ஒரு டிரான்சிஸ்டரோ , ட்யூப் லைட்டோ பழுதானால் கூட உள்ளூர் மெக்கானிக்குகள் சொல்வதை வேதவாக்காய் எடுத்துக்கொண்டவர்கள்..... அந்த டிரான்சிஸ்டரையும் டியூப் லைட்டையும் உருவாக்க கூடிய வல்லமை படைத்த விஞ்ஞானிகள் சொல்வதை.. " உனக்கு என்ன தெரியும்.." என்று மறுதலிக்கும் அளவிற்கு கல்வி அறிவும், உலக அறிவும் பெற்றிருக்கிறோம்...
மீன்கள் முட்டையிடும் காலத்தில் கடலில் மீன்பிடிக்க தடை விதித்தால் "எங்கள் குடும்பமே பட்டினி கிடக்கிறது.. அரசு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் " என்று போராடும் மீனவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக "அறவழி (?) " போராட்டம் நடத்துகிறார்கள்..
மீனவர்கள் இல்லாத செய்தி என்றாவது இருக்கிறதா?? எந்த விவசாயியும் கேட்கவில்லை.. "நான் நாற்று நட்டு கதிர் அறுக்க மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகிறது.. எனக்கு உதவித்தொகை
கொடுங்கள் " என்று... அப்படியே கேட்டாலும் ஒன்றும் கிடைக்க போவதில்லை.. ஆனால் ஓரிரு நாளைக்கு மீன் பிடிக்க போகவில்லை என்றால் உதவித்தொகை வழங்கபடுகிறது...
தெரியாமல் தான் கேட்கிறேன்.. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் அன்று ஒருநாள் மட்டும் அவர்கள் மனைவி மக்களுக்கு சாப்பாட்டுக்கும் அத்தியாவசிய தேவைக்கும் மீன் பிடித்துக்கொண்டு கரையேறி விடுகிறார்களா..??
ஒட்டு பொறுக்கி அரசுகள் இவர்களை புறக்கணித்தால் எல்லாம் சரி ஆகும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக