வியாழன், 29 ஜூன், 2017

அபராதம் -தொகை சம்மந்தப்பட்டதல்ல...

"சின்னக்கவுண்டர்" டைப் கிராம பஞ்சாயத்துக்கள் இன்றளவும் கூட பரவலாக புழக்கத்தில் இருந்து பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்றன....

இந்த கிராம பஞ்சாயத்திற்கும்-கட்டை பஞ்சாயத்திற்கும் வித்தியாசம் உள்ளது... இரண்டையும் ஒன்றாக நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்... கட்டை பஞ்சாயத்து என்பது வன்முறையை-ஆள்பலத்தை மூலதனமாக கொண்டு பணம் அதிகம் கொடுப்பவனுக்கு சப்போர்ட் செய்து பிரச்சினையை முடித்து வைப்பது.... இதில் 30% அளவு நியாயமானதாகவும் 70% அளவு அநியாயமாகவும் இருக்கும்... மேலும் இதில் கட்டைபஞ்சாயத்து செய்பவருக்கு கப்பம் கட்டியே ஆக வேண்டும்...
ஆனால் ... கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் ஒற்றுமை மற்றும் நாட்டாமைதாரரின், குடிமக்களின் நேர்மை -மான-அவமானம் சம்மந்தப்பட்டது.... இதில் கட்டணங்களோ-வன்முறையோ கிடையாது.... நாட்டாமைதாரர் சொல்லும் தீர்ப்புக்கு மரியாதை கொடுத்து கட்டுப்பட்டு நடப்பது..
Image may contain: one or more people, crowd, tree and outdoor
சமகாலங்களில் நடைபெறும் மாற்றங்கள் எல்லா இடத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதை போல.... இந்த கிராம பஞ்சாயத்துக்களையும் சற்றே செல்லரிக்க செய்திருப்பதை மறுப்பதற்கில்லை.... "நீ என்ன சொல்றது... நான் என்ன கேட்கிறது...நான் போலீஸ் ஸ்டேஷன்ல- கோர்ட்ல பார்த்துக்கிறேன் " போன்ற சண்டியர்தனங்களும் , பணம்-பலம் படைத்தவர்களுக்கு ஆதரவாக நியாயத்தை புறக்கணிக்கும் நாட்டாமைதாரர்கள் பிறழ்வுகளும் பெருகி விட்டன என்பதையும் மறுக்கவே முடியாது...


அப்படியான நியாயமாக நாட்டாமைகள் தீர்ப்பு சொன்ன காலகட்டத்தில் தவறு செய்த ஒருவனுக்கு கிராம பஞ்சாயத்தில் அபராதம் விதிப்பதென்பது மிகவும் பெருத்த அவமானமாய் கருதப்பட்டது... அபராத தொகை ஒன்றும் பெரியதாக இருக்காது... ஒரு ரூபாயோ-இரண்டு ரூபாயோ-ஐந்து ரூபாயோ இருக்கும்... அபராதம் என்பது தவறு செய்தவனை பொருளியல் ரீதியாக துன்புறுத்துவதற்காக இல்லை.... அந்த ஒரு ரூபாய் அபராதம் செலுத்தினால் அவன் மானத்தை இழந்ததாக அர்த்தம்... தலை நிமிர்ந்து நடக்க முடியாது....

அப்படித்தான் இன்று பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் படத்தை அனுமதி இல்லாமல் தன்னுடைய ஜியோ செல்போன் சிம் விளம்பரத்திற்கு பயன்படுத்திக்கொண்ட அம்பானி குழுமத்திற்கு விதிக்கப்பட்ட அபராதமும்.... இந்த தொகையால் அவர் ஒன்றும் கம்பெனியை மூடும் அளவிற்கு நஷ்டப்பட போவதில்லை... ஆனால்.... தொழிலதிபர் அம்பானி அபராதம் செலுத்துவதே இங்கே நோக்கம்


குறிப்பு: முன்பு வாழ்ந்தவர்கள் மான அவமானங்களை பெரிதென நினைத்தார்கள்.... அதனால் ஒரு ரூபாய் அபராதம் என்பது அவர்களது மானத்தை-கௌரவத்தின் ஆணிவேரை பிடுங்குவதாக இருந்தது.... ஆனால்.. சமகால சீரழிவுகளில் விபச்சாரம் செய்வதை பெருமையாக்கி, அதையே கௌரவம் என நம்பவைத்துவிட்ட காலகட்டத்தில் அந்த ஒரு ரூபாய் என்பது மானம்-கௌரவம் அல்ல.... அதனால் பெருந்தொகையை அபராதமாக விதித்து பயத்தை மட்டுமே ஏற்படுத்த வேண்டும்....

அம்பானிக்கு இந்த 500 ரூபாய் அபராதம் கௌரவம் சம்மந்தப்பட்டதாக இருந்தால்... இது ஒரு மிகப்பெரிய தண்டனை... வெறும் ஐநூறு ரூபாயாக மட்டும் தெரிந்தால்.... ங்கொய்யால.... அம்பது கோடி பைன் கட்ட வைக்கணும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக