ஞாயிறு, 8 மார்ச், 2015

அவதார புருஷர்கள்..



உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் ஒரு காட்சி.. வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாய் ஒரு ஊடகவியலாளருக்கு தகவல் வந்து கொண்டிருக்கும். காவல் துறை ஆணையர் அவர்கள் அந்த ஊடகவியலாளரை விசாரிப்பார். அவர் ஒரு பெண்.
நீங்கள் யார்"- காவல் துறை ஆணையர்.

"நான் ஒரு பெண் , அப்புறம் இந்தியன், அப்புறம் ஒரு பத்திரிக்கையாளர்.." என்று பதிலுரைப்பார்..

" நீங்க சொன்ன வரிசை முறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு " என்று ஆங்கிலத்தில் சொல்வார் அந்த காவல்துறை ஆணையர்.

## சினிமா பாத்துட்டு எப்பிடி குறை சொல்லலாம் விமர்சனம் எழுதலாம் என்று மட்டும் யோசிக்காமல் ஒரு சராசரி மனிதனாய் அதில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்களையும் கற்றுக்கொள்ளுங்கள் பத்திரிக்கையாளர்களே.. பேனா என்ற மிக வலிமையான ஆயுதம் உங்கள் கையில் இருக்கிறது உண்மைதான்.. அது மருத்துவரின் கையில் இருக்கும் கத்தி மாதிரி இருக்க வேண்டுமே தவிர கொலைகாரனின் கையில் இருக்கும் கத்தியாய் மாறக்கூடாது.


மருத்துவர் கையில் இருக்கும் கத்தி என்பது ஒரு நோயாளியை காப்பாற்ற மட்டுமே பயன் பட வேண்டும்.. ஒரு நாவிதரின் கையில் இருக்கும் கத்தி என்பது ஒருவரின் முகத்தை அழகு படுத்த மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும்..
என்ன காரணத்திற்காக அவர்கள் கையில் கத்தி கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்த காரணத்திற்காக மட்டுமே அவர்கள் அதை பயன் படுத்த வேண்டும்.. மாறாக என்னுடைய கையில் கத்தி இருக்கிறது என்பதற்காக அவர்கள் மற்றவரை காயப்படுத்த முனைந்தால்...????
ஜனநாயகம் என்பதும் அப்படித்தான்.. உங்கள் கையில் இருக்கும் ஜனநாயக- சுதந்திர கத்தியை அதற்குறிய முறையோடும் பயன் படுத்துங்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக