வியாழன், 29 ஜூன், 2017

அம் மாமரணம்

என் தந்தையின் மரணத்திற்கு பிறகு என்னை கதறி அழச்செய்த மரணம் இது..
நான் உங்கள் கட்சிக்காரன் இல்லை... இதுவரை ஒரு தேர்தலில் கூட உங்கள் அணியில் போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்ததில்லை..


ஃபேஸ்புக்கில் கருத்துக்களை பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற பிறகு தங்களின் ஆட்சிகாலத்தில் என்னுடைய பல விமர்சனங்களை முன் வைத்திருக்கிறேன்... அவற்றில் சில உங்களின் செயல்களை ஆதரித்தும்... பல உங்களின் செயல்பாடுகளை எதிர்த்தும் விமர்சித்திருக்கிறேன்... விதி எண் 110 ன் கீழ் எல்லா அறிவிப்புகளையும் நீங்கள் வெளியிட்டதை விமர்சித்திருக்கிறேன்... ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர் இருக்கும் போதும் அணைகள் திறப்பதற்கும், மேம்பாலங்கள் திறப்பதற்கும் உங்கள் பெயர் முன்மொழியப்படுவதை விமர்சித்திருக்கிறேன்... அமைச்சர் பெருமக்கள் உங்கள் காலில் விழுவதை .. அதை நீங்கள் அனுமதிப்பதை கண்டித்திருக்கிறேன்.

Image may contain: 1 person, smiling, closeup and text
உளவியல் ரீதியாக உங்களின் நடவடிக்கைகளை நீங்கள் அதிகாரத்தை கொண்டு பாதுகாப்பு தேடுவதை பதிவு செய்திருக்கிறேன்.. அவற்றை எல்லாம் தாண்டி எப்படி என்னை இவ்வளவு தூரம் ஆக்கிரமித்தீர்கள் என்றுதான் புரியவில்லை.... அதுதான் உங்கள் வெற்றி... என்னை போன்றே லட்சக்கணக்கானோரை உங்கள் உங்கள் ஆளுமை திறத்தால் ஆக்கிரமித்தது ஒன்றே உங்கள் வெற்றின் அடித்தளம்..


நீங்கள் பதவியில் இல்லாத காலங்களில் மீண்டும் பதவிக்கு வந்துவிடுவீர்கள் என்ற பயத்தில் கண்ணீர் விடுவதாய் நடித்தவர்கள் மீதோ... நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் எப்படியும் மீண்டு வந்துவிடுவீர்கள் என்ற பயத்தில் கோயில்களில் பூஜை செய்தவர்கள் மீதோ எனக்கு இப்போது கோபம் வரவில்லை... உங்களை அரசியலில் இருந்து ஒழித்துவிட எப்பாடு பட்டவர்கள் மீதெல்லாம் எனக்கு கோபம் வரவில்லை...
நாளை உங்கள் கட்சிக்கு யார் தலைமை தாங்குவார்கள்... யார் வழி நடத்துவார்கள் என்றெல்லாம் நான் கவலைப்படவில்லை... நீங்கள் அமைத்துக்கொடுத்த ஆட்சியின் மிச்சமிருக்கும் காலங்களில் யார் அதிகார போட்டியில் பங்கெடுப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை...


முதல்வர் நன்றாக இருக்கிறார்... விரைவில் பணிக்கு திரும்புவார் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாலும்.... ஆளுநர் அவசரமாய் தமிழகம் திரும்புகிறார்.... மத்திய அமைச்சர் அவரசரமாய் தமிழகம் வருகிறார்... காவல்துறை குவிக்கப்படுகிறது.. என்பதை எல்லாம் கூட்டிக் கழித்து பார்த்தால் உங்கள் மரணம் 4 ம் தேதியே நடந்திருக்கிறது என்பதை முன்பே ஊகித்திருந்தாலும் கூட...சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக உங்கள் மரணம் அறிவிக்கப்படாமல் மறைக்கப்படுகிறது... என்பதை உணர முடிந்தாலும் கூட....


5 ம் தேதி நள்ளிரவு அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்ட வினாடியில் வெடித்து வந்த அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் கதறினேன் தாயே...

இப்போது நீங்கள் இல்லை.... அவ்வளவுதான்... அதை தாண்டி எதையும் யோசிக்கவே முடியவில்லை.... ஒற்றை சிங்கமாய் வேட்டையாடி ஆயிரக்கணக்கான நரிகளுக்கு இறை கொணர்ந்த உங்களின் வீரம் மட்டுமே நினைவில் நிழலாடுகிறது...

ரோஜா மாலைகளுக்கு நடுவே ரோஜா மலையாய் நீங்கள் கண்ணாடி பேழைக்குள் மீளா துயில் கொண்டது மட்டுமே கண்ணில் கலந்திருக்கிறது...

நீங்கள் ஒரு வெல்ல முடியா சிங்கம்... சரித்திரமான சகாப்தம் !!!
அவ்வளவுதான்... அவ்வளவே தான்...!!!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக