வியாழன், 29 ஜூன், 2017

ஒரு சாமான்யனின் கடிதம்...

மதிப்பிற்குரிய திரு மோடி அவர்களுக்கு....
ஒரு சாமான்யனின் கடிதம்...
Image may contain: 2 people, people smiling
கடந்த நவம்பர் எட்டாம் தேதி நள்ளிரவை எட்ட சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் பொழுது நீங்கள் அறிவித்த செய்தி இந்த நாட்டையே தலைகீழாக புரட்டிப்போட்டு கருப்புப் பண முதலைகளை புதைக்கப்போகிறது.... என்று நம்பிய பலகோடி மக்களில் நானும் ஒருவன்...

அதை நடைமுறைப்படுத்தும் பொழுது எழுகின்ற இயல்பான சிக்கல்களை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது... அதனால் புரியாதவர்களுக்கு விளக்கி சொல்லி சிலகாலம் சகித்துக்கொள்ள சொல்லி உங்களுக்காக வாதாடவும் முடிந்தது...


உங்கள் நோக்கம் மிக மிக உயர்ந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.... ஆனால்... அதை நீங்களே நேரடியாக வந்து நடைமுறை படுத்த இயலாது.... உங்கள் தலைமையில் இயங்கும் அரசு இயந்திரத்தின் துருப்பிடித்த தொழிலாளர்களை வைத்துதான் அதை நடைமுறை படுத்த முடியும்...

அந்த துருப்பிடித்த தொழிலாளர்களின் நேர்மை தொடர்ந்து வரும் செய்திகளின் மூலம் உதிர்ந்து கொண்டே இருக்கிறது.... கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் அராசுடமையாக்கப்பட்ட வங்கி முதல்.... ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்ற உயர்ந்த வங்கியில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரை எவ்வளவு இறுக்கமாய் கருப்புப் பண முதலைகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்பதை இப்போது உணர முடிகிறது...

புதிய நோட்டுக்கள் வெளிவந்து ஐம்பது நாட்கள் கூட ஆகாத நிலையில் இவர்களின் கஜானாக்கள் இப்படி நிரம்பி இருக்கிறது என்றால்.... இவ்வளவு ஆண்டுகளாய் எவ்வளவு பதுக்கி இருப்பார்கள்... இனிவரும் காலங்களில் எவ்வளவு பதுக்குவார்கள்....
இவர்களை வைத்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள் திரு மோடி அவர்களே...??? ஒரு பயணத்தை சுமுகமாக முடிக்க வேண்டுமானால்...தொடங்கும் முன்பாக பயணிக்கப்போகும் வாகனத்தை சரி செய்து வைத்துக்கொள்வது அவசியம்... ஆனால்... உங்களின் இந்த சரித்திரப்பயணம் கரடுமுரடான சாலையில்....அதிர்ந்தால் உதிரக்கூடிய பாகங்களை கொண்ட வாகனத்தை வைத்தல்லவா தொடங்கப்பட்டிருக்கிறது...


நீங்கள் இந்திய மக்களிடம் கேட்ட காலக்கெடுவிற்குள் உங்கள் பயணதூரத்தில் பாதியை கூட கடக்க முடியாதோ என்ற அயர்ச்சி ஏற்படுகிறது...


ஒரு தேசத்தை முன்னேற்ற கனவு காணும் பிரதமரையும், அதனால் ஏற்படும் எல்லாவித தொந்தரவுகளையும் சகித்துக்கொள்ள தயாரான பொதுமக்களையும் சேர்த்து முட்டாள்களாக்கும் இந்த தேச துரோகி அரசு ஊழியர்களை.... குலத்தை கெடுக்க வந்த கோடரி காம்புகளை என்ன செய்ய போகிறீர்கள்??

புதிய ரூபாய் நோட்டுக்களை கோடிகளில் பதுக்கியவர்களை கண்டுபிடித்தாயிற்று.... அவர்களுக்கு உடந்தையாய் இருந்து தேச நாசத்திற்கும், நம் கனவுகள் பொய்த்துப்போவதற்கும் காரணமானவர்களையும் கண்டுபிடித்தாயிற்று....
இன்னும் என்ன தயக்கம்??


மனித உரிமை எல்லாம் புறந்தள்ளுங்கள்... இவர்களுக்கு உடனே தூக்குதண்டனை நிறைவேற்றி இவர்களின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்யுங்கள்.... தேசநாசத்திற்கு உடந்தையாய் இருந்த பத்து நபர்களுக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் மிச்சமிருக்கும் துருப்பிடித்த தூண்கள் தங்களை தாங்களே புடம்போட்டுக்கொள்ளும்....


வாழ்க இந்தியா...!!!

குறிப்பு: பிஜேபி ஆட்சிகாலத்தில் சினிமா தியேட்டரில் தேசியகீதம் ஒலிக்க வேண்டும்.. அதற்கு எழுந்துநின்று மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஒரு நீதிபதி சொன்னதற்காக...."தேசபற்றை வளர்க்க" கிளம்பும் முட்டாள் பிஜேபி காரன் அல்ல நான்...
ஒரு சாமான்யன்.... சாமான்யனின் கேள்விகளுக்கு கட்சியோ- நபரோ முக்கியமல்ல.... அவர்களின் செயல்களே முக்கியம்...

இன்னொரு குறிப்பு: சாமான்யனின் எதிர்பார்ப்பில் இருக்கும் நியாயத்திற்காக இந்த பதிவில் கருத்து சொல்பவர்களை நான் மதிப்பேன்.... அதை செய்தது மோடி... என்பதற்காக இங்கே சிந்துபாட வந்தால்....... உங்களுக்கே தெரியும்... வேறென்ன சொல்ல....?? போய்டுங்க....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக