ஒருமுறை பார்வதி தேவி ( w /o பரமசிவன் ) அம்மையார் தன்னுடைய ரசனைகளை எல்லாம் உள்ளடக்கியதாக ஒரு மாளிகையை கட்டினார்.. அந்த மாளிகை திறப்பு விழாவிற்கு நாள் குறிக்க ஜோசியன் ஒருவனை அழைத்துவந்தார்கள். அந்த ஜோசியம் சில பல கட்டங்களை போட்டு கூட்டி கழித்து முகம் சுழித்தான்..
" என்ன ஆயிற்று..?"
"நான் எப்படி சொல்வேன் தேவி.. இந்த மாளிகைக்கு நீங்கள் அஸ்திவாரம் தோண்ட ஆரம்பித்த நேரம் ஸ்ரீ சனி பகவான் உச்சத்தில் இருந்த நேரம்.. ஆதலால் இந்த மாளிகைக்கு ஆயுள் மிகவும் குறைந்த காலமே.." என்றான் .
பார்வதி தேவியார் கவலையில் ஆழ்ந்தார். கணவனை நச்சரித்தாள்..
"நீங்கள் தான் ஈரேழு உலகத்திற்கும் வல்லவராயிற்றே,, அந்த சனியிடம் சொல்லி என்னுடைய மாளிகைக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார்..
பரமனோ.. "தேவி.. இந்த ஒரு விஷயத்தில் சனி யார் சொன்னாலும் கேட்கமாட்டான்.. அதனால் தான் அவனை சனீஸ்வரன் என்று சொல்கிறார்கள்.." என்று சொல்லி பார்த்தார்.
ஆனால் பார்வதி தேவியார் விடாமல் நச்சரிக்க.. மனைவியை சமாளிக்க முடியாமத பரமன்..
" சரி.. நீ சொல்வதால் நான் சென்று அவனிடம் பேசி பார்கிறேன்.. ஆனால் ஒன்று.. அவன் இதற்க்கு சம்மதித்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை.. சம்மதிக்கவில்லை என்றால் நான் அங்கிருந்து என்னுடைய உடுக்கை அடிப்பேன்.. சத்தம் கேட்ட உடன் நீயே அந்த மாளிகையை இடித்துவிடு.. யாரும் கேட்டால் இந்த டிசைன் எனக்கு பிடிக்கவில்லை.. வேறு கட்ட போகிறேன் என்று சொல்லி சமாளித்து விடலாம்.." என்றார்..
பார்வதிக்கும் இந்த யோசனை சரியாய் படவே.. ஒப்புக்கொண்டாள்..
சனீஸ்வரன் இருப்பிடம் சென்ற பரமன்.. விஷயத்தை சொல்ல..
" ஈசனே.. இதற்காக நீங்கள் இங்கே வர வேண்டுமா.. சொல்லி இருந்தால் நானே ஓடோடி வந்திருப்பேனே.. "என்று சொன்னார்.. மேலும் "நீங்கள் கேட்டு நான் மறுக்க முடியுமா.. தேவியாரின் மாளிகைக்கு என்னால் எந்த வில்லங்கமும் வராது.. ஒரே ஒரு விண்ணப்பம்.. உங்களது ஆனந்த தாண்டவத்தை பார்த்து வெகுநாட்கள் ஆகி விட்டது .. எனக்காக ஒரே ஒருமுறை இப்போது ஆடிக்காட்டுவீர்களா..?" என்றார்,
சனி தன்னுடைய பேச்சை கேட்ட சந்தோஷத்தில் பரமன் ஆட ஆரம்பித்தார்.. அவர் ஆட ஆட.. அவர் கையில் இருந்த உடுக்கை தன்னாலேயே அடிக்க தொடங்கியது.. இந்த சத்தம் பார்வதியின் காதுகளில் விழுந்தது..
" அந்த சனியன் ஒத்துக்கல போல... அவன இன்னொரு சந்தர்ப்பத்துல பார்த்துகிறேன் என்று கருவியபடி.. தன்னுடைய மாளிகையை தானே இடித்து விட்டாள்..." திரும்பி வந்த பரமன் பார்த்தான்.. "அடடா.. அவசரப்பட்டு விட்டாயே தேவி.. ஆனாலும் பார்த்தாயா.. அவன் ஒருமுறை பார்த்து விட்டால் அவன் வேலையை முடிக்காமல் விடவே மாட்டான்,..."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக