இந்த உலகம் அழியத்தான் போகிறது.. மாயன் காலண்டரோ- வெள்ளிக்கிழமைகளில் பாவமன்னிப்பு கோர கூப்பிடுபவர்கள் சொல்லும் படியா தெரியாது..ஆனால் செல்ஃபோனின் காரணமாய் ஒரு நாள் நிச்சயம் இந்த உலகம் அழியத்தான் போகிறது.. எப்படி..??
அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் அப்பு கமல் கதாபாத்திரம் வில்லன்களில் ஒருவரான அன்பரசு டெல்லிகணேஷ் கதாபாத்திரத்தை கொலை செய்யும் காட்சியை நினைத்துப்பாருங்கள்.. "இது என்ன..." "கோலி.. ..." "நீ விளையாட்டா செஞ்ச வினை... இப்போ இந்த வினை செய்ற விளையாட்ட பார்க்கிறியா..?" என்பார்.. அந்த கோலிக்குண்டு பலூனை உடைத்து உருளைகளை உருட்டி அடுத்தடுத்து தொடர்வினையாய் விசையில் பொருத்தப்பட்ட அம்பை இலக்கு நோக்கி செலுத்தும்..
அந்த கோலி குண்டுதான் உங்கள் கையில்- என் கையில் இருக்கும் செல்ஃபோன் .. ஆனால் இந்த முறை இலக்கு... எதிரி இல்லை.. நாமே தான்...
உற்பத்தியை பெருக்குகிறேன் பேர்வழி என்று அதிக விளைச்சல் ஆசை காட்டி விவசாயியிடம் இருந்த விதை நெல்லை பிடுங்கியாயிற்று.. விவசாயம் செய்தாலும் கூட இன்றைய விவசாயியின் கையில் .. இல்லை இல்லை... விவசாயிக்காக கடையில் இருப்பது ஃபார்மேஷன் இரண்டு என்ற முறையில் ஆராய்ச்சிக்கூடங்களில் , மரபுப்பொறியியலை பயன்படுத்தி முளைப்புத் திறன் நீக்கப்பட்ட விதைகள்.. அதாவது கிராமத்தான் பாஷையில் சொன்னால் காயடிக்கப்பட்ட விதைகள்.. இவைகளை மறு தலை முறையை உருவாக்கவே இயலாது..
கோழிகளில் ஏற்கெனவே அப்படி செய்தாயிற்று.. முட்டைகோழிகள் இடும் முட்டையால் குஞ்சு பொரிக்க இயலாது... கறிக் கோழிகளால் குஞ்சு உருவாக்க இயலாது..
மது- புகை- ரேடியேஷன் சமாச்சாரங்களால் மனிதனும் மறைமுகமாக அந்த இலக்கு நோக்கித்தான் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறான்..
இப்போது ஆபத்து இன்னும் அதி தீவிரமாய் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.. மௌனமாய்... மறை முகமாய்..
செல் ஃ போன் கதிர்வீச்சுக்களால் சிட்டுக்குருவி இனத்தை அழித்தாயிற்று.. அடுத்தபடியாக அழிந்து கொண்டிருப்பவை பட்டாம் பூச்சிகளும் தேனீக்களும்.. இந்த பட்டாம் பூச்சிகளும் தேனீ க்களும்தான் மகரந்த சேர்க்கை எனப்படும் தாவர உடலுறவை நடத்திவைத்து கருஊட்டும் ஜீவ அணுக்களை கடத்தும் வேலையை செய்பவர்கள் .. இதற்காக இவைகளுக்கு மலர்கள் கொடுக்கும் கூலிதான் தேன்..
விவசாயி பயிரிடும் செடி/கொடி/மர வகைகளின் விதைகளை ஃ பார்மேஷன் 2 கொண்டு அழித்தாயிற்று.. இயற்கையாய் முளைக்க கூடிய தாவர வகைகளின் இனப்பெருக்கம் நடக்காமல் தடுக்கும் விதமாய் தேனீ- பட்டாம்பூச்சி வகைகளும் அழியத்தொடங்கிவிட்டன.. இன்னும் பத்து இருபதாண்டுகளில் என்ன ஆகும்??
காற்றில் மகரந்த சேர்க்கை நடத்தும் தாவரங்களை தவிர மற்ற தாவரங்களுக்கு மகரந்த சேர்க்கையே நடக்காமல் போகும்.. அதன் காரணமாய் அந்த தாவர இனங்கள் அழியும்.. ஒன்றை அடுத்து ஒன்றாக வாரிசு இல்லாத தாவர தலை முறைகள் முற்றிலும் காணாமல் போகும்.. தாவரம் இல்லாமல் மழை இல்லை.. மழை இல்லாமல் மனிதன் இல்லை..
மாயன் காலண்டர் நிஜமாக அணு உலைதான் வேண்டுமென்பதில்லை... உங்கள் கையில்.. என் கையில் இருக்கும் "நாம் செய்த வினை கோலிக்குண்டு" செல்ஃபோன் போதும்..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக