சனி, 20 ஜூன், 2015

இணையத்தில் கொட்டிக்கிடக்கும் பெண்களின் நிர்வாண/ அரை நிர்வாண புகைப்படங்கள்...


இணையத்தில் உலாவும் பெண்களின் நிர்வாண/அரை நிர்வாண பெண்களின் புகைப்படங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்....
1. விருப்பப்பட்டு போஸ் கொடுத்தவை... 
2. சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டவை..
3. வெட்டி ஒட்டிய -மார்ஃபிங் - வகை புகை படங்கள்....


இந்த மூன்று வகைகளில் முதலாவது "விருப்பப்பட்டு போஸ் கொடுக்கப்பட்ட புகைப்பட"வகையினரை பற்றி நாம் பேச தேவை ..இல்லை.... அது அவர்களின் விருப்பம்.....



இரண்டாவது வகையான "சம்பந்தப்பட்டவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்டவை" பெரும்பாலும் செல்போன் கேமராக்களாலேயே எடுக்கப்படுகின்றன..... கிராமங்களில் வீடுகளில் வேலை செய்யும் பெண்கள், கோயில் குளங்களில், கடற்கரையில், அருவிகளில் குளிக்கும் பெண்கள், சாலைகளில் நடக்கும் பெண்கள், காய்கறி வாங்கும் பெண்கள் என்று எந்த பெண்களையும் விடுவதில்லை..... ஆடைகள் விலகும் அசாதாரண சந்தர்ப்பத்திற்காக கையில் செல்போன் கேமராவுடன் காத்துக்கிடக்கும் அற்ப ஜீவிகள் அதனை உடனே இணையத்திலும் பகிர்கிறார்கள்.....



இத்தகைய காட்சியாகும் பெண்களில் ஒருவருக்கு கூட தெரிவதில்லை இணையத்தின் வழியாக எத்தனையோ காமக்கண்கள் தமது அங்கங்களை ரசிக்கின்றன என்பது....


மூன்றாவது வெட்டி ஓட்டிய புகைப்படங்கள்....


சமூக வலைத்தளங்கள் (Facebook ,Twitter , Google + ) , பிக்காசா வெப் ஆல்பம் போன்றவற்றில் பதிவேற்றம் செய்யப்படும் பெண்களின் புகைப்படங்கள் தரவிறக்கம் செய்யப்பட்டு ஏற்கெனவே நிர்வாண போஸ் கொடுத்த புகைப்படங்களின் வேற்று உடம்பில் இந்த பெண்களின் முகம் மட்டும் இணைக்கப்படுகிறது.... போட்டோ ஷாப்.. இமேஜ் ரெடி போன்ற வரைகலை மென்பொருட் கருவிகள் மூலம் இந்த முக இணைப்பு மிக தத்ரூபமாக செய்கிறார்கள்....

பொதுவாக பெண்கள் இம்மாதிரியான புகைப்படங்கள் இருக்கும் பக்கங்களை பார்ப்பதை தவிர்கிறார்கள்..... ஆனால் உண்மையாய் சொன்னால் ஆண்கள் தேடிப்போய் பார்க்கிறார்கள்..... அப்படியாக உங்களுக்கே தெரியாமல் இணையத்தில் உலாவும் உங்களது அசல் (அ ) போலியான நிர்வாண புகைப்படத்தை உங்களின் தந்தையோ, மகனோ, சகோதரனோ, கணவனோ, காதலனோ பார்க்க கூடும்... 


இவற்றை தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா என்றால்.... சுய கட்டுப்பாடு , எச்சரிக்கை உணர்வை தவிர வேறு வழியே இல்லை எனலாம்.. ஏனென்றால் கைக்குள் அடக்கமாயிருகும் செல்போனில் புகைப்படம் எடுக்கப்படுவதை எப்படி கண்டுபிடித்து தடுக்க முடியும்...??? ஆனால் பொது இடங்களில் குளிக்கும் போது (கோயில் குளம், அருவிகள், கடற்கரைகள் )  அடர் நிறை ஆடைகளை உடுத்தலாம்..., அனாவசியமான நபர்கள் கையில் செல்போனுடன் சுத்தினால் அவர்கள் மீது ஒரு கண் வைத்து கவனித்த படியும் எச்சரிக்கையாய் இருக்கலாம்.


சமூக வலைத்தளங்கள், வெப் ஆல்பங்கள் போன்றவற்றில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது நன்கு அறிமுகமானவர்களுக்கு மட்டும் தெரியும் படி வைக்கலாம்.... கூடுமான வரையில் அப்படி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்கலாம்....

யுத்தத்திற்கு கேடயத்தொடு போவது பயந்தாங்கொள்ளித்தனமோ  அவமானமோ இல்லை.... அது புத்திசாலித்தனம்...


"அதெல்லாம் இல்ல..... என்னை நாலுபேர் பார்த்து அழகா இருக்கீங்கன்னு சொல்லணும்.... என் போட்டோவுக்கு "லைக்" போடணும்.... என்னை பாராட்டனும்.. "அப்படின்னு போட்டோ போடறவங்களை நான் எதுவும் சொல்ல முடியாது... வேண்டுமானால் ஒரு ஆணாக.... அல்ப புத்தி உடைய சராசரி ஆணாக காத்திருக்கலாம்... வரும்... என்றைகாவது நம்ம பார்வைக்கும் வரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக