புதன், 7 செப்டம்பர், 2016

முடிந்ததை சேமிக்கலாம்எங்க வீட்ல அவரைக்கா கொடி நடுவாங்க... ரெண்டு மூணு முருங்கை மரம்,,, அப்புறம் மாமரம்... காய்க்கிற சீசன் வந்ததும் எல்லாமே நல்லா காய்க்கும்... அப்போ குழம்பு, கூட்டு, பொரியல் ன்னு எல்லா ஐட்டத்துலையும் ஒரு நாள் கூட விடாம அந்த காய்களை போட்டு செய்வாங்க....

நமக்கு அந்த காய்கள் மேல ஒரு வெறுப்பே வந்திடும்.... ஐயோ...... இந்த கொடிய/மரத்த வெட்டி போட்டுடலாமான்னு கூட ஆத்திரம் வரும்... ஆனா சீசன் முடிஞ்சதும் மேற்சொன்ன காய்கள் எதையும் நம்ம வீட்டு சமையல்ல கண்ணுல கூட பார்க்க முடியாது..... ஏதாவது கல்யாண வீட்டுலயோ- ஹோட்டல்லையோ சாப்பிட போகும் போது முருங்கைக்காய் சாம்பாரோ- மீன்குழம்புல மாங்காயோ தென்பட்டா ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவோம்...

வீட்ல இருக்கவங்கள சொல்லி குத்தமில்ல.. ஏன்னா விளையுறப்போ அறுவடை செய்து அப்பவே சமைக்கணும். இல்லன்னா வீணாத்தான் போகும்... அத சேமிக்க வசதி இல்ல நம்மகிட்ட....

அது மாதிரி தான் இப்போ பெய்யுற அடைமழையும்..... இந்தமழை ஏண்டா பெய்யுதுன்னு வெறுப்படைகிற அளவுக்கு பெய்யுது... ஆனா இந்த மழை நீர சேமிக்க வசதி இருக்கு.... தனி மனிதர்கள் ( குடும்பங்கள்) வீடுகள்ல மழை நீர் தொட்டி அமைச்சும் , அரசாங்கம் ஏரி- குளங்கள ஆழப்படுத்தியும் வச்சிருந்தா இந்தமழை நீரை சேமிச்சு, சீசன் முடிஞ்ச பிறகும் கூட நிதானமா அனுபவிச்சுக்கலாம்....

இந்த முறை மிஸ் பண்ணி இருந்தா கூட அடுத்த மழைக்காலத்துக்குள்ளயாச்சும் செய்வாங்களா????

கேள்வி:- ஆமா.. இதுக்கும்.. இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம்???

பதில் 1. ஒரு சம்மந்தமும் இல்லங்க..... நம்ம தொடர் வாசகர்கள் எவ்ளோ பெரிசா எழுதினாலும் நிதானமா படிப்பாங்க.. ஏன்னா அவங்க பெரும்பாலும் நமக்கு நண்பராகவோ, அண்ணன்- தம்பி- மாமன்- மச்சி- அக்கா- தங்கோ என அன்பு வளையத்துக்குள்ள அடைபட்டவங்களாகவோ இருப்பாங்க.. இல்லன்னா நம்ம சிந்தனைகள்/ எழுத்துக்கள்ள இருக்க நியாயத்தை உணர்ந்தவங்களா இருப்பாங்க... சோ.. அவங்களுக்காக இல்ல இது....... இதுல போட்டிருக்க படம்.. ஜஸ்ட் ஸ்க்ரோல் பண்ணி லைக் தட்டிகிட்டே போறவங்கள கொஞ்சம் இழுத்து நிறுத்த தான்...

பதில் 2. கஷாயம் கொடுக்கும் போது கூட கொஞ்சம் சர்க்கரை கொடுக்குறது இல்லையா.. அப்படி தான் இதுவும்...

பதில் 3. அனுஷ்கா போட்டோ போட காரணம் எல்லாம் தேவையா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக