லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் படிக்கும் போது நான்கு புறமும் இருக்கும் வாயில்களில் அவரை ஏற்றி செல்வதற்காக வாகனம் நிற்குமாம்.. ஒரு வாயிலில் காரை நிறுத்தினால் அவர் மற்றொரு வாயிலில் வெளிவந்து அங்கு வாகனம் இல்லாமல் நிற்க கூடாது என்பதற்காக அவரது தந்தை திரு. மோதிலால் நேரு அவர்களின் ஏற்பாடு இது.
திருவாரூரில் இருந்து உண்டியல் குலுக்கி கையெழுத்து பத்திரிகை நடத்தி அண்ணாவுடன் ஐக்கியமாகி ஆரம்பகாலத்தில் கட்சியில் இருந்தவர்களை அழித்து தலைவராக வளர்ந்தவரின் வாரிசுகளும்.....
தன்னுடைய திறமையான காபரே நடனத்தின் மூலம் திரைத்துறையில் கோலோச்சிய ஒருவரை வளைத்துப்போட்டு அதன் மூலம் தலைமை பதவிக்கு வந்தவர்களும்....
மதுரையில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து பலநாள் பட்டினி கிடந்தது வாய்ப்பு பெற்று அதன் மூலம் ஒரு முட்டாள் ரசிக கூட்டத்தை வளர்த்து அவர்களை பயன் படுத்தி தலைமை பதவிக்கு வந்தவரும்....
திண்டிவனம் வந்தவாசி சாலையில் ஒரு நாட்டு ஓடு போட்ட கட்டிடத்தில் ஐந்துக்கும் பத்துக்கும் வைத்தியம் பார்த்து இது நம் இலக்கு அல்ல என்று உணர்ந்து தன்னுடைய ஜாதியில் ஒவ்வொரு ஊரிலும் இருந்த பெரிய மனிதர்களின் கை கால்களில் விழுந்து சில பல சதுரங்க நகர்த்தல்கள் மூலம் தலைமை பதவிக்கு வந்தவர்களும் அவர்களின் வாரிசுகளும்..... முதலமைச்சர்- மத்திய அமைச்சர்- பிரதமர் என்ற பதவிகளுக்கு ஆசைப்படும் போது...
தம்முடைய குடும்பத்திற்கென்று ஒரு பெயர் இருக்கிறது.. அதனை பயன் படுத்தி யார் யாரோ பதவி- பணம்- அந்தஸ்த்து என்று அனுபவிப்பதை நாமே ஏன் அனுபவிக்க கூடாது என்று ராகுல் ஆசைப்படுவதில் எதுவும் தவறு இருப்பதாய் நினைத்தால் நீங்கள் அரசியல் வாதிகள்..!!!
கவிஞர் வைர முத்து மிக அழகாக இரண்டு வரியில் சொன்னதை நான் இங்கே கட்டுரையாக எழுதி இருக்கிறேன்.. அவர் சொன்னது இதுதான்.. "தலையே இல்லாதவன் கிரீடத்துக்கு ஆசை படும்போது... கிரீடம் வைத்திருப்பவன் தலையில் வைத்துக்கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லை.."
கவிஞர் வைர முத்து மிக அழகாக இரண்டு வரியில் சொன்னதை நான் இங்கே கட்டுரையாக எழுதி இருக்கிறேன்.. அவர் சொன்னது இதுதான்.. "தலையே இல்லாதவன் கிரீடத்துக்கு ஆசை படும்போது... கிரீடம் வைத்திருப்பவன் தலையில் வைத்துக்கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லை.."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக