ஞாயிறு, 8 மார்ச், 2015

உங்களை எல்லாம் பேசவிட்டா...



மத்திய அரசு மாநிலங்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பதற்காகத்தான் இப்படி பெரு மதிப்பிலான மின் திட்டங்களை மட்டும் செயல் படுத்தி வருகிறதாம்.. அந்த அந்த மாவட்டங்களுக்கு தேவையான மின்சாரத்தை அந்த அந்த மாவட்டங்களே தயாரித்துக்கொள்ளும் அளவிற்கு குறுகிய மின் திட்டங்கள் இதனால் தான் நிறைவேற்றப்பட வில்லையாம்.-

## அட பதருங்களா.. மத்திய அரசு பாகிஸ்தானிலோ- பங்களாதேஷிலோவா இருக்கு.. மாநிலங்களில் இருந்து
தேர்ந்தெடுத்து அனுப்பப்படும் எம் பிக்களை கொண்டு தானே மத்திய அரசே உருவாக்கப்படுகிறது.. மாநிலத்திற்கு நன்மை இல்லாமல் அவர்களை அடக்க மற்ற மாநில பிரதி நிதிகள் ஒன்று கூடி முடிவு செய்தால் சம்பந்தப்பட்ட மாநில பிரதிநிதிகள் என்ன விரல் சூப்புவார்களா..??
உங்களை முட்டாளாக்கி குனிய வைத்து குதிரை ஏறும் கூட்டத்தையே நீங்கள் திரும்ப திரும்ப அனுப்புகிறீர்கள்.. அவர்கள் மகன்- மகள்- பேரன்- கொள்ளு பேரன் முதல் பேராதி பேரன் வரைக்கும் பதவி வாங்கவும் சொத்து சேர்க்கவும் மட்டுமே கனவோடு போகிறார்கள்..
தடி எடுத்தவன் தண்டல் காரன் என்பதுபோல் பேசத்தெரிந்தவன் எல்லாம் தலைவனாகி விட்டதால் தான் இன்று இந்த நிலைமை..
அஜ்மல் கசாப்பிடம் மைக்கை கொடுத்து உரையாற்ற சொன்னால் நான் நூற்று ஒரு சதவிகிதம் நிரபராதி என்றுதான் பேசுவான்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக