மரணத்திற்கு பின்பு சொர்க்கம் அடைந்த கர்ணனுக்கு பசி மட்டும் அடங்கவே இல்லை.. எதை சாப்பிட்டாலும் பசித்தது... அப்போது நாரத முனி அங்கு வந்தார். கர்ணன் அவரது பிரச்சினையை நாரதரிடம் சொன்னார். உன்னுடைய வலதுகள் ஆட்காட்டி விரலை உன்னுடைய வாயில் வைத்துக்கொள்.. பசி அடங்கி விடும் என்று சொன்னார் நாரதர். கர்ணனும் அவ்வாறே செய்ய பசி நொடியில் அடங்கியது. கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.. எப்படி..இது.. வினவினான்.
நீ இதுவரை எல்லாவித தானங்களையும் செய்தாய்.. ஆனால் அண்ண தானம் மட்டும் செய்யவில்லை.. எனவேதான் உனக்கு பசித்தது..
ஆட்காட்டி விரலை வைத்த உடன் பசி அடங்கி விட்டதே.. அது எப்படி..??
போர்காலத்தில் படி பிரிவினர் தங்கி இருந்த பொழுது நீ அங்கு சென்றாய். அப்போது ஒரு வீரன் உன்னிடம் கேட்டான், உணவுக்கூடம் எங்கே இருக்கிறது என்று. அதோ இருக்கிறது என்று நீ சுட்டிக்காட்டினாய்.. அதனால் உன்னுடைய விரலுக்கு மட்டும் அந்த அன்னதானம் செய்த புண்ணியம் கிடைத்தது..
கர்ணனை விட அவனுடைய கரங்கள் கூடுதல் சிறப்பானது..
தானம் செய்துதான் புண்ணியம் தேடவேண்டுமேன்பது இல்லை.. ஒருவருக்கு அவரது தேவையை அடைய வழி காட்டுதலும் புண்ணிய காரியம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக