடித்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது...

ஒடுக்கப்பட்ட உங்களை தூக்கி விடுகிறேன் என்று சொல்லி சொல்லியே அவர்களை குனியவைத்து ஆட்சி பீடத்திர்ல் ஏறியவர்கள்... நிஜமாகவே திறமையானவர்களை ஜாதீய காரணம் காட்டி காலை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது மனச்சாட்சியுடன்- தொலைநோக்கு பார்வையுடன்- நியாயமாக யோசிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்...

ஒரு சமூகத்தை உயர்த்தும் முறை என்பது அவர்களை விட முன்னேறிய சமூகத்துடன் போட்டியிடும் அளவிற்கு அவர்களின் திறமையை வளர்ப்பதுதானே அன்றி... முன்னேறியவனை கீழே இழுத்து விட்டு எல்லோரும் சமம் என்று சொல்வது அல்ல... அப்படி கடந்த ஐம்பது வருடங்களாய் குனியவைத்து குதிரை ஏறியவர்களால் ... இன்று ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் அகில இந்திய போட்டியாளர்களை சந்திக்க தயங்குகிறார்கள்.... அப்படி அவர்களை சந்திக்க போட்டியாளர்கள் தயாராக இருந்தாலும் கூட..... ஐம்பது வருடமாய் நாம் இவர்களை மழுங்கடித்திருப்பதை கண்டுள்(கொல்)வார்களோ என்ற பயத்தில்.... “எங்களுக்கு அந்த போட்டியில் இருந்து விலக்கு அளித்து நேரடியாக பரிசினை வழங்கிட வேண்டும் “ என்று ஒரு கேவலமான கோரிக்கையை முன்வைத்து நாடகமாடுகிறார்கள்...


“இது உங்களுக்கு அவமானமாக இல்லையா.... உங்கள் மாணவர்கள் தகுதி இவ்வளவுதானா...?” என்று உயர்நீதிமன்றம் காறி உமிழ்ந்திருப்பது ஒரு வரலாற்று கேவலம்...

இடஒதுக்கீட்டில் பெற்றுக்கொடுத்த வெற்றிப்பழம் இப்போது கசக்கிறது...அப்படியானால்... இட ஒதுக்கீடே கூடாதா?? அவர்களை முன்னேற்றும் வழிதான் என்ன???

நிச்சயம் அவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.... காலம் காலமாய் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் மரபணுக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மாறாது... அதற்கு அவர்களை உற்சாகமூட்டும் நிறைய வசதிகளை செய்து கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால்... அந்த சலுகைகள் பயிற்சி காலத்தில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமே தவிர... போட்டிகளில் அல்ல... என்பதை உணர வேண்டும்... ஆட்சியாளர்களின் நோக்கம் அந்த ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளே அன்றி... அவர்களின் முன்னேற்றம் அல்ல....


இப்போது அவர்கள் சொல்லிக்கொள்ளும் இந்த முன்னேற்றம் வெறும் எலும்பு துண்டு... இந்த எலும்பு துண்டை வைத்துக்கொண்டு உள்ளூரில் உதார் விடலாம்...
அகில இந்திய போட்டியாளர்களையே சமாளிக்க பயப்படும் இவர்கள் எப்படி உலக போட்டியாளர்களை எதிர்கொள்வார்கள்??

இனியாவது அந்த அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை கண்டுகொள்வார்களா தமிழக மக்கள்????
 

படரும் ஒரு புது அரக்கன்


அடுத்த பத்து நாட்களுக்குள் அகற்றியே தீரவேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கிறது... உயர்நீதி மன்ற உத்தரவை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை என பொதுமக்கள் பொங்கல் வைக்கிறார்கள்...
ஏதோ முந்தாநாள் இரவில் யாரோ விதைத்துவிட்டு சென்ற கருவேல மரங்கள் நேற்று பகல் எல்லாம் நிலத்தடி நீரை உறிஞ்சி காலி செய்துவிட்டதால் இன்று தமிழகமே வறண்டு போய் விட்டதை போலவும்.. இன்று மதியம் தூக்கத்தின் போது “கடவுள்” அவர்கள் கனவில் வந்து... 
“அடேய்களா.... உடனே அந்த சீமைக்கருவேல மரத்த எல்லாம் வெட்டலன்னா உங்க சந்ததியே அழிஞ்சு போய்டும்டான்”னு சொன்னதை போல உயர்நீதிமன்றம்-அரசியல் தலைவர்கள்-பொதுமக்கள் எல்லாம் திடீர் ஞானோதயம் பெற்று பரபரப்பாகி இருக்கிறார்கள்...
இப்போதாவது விழித்துக்கொண்டார்களே என்று ஒருபக்கம் பாராட்ட தோன்றினாலும்... சில பழைய நினைவுகளை கிளறிப்பார்ப்பது அவசியமாகிறது...
சுமார் நாற்பதாண்டுகாலம் முன்பு புதுக்கோட்டை-ராமநாதபுர மாவட்டங்களில் வான்மழை பொய்த்து மிகப்பெரிய வறட்சி நிலவி விவசாயம் அற்றுபோய்விட்ட காலம்... ஏரி -குளங்கள்-கம்மாய்கள் எல்லாம் வறண்டு வெடித்துப்போய் மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போன கோர வருடங்கள் அவை.. தம்மையும் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டி அப்பகுதி மக்கள் கையில் அகப்பட்ட சுமக்க முடிந்த உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தஞ்சை நாகை மாவட்டங்களுக்கு பஞ்சம் பிழைக்க வந்தார்கள்... அப்படி நாற்பதாண்டுகளுக்கு முன்பு சொந்த நாட்டிலேயே அகதிகளாய் புலம் பெயர்ந்து எங்கள் பகுதிகளில் குடியேரிவர்களில் சிலர் , எங்கள் பகுதி மக்களின் அன்பால் ஈர்க்கப்பட்டு இன்றளவும் கூட மீண்டும் அவர்கள் பகுதிக்கு மீள்குடியேற விருப்பமற்று எங்கள் பகுதியிலேயே தங்கிவிட்டதற்கு நிகழ்கால சாட்சியங்கள் நிறைய உண்டு...
அப்படி வறட்சி கோரத்தாண்டவமாடியே வேளையில்தான் இந்த சீமைக்கருவேல மரங்களை அரசே அரசு செலவில்....(மக்கள் வரிப்பண செலவில்) ஏரிகளில் நடவு செய்தது.... அடுத்தடுத்த வருடங்களில் இவர்கள் அதிவேகமாக அடுத்தடுத்த மாவட்டங்களுக்கும் பரவி இன்று ஒட்டு மொத்த தமிழகத்திலும் வியாபித்து நிற்கிறது...(இதன் பௌதீக-ரசாயன-தாவரவியல் தீமைகளை ஏற்கெனவே பற்பல அறிஞர் பெருமக்கள் விரிவாக சொல்லிவிட்டபடியால்....அதை நாமும் சொல்ல வேண்டியதில்லை ) அன்று விதைத்த அந்த விதைகள் தான் இன்று விருட்சமாய் வளர்ந்து வியாபித்து மானுட தீமைக்கு ஒரு பெருங் காரணமாய் நிற்கிறது.... இப்போது இதை வெட்டிக்களைய அரசு செலவில் (மக்கள் வரிப்பணத்தில்) அடுத்த திட்டம்...
இன்னொரு விஷயம்... ஏறக்குறைய அதே காலகட்டத்தில்... அல்லது ஐந்தாறு வருடங்கள் கழித்து நெய்வேலி காட்டாமணி என்று சொல்லக்கூடிய ஒருவகை செடி எங்கள் பகுதிகளில் அறிமுகமானது... அப்போது இதன் ஆக்டோபஸ் சக்தி அறியாதவர்கள் தங்கள் தோட்டத்திற்கு வேலி அமைக்க.... அடுப்பெரிக்க.... அதன் இலைகளை வைத்து மாலை கட்ட... என பல்வேறு அரிய (!!) பயன்பாடுகளுக்காக வீட்டிலேயே கூட நடவு செய்தார்கள்... வீடுகளில் நடப்பட்ட சிற்சில செடிகளை நாளடைவில் அழித்து விட்டார்கள்.... ஆனால்... யாராலும் அழிக்க முடியாத மாபெரும் சக்தியாய் வளர்ந்த அந்த செடி தன் ஆக்டோபாஸ் கரங்களால் பல ஏரி- குளம்-கால்வாய்களை சுவடு தெரியாமல் தின்று தீர்த்திருப்பது சமகால வரலாறு... முட்டி வலியால் வீட்டுக்கும் வாசலுக்கும் நடக்க கூட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு எல்லாம் இந்த நெய்வேலி காட்டாமணக்கு தூர்த்துவிட்ட ஏரிகள் வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றன...
இவ்வளவுக்கு பிறகும் கூட நாம் தொலைத்துவிட்ட ஏரிகளை பற்றி கவலைப்படாமல் இன்று ஆட்சியாளர்கள் வீசி எரியும் நூறுநாள் வேலைவாய்ப்பு என்ற எலும்புத்துண்டை நோக்கி மக்கள் எனும் நாய்கள் ஆவேசமாய் பாய்வதை அருவருப்ப்போடுதான் பார்க்க முடிகிறது...ஆக.... இன்று விதைக்கப்படும் விஷ விதைகள் சற்றேறக்குறைய அரை நூற்றாண்டு காலம் கழிந்தோ-அதற்குள்ளாகவோ மானுடக்கருவருக்கும் விருட்சமாய் வளரும் என்பதற்கு சமகால சீமைக்கருவேல மரங்களும்- நெய்வேலி காட்டாமணியுமே மௌன சாட்சிகள்...
இன்னொரு விஷயம்.... தற்போது எங்கள் பகுதியில்... (தமிழகம் முழுவதுமாக கூட இருக்கலாம்..) ஒரு புதுவகையான செடி வளர்ந்து வருகிறது... சற்றேறக்குறைய சூரியகாந்தி பூக்களை ஒத்த மஞ்சள் நிற பூக்களுடன் ஓங்கி வளரும் குத்து செடியான இதன் பெயர் எங்கள் பகுதியில் நான் விசாரித்தவரை யாருக்குமே தெரியவில்லை...
இது எங்கிருந்து.. யார் மூலம் எங்கள் பகுதிக்கு வந்தது என்ற கேள்விக்கான விடை கிடைக்காமல்.. கேள்வியாய் மட்டுமே நிற்கிறது.... அந்த சீமைக்கருவேல மரங்களை போல.... அந்த நெய்வேலி காட்டாமணி செடியை போல.... இந்த செடியும் ஏதோ ஒரு அழிவை முன்னெடுத்தே விதைக்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.... இதம் மீது சந்தேகம் எழ சில காரணங்களும் இருக்கிறது.... ஒருகுச்சி வெட்டி நட்டாலும் உடனே தளிர்த்து வளர்கிறது... மற்ற செடிகள் எல்லாம் தயக்கத்துடனே வளரும் இடங்களில் கூட(அதாவது நிலத்தின் சத்து குறைந்த இடங்களில்) இவைகள் செழித்து வளர்கிறது... வெகு வேகமாய் பரவுகிறது... (நெய்வேலி காட்டாமணி கூட இப்படித்தான் அதிவேகமாக பரவியது)
எதையும் ஆராயாமல் வளர்த்துவிடும் மாக்கள் அடங்கிய தமிழ் சமூகம் இப்போது இதையும் வீட்டுக்கு வீடு வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்... இன்னும் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அரசும் ஆராய்ச்சியாளர்களும் அறிக்கை தயாரிப்பார்கள்.... இந்த செடிகளால் இன்னென்ன தீமைகள் நிகழும் என்று... அப்போது வழக்கம் போல தமிழ் சமூகம் பொங்கல் வைக்கும்...
வழக்கம் போல கார்பொரேட் அரசியல்வாதிகள் தங்கள் கடமையை செய்வார்கள்.... அடுத்த இருபத்தைந்து ஆண்டுகாலத்திற்கு அப்பால் ஒரு அழிவை ஏற்படுத்தும் அடுத்த விதையை விதைப்பதில் மும்முரமாயிருப்பார்கள்.. 

ஏழை விவசாயி என்பது இவர்களுக்கு ஒரு போர்வை

50 ஏக்கர் தென்னந்தோப்பு வைத்திருந்த விவசாயிக்கு 20 லட்சம் கடன்.... வறட்சியால் வாடிய தென்னை மரங்களை ரூபாய் 50 க்கு வெட்டி விற்கும் அவலம்...

# நேற்றைய பாலிமர் செய்தி. ( ஜனவரி 8 - 20017)

Image may contain: one or more people, people standing and outdoor
50 ஏக்கர் தென்னந்தோப்பு வைத்திருந்தவர் 20 லட்சம் கடனில் இருக்கிறார் என்றால்.... நிச்சயம் அவரது வீட்டில் எதோ நிர்வாக சிக்கல் இருப்பதாகவே அர்த்தம்.. ஒரு ஏக்கருக்கு மிகச்சாதாரணமாக 1500 தேங்காய்கள் விளையும் என்றால்... (இது மிக மிக குறைந்த அளவே) 50 ஏக்கருக்கு 50 X 1500 = 75000 தேங்காய்கள் விளையும்... சராசரியாக ஒரு தேங்காய் 5 ரூபாய் என வைத்துக்கொண்டால் (சில நேரம் 3 ரூபாய்க்கும் விற்பனையாகும்.. சில நேரம் 12 ரூபாய்க்கும் விற்பனையாகும்.. ) 5 X 75000 = 375000.00 ரூபாய்கள்...


நிர்வாக- ஆள்கூலி - உர- தண்ணீர் செலவுகள் (பெரும்பாலும் இம்மாதிரியான ஏழை விவசாயிகள் நிச்சயம் இரண்டு-மூன்று இலவச மின் வசதி பெற்ற போர்வெல்/கிணறு வைத்திருப்ப்பார்கள்) என ஒரு லட்சம் வைத்துக்கொண்டால் கூட 50 நாட்களுக்கு ஒருமுறை (சராசரியாக 50 நாட்களுக்கு ஒரு அறுவடை) 275000 ரூபாய் கையில் நிற்கும்...


இவர்களுக்கு 20 லட்சம் கடன் என்றால்... நிச்சயம் அது அடிப்படை தேவைக்காக, அத்தியாவசிய தேவைக்காக வாங்கிய கடனாக இருக்க வாய்ப்பே இல்லை... ஆடம்பரத்தை பெருக்குவதற்காகவோ- ஆறேழு தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதற்காகவோ வாங்கிய கடனாக மட்டுமே இருக்க முடியும்...


நிச்சயம் 50 ஏக்கர் தென்னந்தோப்பு வாடி வதங்குவது என்பது மிக மிக மிக மிக வலி தரும் விஷயம் தான்... ஒரு விவசாயியால் அதை உணர முடியும்... அதே நேரம்.... "பனமரத்துல பாம்பு கொத்த.... தென்னை மரத்துல அன்டை கட்டின கதையாக " என எங்கள் ஊர்பக்கம் சொல்வது போல..... ஏழாவது தலைமுறைக்கு சொத்து சேர்க்க வாங்கிய கடனை எல்லாம் வறட்சியை காரணம் காட்டி வசூல் செய்ய முயல்வது சுத்த அயோக்கியத்தனம்...

இந்த வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அரை ஏக்கர்- ஒரு ஏக்கர் வைத்து கடன் வாங்கி விவசாயம் செய்பவர்களே தவிர.... பண்ணையார்கள் இல்லை....

எப்போதும் போல விவசாயி என்ற போரவைக்கும் புகுந்து இலவச மின்சாரம் முதல் ட்ராக்டர் லோன் தள்ளுபடி வரை அனுபவிக்கும் இம்மாதிரியான பண்ணையார்கள் ஒழிக்கப்பட வேண்டும்... அரசு இலவசமாக கொடுக்கும் எதுவும் ஏழை விவசாயியை சென்றடைவதே இல்லை....


இந்த அரை ஏக்கர்- ஒரு ஏக்கர் விவசாயிகள் மட்டுமே ஒரு போகம் விளையாமல் போனாலும் ஈடேழும்ப முடியாத இழப்பை சந்திப்பவர்கள்... நூறு-இருநூறு ஏக்கர் விவசாயம் செய்பவர்கள் அல்ல... அல்ல... அல்ல...

குறிப்பு: இந்த படத்தில் திரு வாசன் இருப்பது ஒரு தற்செயலான நிகழ்வு

ஒரு சாமான்யனின் கடிதம்...

மதிப்பிற்குரிய திரு மோடி அவர்களுக்கு....
ஒரு சாமான்யனின் கடிதம்...
Image may contain: 2 people, people smiling
கடந்த நவம்பர் எட்டாம் தேதி நள்ளிரவை எட்ட சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் பொழுது நீங்கள் அறிவித்த செய்தி இந்த நாட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டு கருப்புப் பண முதலைகளை புதைக்கப்போகிறது.... என்று நம்பிய பலகோடி மக்களில் நானும் ஒருவன்...

அதை நடைமுறைப்படுத்தும் பொழுது எழுகின்ற இயல்பான சிக்கல்களை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது... அதனால் புரியாதவர்களுக்கு விளக்கி சொல்லி சிலகாலம் சகித்துக்கொள்ள சொல்லி உங்களுக்காக வாதாடவும் முடிந்தது...


உங்கள் நோக்கம் மிக மிக உயர்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.... ஆனால்... அதை நீங்களே நேரடியாக வந்து நடைமுறை படுத்த இயலாது.... உங்கள் தலைமையில் இயங்கும் அரசு இயந்திரத்தின் துருப்பிடித்த தொழிலாளர்களை வைத்துதான் அதை நடைமுறை படுத்த முடியும்...

அந்த துருப்பிடித்த தொழிலாளர்களின் நேர்மை தொடர்ந்து வரும் செய்திகளின் மூலம் உதிர்ந்து கொண்டே இருக்கிறது.... கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் அராசுடமையாக்கப்பட்ட வங்கி முதல்.... ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற உயர்ந்த வங்கியில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரை எவ்வளவு இறுக்கமாய் கருப்புப் பண முதலைகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்பதை இப்போது உணர முடிகிறது...

புதிய நோட்டுக்கள் வெளிவந்து ஐம்பது நாட்கள் கூட ஆகாத நிலையில் இவர்களின் கஜானாக்கள் இப்படி நிரம்பி இருக்கிறது என்றால்.... இவ்வளவு ஆண்டுகளாய் எவ்வளவு பதுக்கி இருப்பார்கள்... இனிவரும் காலங்களில் எவ்வளவு பதுக்குவார்கள்....
இவர்களை வைத்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் திரு மோடி அவர்களே...??? ஒரு பயணத்தை சுமுகமாக முடிக்க வேண்டுமானால்...தொடங்கும் முன்பாக பயணிக்கப்போகும் வாகனத்தை சரி செய்து வைத்துக்கொள்வது அவசியம்... ஆனால்... உங்களின் இந்த சரித்திரப்பயணம் கரடுமுரடான சாலையில்....அதிர்ந்தால் உதிரக்கூடிய பாகங்களை கொண்ட வாகனத்தை வைத்தல்லவா தொடங்கப்பட்டிருக்கிறது...


நீங்கள் இந்திய மக்களிடம் கேட்ட காலக்கெடுவிற்குள் உங்கள் பயணதூரத்தில் பாதியை கூட கடக்க முடியாதோ என்ற அயர்ச்சி ஏற்படுகிறது...


ஒரு தேசத்தை முன்னேற்ற கனவு காணும் பிரதமரையும், அதனால் ஏற்படும் எல்லாவித தொந்தரவுகளையும் சகித்துக்கொள்ள தயாரான பொதுமக்களையும் சேர்த்து முட்டாள்களாக்கும் இந்த தேச துரோகி அரசு ஊழியர்களை.... குலத்தை கெடுக்க வந்த கோடரி காம்புகளை என்ன செய்ய போகிறீர்கள்??

புதிய ரூபாய் நோட்டுக்களை கோடிகளில் பதுக்கியவர்களை கண்டுபிடித்தாயிற்று.... அவர்களுக்கு உடந்தையாய் இருந்து தேச நாசத்திற்கும், நம் கனவுகள் பொய்த்துப்போவதற்கும் காரணமானவர்களையும் கண்டுபிடித்தாயிற்று....
இன்னும் என்ன தயக்கம்??


மனித உரிமை எல்லாம் புறந்தள்ளுங்கள்... இவர்களுக்கு உடனே தூக்குதண்டனை நிறைவேற்றி இவர்களின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்.... தேசநாசத்திற்கு உடந்தையாய் இருந்த பத்து நபர்களுக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் மிச்சமிருக்கும் துருப்பிடித்த தூண்கள் தங்களை தாங்களே புடம்போட்டுக்கொள்ளும்....


வாழ்க இந்தியா...!!!

குறிப்பு: பிஜேபி ஆட்சிகாலத்தில் சினிமா தியேட்டரில் தேசியகீதம் ஒலிக்க வேண்டும்.. அதற்கு எழுந்துநின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி சொன்னதற்காக...."தேசபற்றை வளர்க்க" கிளம்பும் முட்டாள் பிஜேபி காரன் அல்ல நான்...
ஒரு சாமான்யன்.... சாமான்யனின் கேள்விகளுக்கு கட்சியோ- நபரோ முக்கியமல்ல.... அவர்களின் செயல்களே முக்கியம்...

இன்னொரு குறிப்பு: சாமான்யனின் எதிர்பார்ப்பில் இருக்கும் நியாயத்திற்காக இந்த பதிவில் கருத்து சொல்பவர்களை நான் மதிப்பேன்.... அதை செய்தது மோடி... என்பதற்காக இங்கே சிந்துபாட வந்தால்....... உங்களுக்கே தெரியும்... வேறென்ன சொல்ல....?? போய்டுங்க....

அம் மாமரணம்

என் தந்தையின் மரணத்திற்கு பிறகு என்னை கதறி அழச்செய்த மரணம் இது..
நான் உங்கள் கட்சிக்காரன் இல்லை... இதுவரை ஒரு தேர்தலில் கூட உங்கள் அணியில் போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்ததில்லை..


ஃபேஸ்புக்கில் கருத்துக்களை பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற பிறகு தங்களின் ஆட்சிகாலத்தில் என்னுடைய பல விமர்சனங்களை முன் வைத்திருக்கிறேன்... அவற்றில் சில உங்களின் செயல்களை ஆதரித்தும்... பல உங்களின் செயல்பாடுகளை எதிர்த்தும் விமர்சித்திருக்கிறேன்... விதி எண் 110 ன் கீழ் எல்லா அறிவிப்புகளையும் நீங்கள் வெளியிட்டதை விமர்சித்திருக்கிறேன்... ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர் இருக்கும் போதும் அணைகள் திறப்பதற்கும், மேம்பாலங்கள் திறப்பதற்கும் உங்கள் பெயர் முன்மொழியப்படுவதை விமர்சித்திருக்கிறேன்... அமைச்சர் பெருமக்கள் உங்கள் காலில் விழுவதை .. அதை நீங்கள் அனுமதிப்பதை கண்டித்திருக்கிறேன்.

Image may contain: 1 person, smiling, closeup and text
உளவியல் ரீதியாக உங்களின் நடவடிக்கைகளை நீங்கள் அதிகாரத்தை கொண்டு பாதுகாப்பு தேடுவதை பதிவு செய்திருக்கிறேன்.. அவற்றை எல்லாம் தாண்டி எப்படி என்னை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்தீர்கள் என்றுதான் புரியவில்லை.... அதுதான் உங்கள் வெற்றி... என்னை போன்றே லட்சக்கணக்கானோரை உங்கள் உங்கள் ஆளுமை திறத்தால் ஆக்கிரமித்தது ஒன்றே உங்கள் வெற்றின் அடித்தளம்..


நீங்கள் பதவியில் இல்லாத காலங்களில் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவீர்கள் என்ற பயத்தில் கண்ணீர் விடுவதாய் நடித்தவர்கள் மீதோ... நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் எப்படியும் மீண்டு வந்துவிடுவீர்கள் என்ற பயத்தில் கோயில்களில் பூஜை செய்தவர்கள் மீதோ எனக்கு இப்போது கோபம் வரவில்லை... உங்களை அரசியலில் இருந்து ஒழித்துவிட எப்பாடு பட்டவர்கள் மீதெல்லாம் எனக்கு கோபம் வரவில்லை...
நாளை உங்கள் கட்சிக்கு யார் தலைமை தாங்குவார்கள்... யார் வழி நடத்துவார்கள் என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை... நீங்கள் அமைத்துக்கொடுத்த ஆட்சியின் மிச்சமிருக்கும் காலங்களில் யார் அதிகார போட்டியில் பங்கெடுப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை...


முதல்வர் நன்றாக இருக்கிறார்... விரைவில் பணிக்கு திரும்புவார் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாலும்.... ஆளுநர் அவசரமாய் தமிழகம் திரும்புகிறார்.... மத்திய அமைச்சர் அவரசரமாய் தமிழகம் வருகிறார்... காவல்துறை குவிக்கப்படுகிறது.. என்பதை எல்லாம் கூட்டிக் கழித்து பார்த்தால் உங்கள் மரணம் 4 ம் தேதியே நடந்திருக்கிறது என்பதை முன்பே ஊகித்திருந்தாலும் கூட...சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் மரணம் அறிவிக்கப்படாமல் மறைக்கப்படுகிறது... என்பதை உணர முடிந்தாலும் கூட....


5 ம் தேதி நள்ளிரவு அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்ட வினாடியில் வெடித்து வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறினேன் தாயே...

இப்போது நீங்கள் இல்லை.... அவ்வளவுதான்... அதை தாண்டி எதையும் யோசிக்கவே முடியவில்லை.... ஒற்றை சிங்கமாய் வேட்டையாடி ஆயிரக்கணக்கான நரிகளுக்கு இறை கொணர்ந்த உங்களின் வீரம் மட்டுமே நினைவில் நிழலாடுகிறது...

ரோஜா மாலைகளுக்கு நடுவே ரோஜா மலையாய் நீங்கள் கண்ணாடி பேழைக்குள் மீளா துயில் கொண்டது மட்டுமே கண்ணில் கலந்திருக்கிறது...

நீங்கள் ஒரு வெல்ல முடியா சிங்கம்... சரித்திரமான சகாப்தம் !!!
அவ்வளவுதான்... அவ்வளவே தான்...!!!
 

அபராதம் -தொகை சம்மந்தப்பட்டதல்ல...

"சின்னக்கவுண்டர்" டைப் கிராம பஞ்சாயத்துக்கள் இன்றளவும் கூட பரவலாக புழக்கத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்றன....

இந்த கிராம பஞ்சாயத்திற்கும்-கட்டை பஞ்சாயத்திற்கும் வித்தியாசம் உள்ளது... இரண்டையும் ஒன்றாக நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்... கட்டை பஞ்சாயத்து என்பது வன்முறையை-ஆள்பலத்தை மூலதனமாக கொண்டு பணம் அதிகம் கொடுப்பவனுக்கு சப்போர்ட் செய்து பிரச்சினையை முடித்து வைப்பது.... இதில் 30% அளவு நியாயமானதாகவும் 70% அளவு அநியாயமாகவும் இருக்கும்... மேலும் இதில் கட்டைபஞ்சாயத்து செய்பவருக்கு கப்பம் கட்டியே ஆக வேண்டும்...
ஆனால் ... கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் ஒற்றுமை மற்றும் நாட்டாமைதாரரின், குடிமக்களின் நேர்மை -மான-அவமானம் சம்மந்தப்பட்டது.... இதில் கட்டணங்களோ-வன்முறையோ கிடையாது.... நாட்டாமைதாரர் சொல்லும் தீர்ப்புக்கு மரியாதை கொடுத்து கட்டுப்பட்டு நடப்பது..
Image may contain: one or more people, crowd, tree and outdoor
சமகாலங்களில் நடைபெறும் மாற்றங்கள் எல்லா இடத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதை போல.... இந்த கிராம பஞ்சாயத்துக்களையும் சற்றே செல்லரிக்க செய்திருப்பதை மறுப்பதற்கில்லை.... "நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது...நான் போலீஸ் ஸ்டேஷன்ல- கோர்ட்ல பார்த்துக்கிறேன் " போன்ற சண்டியர்தனங்களும் , பணம்-பலம் படைத்தவர்களுக்கு ஆதரவாக நியாயத்தை புறக்கணிக்கும் நாட்டாமைதாரர்கள் பிறழ்வுகளும் பெருகி விட்டன என்பதையும் மறுக்கவே முடியாது...


அப்படியான நியாயமாக நாட்டாமைகள் தீர்ப்பு சொன்ன காலகட்டத்தில் தவறு செய்த ஒருவனுக்கு கிராம பஞ்சாயத்தில் அபராதம் விதிப்பதென்பது மிகவும் பெருத்த அவமானமாய் கருதப்பட்டது... அபராத தொகை ஒன்றும் பெரியதாக இருக்காது... ஒரு ரூபாயோ-இரண்டு ரூபாயோ-ஐந்து ரூபாயோ இருக்கும்... அபராதம் என்பது தவறு செய்தவனை பொருளியல் ரீதியாக துன்புறுத்துவதற்காக இல்லை.... அந்த ஒரு ரூபாய் அபராதம் செலுத்தினால் அவன் மானத்தை இழந்ததாக அர்த்தம்... தலை நிமிர்ந்து நடக்க முடியாது....

அப்படித்தான் இன்று பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் படத்தை அனுமதி இல்லாமல் தன்னுடைய ஜியோ செல்போன் சிம் விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொண்ட அம்பானி குழுமத்திற்கு விதிக்கப்பட்ட அபராதமும்.... இந்த தொகையால் அவர் ஒன்றும் கம்பெனியை மூடும் அளவிற்கு நஷ்டப்பட போவதில்லை... ஆனால்.... தொழிலதிபர் அம்பானி அபராதம் செலுத்துவதே இங்கே நோக்கம்


குறிப்பு: முன்பு வாழ்ந்தவர்கள் மான அவமானங்களை பெரிதென நினைத்தார்கள்.... அதனால் ஒரு ரூபாய் அபராதம் என்பது அவர்களது மானத்தை-கௌரவத்தின் ஆணிவேரை பிடுங்குவதாக இருந்தது.... ஆனால்.. சமகால சீரழிவுகளில் விபச்சாரம் செய்வதை பெருமையாக்கி, அதையே கௌரவம் என நம்பவைத்துவிட்ட காலகட்டத்தில் அந்த ஒரு ரூபாய் என்பது மானம்-கௌரவம் அல்ல.... அதனால் பெருந்தொகையை அபராதமாக விதித்து பயத்தை மட்டுமே ஏற்படுத்த வேண்டும்....

அம்பானிக்கு இந்த 500 ரூபாய் அபராதம் கௌரவம் சம்மந்தப்பட்டதாக இருந்தால்... இது ஒரு மிகப்பெரிய தண்டனை... வெறும் ஐநூறு ரூபாயாக மட்டும் தெரிந்தால்.... ங்கொய்யால.... அம்பது கோடி பைன் கட்ட வைக்கணும்...