50
ஏக்கர் தென்னந்தோப்பு வைத்திருந்த விவசாயிக்கு 20 லட்சம் கடன்....
வறட்சியால் வாடிய தென்னை மரங்களை ரூபாய் 50 க்கு வெட்டி விற்கும் அவலம்...
# நேற்றைய பாலிமர் செய்தி. ( ஜனவரி 8 - 20017)
# நேற்றைய பாலிமர் செய்தி. ( ஜனவரி 8 - 20017)
50 ஏக்கர் தென்னந்தோப்பு வைத்திருந்தவர் 20 லட்சம் கடனில் இருக்கிறார் என்றால்.... நிச்சயம் அவரது வீட்டில் எதோ நிர்வாக சிக்கல் இருப்பதாகவே அர்த்தம்.. ஒரு ஏக்கருக்கு மிகச்சாதாரணமாக 1500 தேங்காய்கள் விளையும் என்றால்... (இது மிக மிக குறைந்த அளவே) 50 ஏக்கருக்கு 50 X 1500 = 75000 தேங்காய்கள் விளையும்... சராசரியாக ஒரு தேங்காய் 5 ரூபாய் என வைத்துக்கொண்டால் (சில நேரம் 3 ரூபாய்க்கும் விற்பனையாகும்.. சில நேரம் 12 ரூபாய்க்கும் விற்பனையாகும்.. ) 5 X 75000 = 375000.00 ரூபாய்கள்...
நிர்வாக- ஆள்கூலி - உர- தண்ணீர் செலவுகள் (பெரும்பாலும் இம்மாதிரியான ஏழை விவசாயிகள் நிச்சயம் இரண்டு-மூன்று இலவச மின் வசதி பெற்ற போர்வெல்/கிணறு வைத்திருப்ப்பார்கள்) என ஒரு லட்சம் வைத்துக்கொண்டால் கூட 50 நாட்களுக்கு ஒருமுறை (சராசரியாக 50 நாட்களுக்கு ஒரு அறுவடை) 275000 ரூபாய் கையில் நிற்கும்...
இவர்களுக்கு 20 லட்சம் கடன் என்றால்... நிச்சயம் அது அடிப்படை தேவைக்காக, அத்தியாவசிய தேவைக்காக வாங்கிய கடனாக இருக்க வாய்ப்பே இல்லை... ஆடம்பரத்தை பெருக்குவதற்காகவோ- ஆறேழு தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதற்காகவோ வாங்கிய கடனாக மட்டுமே இருக்க முடியும்...
நிச்சயம் 50 ஏக்கர் தென்னந்தோப்பு வாடி வதங்குவது என்பது மிக மிக மிக மிக வலி தரும் விஷயம் தான்... ஒரு விவசாயியால் அதை உணர முடியும்... அதே நேரம்.... "பனமரத்துல பாம்பு கொத்த.... தென்னை மரத்துல அன்டை கட்டின கதையாக " என எங்கள் ஊர்பக்கம் சொல்வது போல..... ஏழாவது தலைமுறைக்கு சொத்து சேர்க்க வாங்கிய கடனை எல்லாம் வறட்சியை காரணம் காட்டி வசூல் செய்ய முயல்வது சுத்த அயோக்கியத்தனம்...
இந்த
வறட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அரை ஏக்கர்- ஒரு ஏக்கர் வைத்து கடன்
வாங்கி விவசாயம் செய்பவர்களே தவிர.... பண்ணையார்கள் இல்லை....
எப்போதும்
போல விவசாயி என்ற போரவைக்கும் புகுந்து இலவச மின்சாரம் முதல் ட்ராக்டர்
லோன் தள்ளுபடி வரை அனுபவிக்கும் இம்மாதிரியான பண்ணையார்கள் ஒழிக்கப்பட
வேண்டும்... அரசு இலவசமாக கொடுக்கும் எதுவும் ஏழை விவசாயியை சென்றடைவதே
இல்லை....
இந்த அரை ஏக்கர்- ஒரு ஏக்கர் விவசாயிகள் மட்டுமே ஒரு போகம் விளையாமல் போனாலும் ஈடேழும்ப முடியாத இழப்பை சந்திப்பவர்கள்... நூறு-இருநூறு ஏக்கர் விவசாயம் செய்பவர்கள் அல்ல... அல்ல... அல்ல...
குறிப்பு: இந்த படத்தில் திரு வாசன் இருப்பது ஒரு தற்செயலான நிகழ்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக