சனி, 9 மே, 2015

."ஒரு பயலும் சும்மா தர மாட்டான்......

சில்லறை வணிகத்தில் வால் மார்ட், கேரி ஃபோர், சிஸ்கோ போன்ற பன்னாடு நிறுவனங்களை அனுமதிதால் இந்தியாவில் வணிகமே பாதிக்கப்பட்டு விடும் என்றும், இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விடுமென்றும், பலகோடி பேர் வேலை வாய்ப்பிழப்பார்கள் என்றும், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால் 12 கோடி சிரு வணிகர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று இன்று ஓலமிடும் வணிகர்கள் எதிகட்சிகள் ஏன் பயன்பெறப்போகும் பொது நுகர்
வோர்களையும், நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை பெறப்போகும் பல கோடி பேர்களையும் பற்றி பேசுவதில்லை...???

ஆடு நனைகிறதே என்று ஓனாய்கள் கவலைப்பட்ட கதையாக இருக்கிறது இன்று வணிகர்கள் விவசாயிகள் பற்றியும் அவர்களிடம் பணி புரியும் தொழிலளர்கள் பற்றியும் புலம்புவது. இவர்களிடப் பணி புரியும் தொழிலாளர்களிடம் இரகசியமாய் விசாரித்தால் மட்டுமே தெரியும் இந்த தொழிலாளர்களின் நலனில் இந்த சில்லறை வணிகம் செய்யும் முதலாளிகள் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்களென்பது. இவர்கள் நிஜமாகவே விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டிருந்தார்களெனில் உலக மயமாக்கலில் எஃப் 2 விதைகள் இந்தியாவில் நுழைய ஆரம்பித்த காலத்தில் பாரம்பரிய விதைகளில் விளைவித்த பொருளுக்கு இருமடங்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்ய தயாராயிருந்திருந்தால் இன்று எந்த விவசாயியும் விதை நெல்லை தொலைக்க துணிந்திருக்க மாட்டான்... பாரம்பரிய விதையில் ஒரு ஏக்கருக்கு 20 மூட்டை விளைந்திருந்தால் எஃப் 2 வீரிய ஒட்டு ரக விதையில் அதே ஒரு ஏக்கரில் 60 மூட்டை அறுவடை செய்ய முடிந்தது... பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிக்க கூடாதென இன்று போர்கொடி தூக்கும் சில்லரை வணிகர்கள் அன்று பாரம்பரிய விதை விளை பொருளுக்கு அதிக விலை கொடுக்க முன்வந்திருந்தால் விவசாயிக்கு 60 மூட்டையில் கிடைக்கும் அதெவிலை 20 மூட்டையிலேயே கிடைத்திருக்குமென்பதால் அவன் எஃப் 2 விதைகளை நாட அவசியமே இருந்திருக்காது...
எந்த சில்லறை வணிகன் விவசாயியின் விளை பொருளுக்கு நியாயமான விலை கொடுத்து வாங்கி இருக்கிறான்..?? உதாரணமாக ஒரு விவசாயி தன் தோட்டாத்தில் விளையும் ஒரு வாழைத்தாரை அருகிலிருக்கும் சிரு நகர சில்லறை வியாபாரியிடம் கொடுக்கும்போது அந்த வணிகன் இப்படிதான் சொல்வான்..." இப்போ யார் வாங்கறா இதை... இதெல்லாம் விக்காதுபா.. " கெஞ்சி கூத்தாடி திரும்ப வீட்டிற்கு எடுத்து போகாமலிருக்க அவன் கேட்கும் விலைக்கு கொடுத்துவிட்டு இவர் போன பிறகு.. அதனை வாங்க வரும் நுகர்வோரிடம் அந்த வணிகன் அதே பொருளுக்கு இப்படி சொல்வான்..." எங்கயுமே கிடைக்கலப்பா.. இஷ்டம்ன வாங்கு.. இல்லன்னா..போ.." ,.
குண்டூசி தயாரிப்பவன், ஊறுகாய் தயாரிப்பவனெல்லம் தங்கள் தயாரிக்கும் பொருளுக்கு அவனே விலை நிர்னயம் செய்யும் போது பாவப்பட்ட விவசாயி வாங்குபரின் விலை நிர்னயத்திற்கு கட்டுபட வேண்டிய அவசியமென்ன..?? விலைபொருளை பாதுகாக்க வசதியும், அவனை பாதுகாக்கும் வசதியும் இல்லாதுதானே தவிர... பண்ணாட்டு - உள் நாட்டு வியாபாரிகள் எண்ட்ற பாகுபாடெல்லாம் இல்லை.. எல்லோரும் விவசாயியின் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் தான்...
இந்த முதலீட்டு விவகாரத்தில் சில்லரை வியாபாரிகள் பரப்பும் வதந்திகளை நம்பாமல் ஒரு நுகர்வோராய் நமக்கு நல்ல பொருளை எவன் கொடுத்தாலும் சரி என்பதே எம் நிலை.... இரத்தக்கண்ணீர் காந்தாவின் வசனம் தான் இங்கு பொருத்தமாய் இருக்கும்....."ஒரு பயலும் சும்மா தர மாட்டான்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக