பகுத்தறிவு என்பது மனிதனை விட மற்றவைகளுக்குத்தான் தான் அதிகம் என்பதை யாரும் சிந்திப்பதே இல்லை... ஒரு காகமோ, குருவியோ, எறும்போ.. தனக்கு தேவை இல்லாதவற்றை எக்காரணம் கொண்டும் சேர்த்து வைப்பதில்லை... ஒரு எறும்புக்கு அரிசிதான் உணவு என்றால் அது அரிசியை மட்டும் தான் எடுக்கும்.. அரிசி போலவே உருவ ஒற்றுமையுடன் தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த உலோகங்களிலோ, கல், களிமண் போன்ற பொருட்களிலோ செய்து அதனை அரிசியுடன் கலந்து வைத்தாலும் அது அரிசியை மட்டும் "பகுத்தறிந்து" எடுத்துச்செல்லும்.. பிறகெப்படி சொல்ல முடியும் அதற்கு பகுத்தறிவு இல்லை என்று??
எறும்புகள் தங்கள் மொழியில் பேசிக்கொண்டிருந்தன... மனிதன் பகுத்தறிவற்றவன் என்று.. எறும்புகள் மட்டுமல்... நாய் பூனை.. கோழி.. கொக்கு என எல்லா ஜீவராசிகளுமே இப்படி தான் தங்கள் மொழியில் பேசிக்கொண்டிருக்கும்.. மனிதன் பகுத்தறிவில்லாதவன்... அவனுக்கு தேவை இல்லாதவற்றை சேர்த்து வைத்துக்கொண்டு, பிறகு அதை காப்பதற்காகவும் , கவர்வதற்காகவும் போட்டி போட்டு வெட்டிக்கொண்டு சாகிறான்... நமக்கெல்லாம் ஏழு அறிவு.. எட்டு அறிவு இருக்கிறது.. ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவுதான் இருக்கிறது... அவனை பொறுத்தவரை ஆறாவது அறிவுதான் பகுத்தறிவாம்...
ஆனால் நம்மை பொறுத்தவரை தேவை இல்லாதவற்றை சேர்த்துவைத்து பின் அதனை காக்க போராடட வேண்டாம் என்ற ஏழாவது அறிவும்.. நாளைய நமது உணவை நிச்சயமாய் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும்(எட்டாவது அறிவு) உண்டு...
அவைகள் பேசிக்கொள்வதிலும் ஏதோ ஒரு உண்மை இருப்பது போலத்தான் தெரிகிறது..!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக