வியாழன், 29 ஜூன், 2017

மணி மண்டபம்

மணிமண்டபம் என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம்..
தகவல் தொடர்பு சாதனங்களை வரிசைப்படுத்த சொன்னால்.. போன், இ.மெயில், சமூக வலைத்தளங்கள் , கடிதங்கள், தந்தி என வரிசைப்படுத்தலாம்..


இன்னும் கொஞ்சம் யோசித்தால்... சங்கேத சப்தங்கள்.. கலங்கரை விளக்கம், ஒளிக்கற்றைகள்..
வாகனங்களில் இருக்கும் ஹார்ன், இண்டிகேட்டர்.. போன்றவை.. இன்னும் பின்னோக்கி பயணித்தால்... ஒற்றர்கள், புறா, கழுகு போன்றவை...
இவைகள் எல்லாமே ஒரு செய்தியை வேறொருவருக்கு கொண்டு செல்ல (சொல்ல ) பயன்படுத்தப்படுபவை..


அப்படியான ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான் மணிமண்டபம்...

Image may contain: plant, sky, tree and outdoor
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜை தொடங்கிவிட்டதை நாற்பது மைல் தொலைவில் இருக்கும் பாளையங்கோட்டை பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அறிவிக்க
அப்போது இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... அதாவது கோயிலில் பூஜை தொடங்கும் நேரத்தில் அங்கிருக்கும் மணி ஒலிக்கும்.. அந்த சப்தம் கேட்கும் தூரத்தில் இருக்கும் இன்னொரு மணி உடனே ஒலிக்கச்செய்யப்படும்... இப்படியாக மணியோசை கேட்கும் தூரத்தில் இருக்கும் அடுத்தடுத்த மணிகள் ஒலிக்க.... “ஒலிவேகத்தில்” பூஜை தொடங்கிவிட்ட தகவல் மன்னரின் காதுகளை எட்டும்... அவரும் உடனே அரண்மனையில் பூஜையை தொடங்குவார்...


மணி கட்டப்பட்ட (மணிக்காக கட்டப்பட்ட) மண்டபங்கள் “மணி மண்டபம்”..

சமகாலத்தில் உள்ளூர் கவிஞர்கள்/ஜாதி தலைவர்கள் முதல்... இங்கிலாந்து பென்னிகுக் வரை ஒரு நினைவு மண்டபத்தை கட்டி அதற்கு “மணிமண்டபம்” என்று எதற்காக பெயரிட்டார்கள் என்பதே சாமான்யனின் சந்தேகம்...
விபரமறிந்தவர்கள் பகிர்தல் நலம்...!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக