இன்று
நம் வாழ்க்கை முறைக்கு உபயோகப்படுத்தும் எல்லா பொருட்களின் பின்னணியிலும்
ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சி வரலாறு இருக்கும்.. மிகுந்த எதிர்பார்ப்போடு
உருவாக்கப்பட்ட ஒரு பொருள் உபயோகத்திற்கு உகந்ததல்ல என
ஒதுக்கப்பட்டிருக்கும்.. உதாரணமாக... சிகரெட் குடை, ஒற்றை சக்கர வாகனம்
போன்றவை..
இதில் சிகரெட் குடை என்பது சிகரெட் ஹோல்டரின் முன்பகுதியில் சிகரெட் நட்டு வைக்கப்பட்டிருக்கும்.. அதற்கு மேலே ஒரு குடை இருக்கும். மழை காலத்தில் சிகரெட் நனைந்து விடாமல் பற்றவைக்க இப்படி
ஒரு கண்டுபிடிப்பு
ஒற்றை
சக்கர வாகனம் என்பது.. ஒரு பெரிய சக்கரத்தின் நடுவில் அமைக்கப்பட்ட
இருக்கையில் அமர்ந்துகொண்டு பயணிக்கும் வாகனம்.. இது பாதுகாப்பான பயணத்திற்கு உகந்ததல்ல என்று
ஒதுக்கப்பட்டது...
அதே நேரம் சில ஆராய்ச்சி தவறான வழியில் சென்றதால்... உருவான பொருள் மிகப்பெரிய வெற்றியை பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வந்த கதைகளும் உண்டு...
நிற்க... நாம் விஷயத்திற்கு வரலாம்..
அமெரிக்காவின்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் 175 ஏக்கர் பரப்புள்ள சில்வர் லேக் என்ற
நீர்த்தேக்கத்தில் சுமார் 96 மில்லியன் பிளாஸ்டிக் பந்துகள்
கொட்டப்பட்டன.... இந்த பந்துகள் சம அளவில் பரவி நீர் தேக்கத்தின் மேல்
மட்டத்தை மூடி விட்டதால்... நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டது...
மிகக்கடுமையான கோடை காலத்தில் நீர் சேமிப்பை கையாள இந்த முறையை அவர்கள்
செய்தார்கள்... இது ஒரு விஞ்ஞான யுக்தி...
அப்படியான
ஒரு முயற்சிதான் தமிழக அமைச்சர் திரு செல்லூர் ராஜு மற்றும் அதிகாரிகளால்
மிக சமீபத்தில் வைகை அணையில் சோதனை செய்யப்பட்டது.. எப்போதும் மிக குறைந்த
செலவில் நிறைவான பயனை எதிர்பார்க்கும் சமயோசித இந்திய மூளையின்
சிந்தனைதான் இது...
இது ஒரு கிண்டல் செய்யப்பட வேண்டிய விஷயமே இல்லை... ஒருவேளை இந்த முயற்சி வெற்றி பெற்றிருக்குமாயின் எத்தனை ஆயிரம் கன அடி நீர் சேமிக்கப்படும் தெரியுமா??
பிளாஸ்டிக் பந்துகள் உருளையாக இருப்பதால் ஒன்றின் மீது ஒன்றாக ஏற முடியாது... ஆனால் தெர்மோகோல் அட்டைகள் பரந்து தட்டையாக இருப்பதால் காற்றில் பறந்தும் ஒன்றின் மீது ஒன்றாக ஏறியும் விட்டன...
அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளில் 175 ஏக்கர் பரப்பளவுள்ள நீர்த்தேக்கத்தை ஆவியாதலில் இருந்து பாதுகாக்க கோடிகளில் செலவழிக்க முடியும்.. ஆனால்.. நாம் அப்படி அல்ல.... எப்போதுமே நம்மிடம் இருப்பதை வைத்து குறைந்த செலவில் பலனடையவே நாம் முயற்ச்சிப்போம்... அப்படியான ஒரு முயற்சிதான் அந்த அதிகாரிகளும் –அமைச்சரும் செய்தது...
வழக்கம் போல ஒரு கேவலமான விஷயத்தை பரபரப்பாக்கி காசு பார்க்கும் ஊடகங்கள்.. இந்த ஒரு நல்ல முயற்சியை கிண்டல் செய்தும்- கேலி செய்தும் செய்தியாக்கி விட்டன...
எப்போதும் போல ஊடகங்களை பின்பற்றியே ஆமாம் சாமி போட்டு பழக்கப்பட்ட நாம் இப்போது மட்டும் யோசிக்க போகிறோமா என்ன??
நிச்சயமாக இந்த அறிய சிந்தனையை மேலும் மெருகேற்றி மேம்படுத்தி செயல்படுத்தினால் நிச்சயம் வெற்றியை எட்ட முடியும்... அமெரிக்கர்கள் கொடிகளில் செலவு செய்து நடைமுறை படுத்திய விஷயத்த.. சில லட்சங்களிலேயே நம்மால் செய்துகாட்ட முடியும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக