ஓரிருவர் நோகாமல் நுங்கு தின்னும் ஆசைக்கு தமிழ் நாடு அரசு தேர்வாணையம்
நடத்திய குரூப் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு காரணமான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசை ஏமாற்றி வேலை வாங்க முயற்சித்தது போன்று இன்னும் சில சோடையான சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...

சுமார் 640000 பேர் எழுதிய இந்த தீவுகளுக்கு அரசுக்கு நேரிடையாக ஏற்பட்ட செலவுகள் எத்தனை...?? இந்த தேர்வுகளை எழுத வந்திருந்த 640000 பேர்களுக்கும், அவர்களுக்கு உதவி செய்ய வந்தவர்களுக்கும் ஆனா செலவுகள் எவ்வளவு...?? இதை எல்லாம் எப்படி ஈடு செய்ய போகிறார்கள்..
இதனால் ஏற்பட்ட அத்தனை பொருளாதார இழப்புகளையும் அந்த குற்ற செயல்கள் நிரூபிக்கப்படின் அவர்களிடமே வசூல் செய்ய வேண்டும்.
தேர்வு எழுதும் போதே முறைகேடு செய்து ஏமாற்றி அரசு பதவிக்கு வர ஆசைப்படும் இவர்கள் போன்றவர்கள்
இந்த தகவல் வெளிவராமல் இருந்திருந்தால் இதன் மூலம் இரண்டாம் நிலை அரசு அலுவலருக்கான வேலையை இவர்கள் பெற்றிருந்தால் எப்படி நியாயமாக வேலை செய்வார்கள்.. இது போன்றவர்கள் தான் அரசு இயந்திரத்தின் புற்று நோய்கள்.. இவர்களை கண்டு பிடித்து அழித்து விட்டாலே அரசு இயந்திரத்தை சீர் செய்யும் முயற்சியில் சுமார் 60 % வெற்றி கிடைத்து விடும்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக