உங்களை ஒரு நண்பர் அழைக்கும் போது உங்கள் அருகில் இருவருக்கும் தெரிந்த இன்னொரு நபர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.. அந்த நண்பர் உடனிருக்கிறார் என்று மட்டும் உங்களை அழைத்த நண்பருக்கு தெரிவியுங்கள்.. மாறாக.." அவர் இருக்கிறார்.. அவருடன் பேசுகிறாயா.." என கேட்காதீர்கள்.
உங்களை அழைத்த நபர் அவருடைய அலை பேசியில் மிக குறைவான தொகை வைத்திருக்க கூடும்.. நீங்கள் "பேசுகிறாயா.." என்று கேட்கும் போது அவரால் தவிர்க்க முடியாது.. அப்படி தவிர்த்தால் அந்த உடனிருக்கும் இன்னொரு நண்பர் அழைத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ள கூடும்.
நீங்கள் இன்னொரு நண்பர் உடனிருக்கும் விஷயத்தை மட்டும் தெரிவித்தால் அழைத்தவர் அந்த இன்னொரு நண்பருடன் பேசும் அளவிற்கு நேரமோ- தொகையோ இருக்கும் பட்சத்தில் "அவர்கிட்ட கொடு" என்று தாமாகவே முன் வருவார்..
நீங்களே வலுக்கட்டாயமாக அவருடன் பேசுகிறாயா என கேட்டு அப்படி அவரும் மறுக்க இயலாமல் பேசும் போது அவரது அலை பேசி ஜீரோ பேலன்ஸ் ஆகி விட்டால் கையில் பணமோ- ரீசார்ஜ் செய்யும் கடையோ அருகில் இல்லாத பட்சத்தில் அவரால் அவசர கால அழைப்புகள் கூட செய்ய இயலாமல் போய் விடும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக