சனி, 9 மே, 2015

கிராம புற மாணவர்களின் வாய்ப்பை புத்திசாலித்தனமாய் தட்டிப்பறிக்கும் நகர்புற மாணவர்கள்....

கிராம புற மாணவர்களின் வாய்ப்பை புத்திசாலித்தனமாய் தட்டிப்பறிக்கும் நகர்புற மாணவர்கள்....

தற்போதைய இந்திய- தமிழக கல்வி முறைகளில் அமல் படுத்தப்படும் இட ஒதுக்கீடுகளில் ஒன்று கிராம புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது எல்லோரும் அறிந்ததே.. நகர்ப்புறங்களில் வசிக்கும் படித்த நல்ல வேலையில் இருக்கும் பெற்றோர் தங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் பத்தாம் வகுப்பு வரை நகர்ப்புறங்களில் படித்திருந்தாலும் பொறியியல
் மருத்துவத்துறைகளில் இட ஒதுக்கீட்டிற்காக அவர்களின் பிள்ளைகளை கிராம புறங்களில் இருக்கும் மேல்நிலை பள்ளிகளுக்கு பதினொன்றாம்- பன்னிரெண்டாம் வகுப்பிற்கு அனுப்புகிறார்கள். மரபியலின் காரணமாகவும், அவர்களின் அடிப்படை கல்வியின் காரணமாகவும், அவர்களின் வாழ்க்கை முறை காரணமாகவும் அந்த நகர்புற மாணவர்கள் கிராம புற பள்ளிகளுக்கு வந்து ஏற்கெனவே கிராம புறங்களில் பயிலும் மாணவர்களை முந்துவதன் மூலம் ஓரிரண்டு கிராம புற மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிச்செல்கின்றனர்..

சமீபத்தில் பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் பொன்னாவராயன் கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் ஐ ஏ எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி .இவரது தந்தை ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் பொன்னாவராயன் கோட்டை என்று சொல்லப்பட்டாலும் நிஜமாகவே இவர் அந்த கிராமத்தை சேர்ந்தவரில்லை. அங்குள்ள அரசு ஊழியருக்கான வீட்டு வசதித்துறை குடியிருப்பில் வசித்தவர். இவர்களது வீட்டின் அருகில் சுமார் ஒன்னரை கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை நகர அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி மற்றும் சில பல தனியார் பள்ளிகள் இருந்தும் இவர் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் நாட்டுச்சலை என்ற கிராமத்தில் உள்ள மேல்நிலை பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று அந்த கிராம புற மாணவர்களுக்கான கோட்டாவை பயன்படுத்தி பொறியியல் படிப்பிற்கான இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இவர் தனது திறமையால் உயர்ந்திருப்பதை மறுக்கவில்லை.. அதே நேரம் இவர் ஒரு கிராம புற மாணவனின் வாய்ப்பை பறித்திருப்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது..

கிராமபுரங்களில் வசிக்கும் மாணவர்கள் நகரங்களை நோக்கி படை எடுக்க நகர்புறத்தில் இருக்கும் புத்திசாலிகளோ கிராம புற மாணவர்களுக்கான இடத்தை எளிதாய் தட்டசெல்கின்றனர்.. கிராம புற பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதன் மூலமும், அங்கு படிக்கும் கிராம புற மாணவர்களின் பெற்றோர் அங்குள்ள ஆசிரியர்களிடம் தொடர்ந்த சந்திப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆசிரியர்களின் பொறுப்புணர்ச்சியை கூட்டுவதன் மூலமும் கிராம புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கிராம புற மாணவர்களுக்கே கிடைக்கும் படி செய்யலாம்..
நல்ல வேளை... இப்போது இருக்கும் நடைமுறை படி இட ஒதுக்கீட்டிற்காக ஜாதி மாற்ற முடியுமானால் அதனையும் எளிதாய் செய்து டாக்டர் பிள்ளைகள் டாக்டராகவும், பொறியாளர்கள் பிள்ளைகள் பொறியாளர்கள் ஆகவுமே தொடர்வர்... பாவப்பட்ட தொழில் செய்யும் பெற்றோரின் பிள்ளைகள் அதே பாவப்பட்ட தொழிலிலேயே கிடந்தது வேகும் நிலை வந்திருக்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக