புதன், 7 செப்டம்பர், 2016

பூமிக்காதலன்...ஒரு பெரிய பணக்காரர்.... நிறைய மக்கள் சுற்றுலா வர இடத்துல ஒரு நாலைஞ்சு விடுதி கட்டினார்... அதுல ஒரே ஒரு விடுதிய மட்டும் திறந்து, அங்க வரவங்கள இலவசமா தங்க வச்சார்... ஒரே ஒரு கண்டிஷன் தான் போட்டார்... "நீங்க வாடகை எதுவும் கொடுக்க வேண்டாம்... இந்த விடுதிய நான் இப்போ எப்படி உங்ககிட்ட ஒப்படைக்கிறேனோ... அதே மாதிரி வச்சுக்கணும்..."

நிறைய பேர் வருவாங்க... கொஞ்ச நாள் தங்குவாங்க... அப்புறம் போய்டுவாங்க... ஆனா வந்தவங்க யாருமே அவர் சொன்ன கண்டிஷன மதிக்கல... அங்க அங்க குப்பைய போடுவாங்க... செவத்துல கிறுக்கி வைப்பாங்க... டாய்லெட் போயிட்டு தண்ணி ஊத்த மாட்டாங்க... அழகுக்காக வச்சிருந்த பூச்செடிகள எல்லாம் உடைச்சு போடுவாங்க... அங்க இருந்த புல்வெளிகள், நீரூற்றுகள் எல்லாத்தையும் நாசம் பண்ணுவாங்க... அப்போ அப்போ அந்த பணக்காரர் வந்து சொல்லுவார்.. சமயத்துல கோபம் வரப்போ கரண்ட கட் பண்ணிடுவார்... இல்லன்னா பெட் எல்லாம் தண்ணி ஊத்தி விட்டுட்டு போய்டுவார்... ஆனாலும் அந்த இலவச சேவைய அவர் நிறுத்தல... கரென்ட் இல்லாத்தப்போவும், பெட்ல தண்ணி ஊத்தின அன்னிக்கும் மட்டும் ரொம்ப நல்லவங்க மாதிரி நடிப்பாங்க... மறுபடியும் கரென்ட் வந்துட்டாலோ, பெட்ல ஈரம் காய்ஞ்சுட்டாலோ வழக்கமான குசும்ப ஆரம்பிச்சிடுவாங்க....

இதுல இன்னும் கொஞ்ச பேர் பண்ணதுதான் பெரிய லொள்ளு... இலவசமா யூஸ் பண்ண கொடுக்காம மூடி வச்சிருந்த மத்த நாலு விடுதிகளையும் போய் ஜன்னல உடைச்சு உள்ள என்ன இருக்குன்னு பார்க்கிறது.... நாம அதுல போய் தங்கலாமான்னு பார்க்கிறது... அந்த அழுக்கான விடுதிய விட இந்த விடுதி சுத்தமா நல்லாதான இருக்கு.. இதையும் நமக்கு ஓசில கொடுத்தா என்னன்னு யோசிக்கிறது... இப்படி தான் இன்னிக்கு வரைக்கும் நடக்குது.. அந்த பணக்காரர் நிஜமாவே நல்லவர்ங்கிறதால பெரிசா ஒன்னும் பண்ணாம அப்போ அப்போ பெட்ல தண்ணி ஊத்துறது, கரெண்ட புடுங்கிட்டு அப்புறம் மறுபடியும் போனா போகுதுன்னு கனெக்ட் பண்ணி விடுறதுமா இருக்காரு...

ஆனா அவரும் மனுஷன் தான...?? அவருக்கும் கோபம் வரும்... என்னிக்கு மொத்தமா மூடிட்டு எல்லோரையும் தொறத்த போறாரோ தெரியல... பார்க்கலாம்...

# செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் இந்தியாவின் மங்கள்யான் நிலை கொண்டது... செவ்வாயை சீண்டிய ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் வரிசையில் நான்காவதாக இந்தியாவும் இணைந்தது...

ஒரு இந்தியனாய் மகிழ்ச்சியடைந்து விஞ்ஞானிகளை பாராட்டினாலும்... ஒரு பூமிக்காதலனாய் , அவளை சீரழிப்பதை தொடர்ந்துகொண்டே செவ்வாயை சீண்டும் செலவினம் தேவையா என்ற கேள்வியுடன்... - . செந்தில் கே நடேசன்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக