இந்தியாவில் தயாராகும் நுகர்வோர் பொருட்களின் பெரும்பான்மை குறி சுமார் அறுபது சதவிகித்திற்கும் அதிகமாக இருக்கும் நடுத்தர வர்க்கம் தான்.. கிராமங்களில் கூட பரவாயில்லை.. நடுத்தர வர்க்கத்தினரில் பெரும்பான்மையானோருக்கு சொந்த வீடு இருக்கும்.. ஆனால் சிறு- பெரு நகரங்களில் வாழும் இந்த நடுத்தர வர்க்கம் படும் பாடு சொல்லி மாளாது.. கூடுமான வரை சொந்த வீடு இருப்பதில்லை.. வாடகைக்கு தான் குடி இருப்பார்கள்.. அதிலும் கீழ்தட்டு நடுத்தர வர்க்கம் இருக்கும் குடித்தனங்களை பற்றி சொல்லவே வேண்டாம்..
நீளமாய் ஒரு - அல்லது இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட புறாக்கூண்டு குடித்தனங்கள் , ஓரிரு பொது கழிவறைகளுடன்.. இந்த கழிவறைகளில் சவப்பெட்டியில் படுத்திருப்பது போல தான் உட்கார முடியும்.. அதிக வாடகைக்கு பயந்தோ - வேலை செய்யும் இடம் அருகில் இருப்பதாலோ இவர்கள் அந்த புறாக்கூண்டுகளில் வாழ பழகியவர்கள்..
அவர்கள் இருக்கும் தெருவை பற்றி அங்கு வசிப்பவர்களும் கவலை படுவதில்லை.. நகராட்சி- மாநகராட்சியும் கவலை படுவதில்லை.. அங்கே வசிப்பவர்கள் அவ்வப்போது உடைந்து வெளியேறும் சாக்கடை கண்டோ- ரோட்டில் இரைந்த குப்பை கண்டோ முகம் சுழிப்பதுடன் லேசான முனுமுனுப்புடன் தங்களின் அன்றாட கடமைகளில் ஐக்கியமாகி விடுவார்கள்..
அப்படி பட்ட தெருக்களில் வசிக்கும் பள்ளிக்குழந்தைகளை குறிவைக்கிறது ஒரு விளம்பரம்.. " ஐயோ.. என் சட்டையெல்லாம் நாத்தமடிக்குதே.. " எனும் சோப்பு தூள் விளம்பரம்..
நம்மை எல்லாம் எவ்வளவு தூரம் அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அசிங்கப்படுத்தும் அவர்கள் பொருட்களை வாங்கி அவர்களை மில்லியன்களில் புரளச்செய்வதை தவிர்ப்போம்.. அவர்களை நிராகரிப்போம்..
நமக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்குவோம்.. நல்ல பாம்பை பார்த்து நாக்கட்டாம்பாம்பு ஆடினதாம் என்றும்... புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்டதாம் என்றும்... எம் கிராமத்து மனிதர்கள் பொழுது போக்காய் சொல்லவில்லை.. ஒவ்வொன்றையும் அனுபவித்து தான் சொல்லி இருக்கிறார்கள்...
இதை எல்லாம் வாங்கி உபயோகித்தால் தான் நம்மை மதிப்பார்கள் என்றோ.. நாமும் விபரம் தெரிந்த அறிவாளி என்றோ நினைத்துக்கொண்டிருக்கும் முட்டாள் தனத்தை ஒழித்து இவர்களை புறக்கணிப்போம்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக