முன் குறிப்பு:- இது அரசியல் பதிவு அல்ல...
இருளில் அதிக தூரம் ஊருருவும் சக்தி சிவப்பு வெளிச்ச கதிர்களுக்கு உண்டு... இதனாலேயே வாகனங்களில் எச்சரிக்கைக்கு சிவப்பு விளக்கு , சிக்னலில் சிவப்பு விளக்கு, விமானங்களில் சிவப்பு விளக்கு போன்றவை பயன் படுகிறது...
மேலும் இரத்தம் சிவப்பாக இருப்பதால் ஆதி காலம் தொட்டே சிவப்பு நிறத்தின் மீது ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும்... இதனாலேயே எச்சிரிக்கை செய்யும் எந்தவிஷயமானாலும் சிவப்பு நிறமே பயன் படுத்தப்படுகிறது....
ரயில்வேயில் சிவப்புக்கொடி... பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிக்கு சிவப்பு விளக்கு என பெயரிட்டது.. போன்றவை உட்பட...
நடுக்குறிப்பு:- இது அரசியல் பதிவு அல்ல...
நூறு வெள்ளை நிறக்கார்கள் - நூறு சிவப்பு நிறக்கார்கள் என்ற விகிதத்தில் எடுத்துக்கொண்டு ஒரு வெளிநாட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெள்ளை நிற கார்களை விட சிவப்பு நிற கார்களின் விபத்து அளவு சுமார் 6 0 % குறைவாக இருந்தது.. சிவப்பு நிறத்தின் மீதான மக்களின் எச்சரிக்கை உணர்வே இதன் காரணம்...
இந்த அடிப்படையில் தான் காவல் நிலையங்களுக்கும் , குற்றவாளிகளை எச்சரிக்கை செய்யும் விதமாக சிவப்பு வர்ணம் கொடுக்கப்பட்டது.... இது முற்றிலும் மனோவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் செய்யப்பட்டது...
(ஓவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு குணாதிஸ்யம் உண்டு... உங்கள் வீட்டு படுக்கை அறையில் சுவர்களுக்கு இளநீல நிறத்தை பூசி வைத்தால் அமைதியான தூக்கம் வரும்.. வரவேற்பறையில் இளம் சிவப்பு நிறத்தை பூசும்போது விருந்தினருக்கு மகிழ்வான மனோநிலை ஏற்படும்.. உணவறைக்கு பச்சை நிறம் பூசினால் அமைதியான சூழல் நிலவும்... படிக்கும் அறைக்கு வெள்ளை நிறம் பூசினால் சாந்தமான, கவனச்சிதறலற்ற மனோ நிலை அமையும்... இப்படியாக ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு குணாதிஸ்யம் )
பின் குறிப்பு: - இது அரசியல் பதிவே அல்ல...
புகைப்படம்:- வழக்கம் போல இணையத்தில் இருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக