எனக்கு
தெரிந்தவரை மத்திய கிழக்கு நாடுகளில் மருத்துவம் சார்ந்த துறைகளில்
பணிபுரிய வேண்டும் என்றால் அந்தந்த நாடுகளில் இருக்க கூடிய உடல்நலம்
சார்ந்த அமைச்சகத்தில் (ministry Of Health / Supreme Council Of Health)
பதிவு செய்து அவர்கள் நடத்தும் தேர்வில் வெற்றிபெற்று உரிமம் (License) பெற
வேண்டும்.வேறு எந்த நாடுகளில் தங்க பதக்கத்துடன் மருத்துவ பட்டம் பெற்றிருந்தாலும் கூட இந்த தகுதித்தேர்வில் வெற்றிபெற வில்லை
என்றால் அவர்கள் இந்த நாடுகளில் மருத்துவம் சார்ந்த தொழில்களில்
(மருத்துவர், செவிலியர்,மருத்துவ தொடர்புடைய மற்ற வேலைகள்) ஈடுபட
முடியாது..
மேற்கத்திய, தெற்காசிய நாடுகளிலும் இந்த வழக்கம் தான் பின்பற்றப்படும் என நம்புகிறேன்.. (அதுபற்றி எனக்கு உறுதியாக தெரியவில்லை )
இந்தியாவில்
மருத்துவம் பயில்வதற்கான தகுதியை நிர்ணயிக்க எல்லோருக்கும் பொதுவான ஒரு
தேர்வை நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடிவெடுத்தால்.... மற்ற
அனைத்து மாநில அரசுகளும் மக்களும் அந்த போட்டிக்கு தயாராக இருக்கும்
நிலையில்.. தமிழக ஆட்சியாளர்களும்-அரசியல்வாத ிகளும் மிக மூர்க்கமாய் எதிர்க்கிறார்கள்..
ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை சற்று யோசித்து ஐம்பது ஆண்டுகால அரசியல்
நிகழ்வுகளை கிளறிப்பார்த்தால்... தமிழக மாணவர்களை எப்படி இந்திய
மாணவர்களுடன் போட்டியிட முடியாத/ பயப்படும் அளவிற்கு
மழுங்கடித்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது...
ஒடுக்கப்பட்ட
உங்களை தூக்கி விடுகிறேன் என்று சொல்லி சொல்லியே அவர்களை குனியவைத்து
ஆட்சி பீடத்திர்ல் ஏறியவர்கள்... நிஜமாகவே திறமையானவர்களை ஜாதீய காரணம்
காட்டி காலை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது
மனச்சாட்சியுடன்- தொலைநோக்கு பார்வையுடன்- நியாயமாக யோசிப்பவர்களால்
புரிந்து கொள்ள முடியும்...
ஒரு
சமூகத்தை உயர்த்தும் முறை என்பது அவர்களை விட முன்னேறிய சமூகத்துடன்
போட்டியிடும் அளவிற்கு அவர்களின் திறமையை வளர்ப்பதுதானே அன்றி...
முன்னேறியவனை கீழே இழுத்து விட்டு எல்லோரும் சமம் என்று சொல்வது அல்ல...
அப்படி கடந்த ஐம்பது வருடங்களாய் குனியவைத்து குதிரை ஏறியவர்களால் ...
இன்று ஒட்டுமொத்த தமிழக மாணவர்களும் அகில இந்திய போட்டியாளர்களை சந்திக்க
தயங்குகிறார்கள்.... அப்படி அவர்களை சந்திக்க போட்டியாளர்கள் தயாராக
இருந்தாலும் கூட..... ஐம்பது வருடமாய் நாம் இவர்களை மழுங்கடித்திருப்பதை
கண்டுள்(கொல்)வார்களோ என்ற பயத்தில்.... “எங்களுக்கு அந்த போட்டியில்
இருந்து விலக்கு அளித்து நேரடியாக பரிசினை வழங்கிட வேண்டும் “ என்று ஒரு
கேவலமான கோரிக்கையை முன்வைத்து நாடகமாடுகிறார்கள்...
“இது உங்களுக்கு அவமானமாக இல்லையா.... உங்கள் மாணவர்கள் தகுதி இவ்வளவுதானா...?” என்று உயர்நீதிமன்றம் காறி உமிழ்ந்திருப்பது ஒரு வரலாற்று கேவலம்...
இடஒதுக்கீட்டில் பெற்றுக்கொடுத்த வெற்றிப்பழம் இப்போது கசக்கிறது...அப்படியானால்..
நிச்சயம் அவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.... காலம் காலமாய் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களின் மரபணுக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மாறாது... அதற்கு அவர்களை உற்சாகமூட்டும் நிறைய வசதிகளை செய்து கொடுத்தே ஆகவேண்டும்... ஆனால்... அந்த சலுகைகள் பயிற்சி காலத்தில் மட்டுமே கொடுக்கப்பட வேண்டுமே தவிர... போட்டிகளில் அல்ல... என்பதை உணர வேண்டும்... ஆட்சியாளர்களின் நோக்கம் அந்த ஒடுக்கப்பட்டவர்களின் வாக்குகளே அன்றி... அவர்களின் முன்னேற்றம் அல்ல....
இப்போது அவர்கள் சொல்லிக்கொள்ளும் இந்த முன்னேற்றம் வெறும் எலும்பு துண்டு... இந்த எலும்பு துண்டை வைத்துக்கொண்டு உள்ளூரில் உதார் விடலாம்...
அகில இந்திய போட்டியாளர்களையே சமாளிக்க பயப்படும் இவர்கள் எப்படி உலக போட்டியாளர்களை எதிர்கொள்வார்கள்??
இனியாவது அந்த அரசியல்வாதிகளின் கபட நாடகத்தை கண்டுகொள்வார்களா தமிழக மக்கள்????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக