ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய- மத்திய மாநில அரசுகள் மற்றும் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி என்னுடன் அறையில் தனி இருக்கும் அருப்புக்கோட்டையை சேர்ந்த நண்பர் ஒருவருடன் சிறு விவாதம் வந்தது. நான் சில கருத்துக்களை முன்வைத்தேன்.. அதற்கு அவர் சில மறுப்புக்களை கூறியதுடன்.. " உங்களுக்கு என்ன தெரியும்.. நான் பெரிய பெரிய ஆட்களுடன் பழக்கம் வைத்திருக்கிறேன்" என்றார்..
எனக்கு ஒன்றும் தெரியாது என்பதில் எனக்கு நூறு
விழுக்காடு உடன் பாடு இருந்தாலும் அவர் சொன்ன பெரிய ஆட்கள் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் மேலிட.. அவரிடமே கேட்டேன்.. அவங்க எல்லாம் QP (கத்தார் பெட்ரோலியம்) , கத்தார் காஸ் ல் வேலை செய்பவர்கள்.. மாதம் 15000 -20000 ரியால் சம்பளம் வாங்குபவர்கள் என்று சொன்னார்..
இந்த நேரத்தில் அவர் மேற்கூறிய நிறுவனங்களில் அவர்கள் செய்யும் வேலையையும் குறிப்பிடுதல் சாலசிறந்தது என நினைக்கிறேன்.
அவர் சொன்ன ஆட்கள் வேலை செய்யும் இடம் கடலுக்குள் இருக்கிறது. உலங்கு வானூர்தி ( ஹெலிஹாப்டர்) மூலம் அவர்கள் வேலைக்கு சென்றால் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை அவர்கள் அங்கேதான் வேலை செய்ய வேண்டும். எவ்வளவு காலம் அங்கு வேலை செய்கிறார்களோ அதே அளவு காலம் அவர்கள் தரை பகுதிக்கு வரலாம். அவ்வாறு தரை பகுதிக்கு வருபவர்களின் கால அளவை பொறுத்து அவர்கள் தாய் நாட்டிற்கு செல்லவும், இங்கேயே தனி இருக்கவும் அனுமதிக்கப்படும். இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
நான் அவருக்கு சொல்லவில்லை.. பணக்காரகள்தான் புத்திசாலிகள் என்று நினைக்கும் உங்களுடன் வாதம் செய்ய முயன்ற நான் நிச்சயமாய் ஒன்றும் தெரியாதவன் தான்.. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்..
வேலைக்கும், புதிசாலிதனத்திற்கும், அறிவுக்கும் வித்தியாசம் தெரியாமலேயே அரை நூற்றாண்டுகளுக்கு மேல் (55 வயது அவருக்கு ) வாழ்ந்துவிட்ட அவரை திருத்தவா நான் கத்தார் வந்தேன்..?? என்னுடைய மனைவி மக்களுக்காக சம்பாதிக்க வேண்டும்... எனக்கு அலுவலகத்திற்கு நேரமாகி விட்டது..!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக