புதன், 7 செப்டம்பர், 2016

ஒரு யுத்தத்தின் பின் விளைவுமிக கோரமான ஒரு யுத்தத்தின் முடிவில் , அந்த போரில் பங்கு கொண்ட ஒரு போர்வீரன் தன்னுடைய சொந்த தேசத்திற்கு திரும்புகிறான்...

ஐயோ... என்னுடைய தேசமா இது.. என்னுடைய ஊரா இது.... எப்படி இருந்த ஊர் இப்படி சீரழிந்து கிடக்கிறதே.. இங்கே சாலையின் நடுவில் அழகாய் இருந்த நீரூற்றுகள் எங்கே....
சாலையோரங்களில் தழைத்திருந்த பூச்செடிகளும் மரங்களும் எங்கே... பூங்காக்களில் விளையாடித்திரிந்த சிறுவர் சிறுமிகள் எங்கே... என பதைத்தபடியே நடந்துகொண்டிருந்தான்....

அவன் இருந்த தெருவிற்குள் நுழைந்தான்... அந்த தெருவின் வீடுகளில் விளக்குகளை ஏந்தியபடியே நின்ற பெண்கள் இவனை கண்டதும்.. "இன்றிரவு என் வீட்டில் தங்கி விட்டு செல்லலாமே" என்று அழைத்தார்கள்... ஆம்.. அவர்களின் வருமானமற்ற வயிற்று தேவை அவர்களை விபச்சாரத்தில் தள்ளி இருந்தது...

ஐயோ.... என்னுடன் பணி புரிந்து போரில் இறந்து போனவர்களின் மனைவிகள் அல்லவா இவர்கள்... என்று பதைத்தபடியே "இல்லை அம்மா.. எனக்காக அங்கே என்னவள் காத்திருக்கிறாள் " என்று சொல்லியபடி நடந்தான்...

கண்ணீர் வழிய வழிய நடந்த அவன் அந்த ஒரு வினாடியில் உடைந்து சுக்குநூறாகிப்போனான்.... ஆம்.. அவன் வீட்டு வாசலிலும் விளக்குடன் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள்...

# கனத்த மனதுடன் இந்த கதையின் முடிவில் சொல்லும் நீதி... போர்... அது எல்லாவற்றையும் இழக்க வைக்கும்...

புதியதோர் உலகம் செய்வோம்,..
கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக