சனி, 9 மே, 2015

இந்திய தயாரிப்பாளர்கள்

இந்திய தயாரிப்புகளை வாங்கி உபயோகிப்பதுதான் நாம் இந்தியாவிற்கு 
செய்யும் சேவை  என்று ஒரு தோழி சொன்னார்... 

சரி... இந்திய தயாரிப்புகளை வாங்கி உபயோகிக்க நானும் தயார் தான்.. 
ஆனால் இந்திய தயாரிப்பு கம்பெனிகளில் எத்தனை கம்பெனிகள் அரசை ஏமாற்றாமல் 
வரி செலுத்துகிறது..?? வெளிநாட்டு முதலீடுகளில் தொடங்கப்படும் நிறுவன 
தயாரிப்புகளில் குறைந்த பட்சம் தரமாவது இருக்கும். ஆனால் இந்திய தயாரிப்புகளில் 
நமக்கு கிடைப்பது என்னவோ அந்த நிறுவனமே இரண்டாம் தரம், 
மூன்றாம் தரம் என்று பிரித்தவை தான்.. 

அந்த இந்திய நிறுவனங்கள் "எக்ஸ்போர்ட் குவாலிட்டி " என்று நல்ல 
தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விட்டு 
தள்ளியவைகளை நம் தலையில் கட்டுவார்கள்... 
இந்தியர் என்ற உணர்வோடு நாம் வாங்கும் பொருட்களால் 
பணக்காரர்களாக போவது சில தனிப்பட்ட பண முதலைகள் தானே அன்றி 
இந்த தேசத்திற்கு என்ன லாபம்?? 

அப்படி சம்பாதித்த பணத்தை இங்கேயே முதலீடு செய்கிறார்களா என்றால் 
அதுவும் இல்லை... வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள்.. 
அல்லது கருப்பு பணமாக பதுக்குகிறார்கள்.. 
இவர்கள் வீசும் எலும்புதுண்டுகளில் அரசியல் வியாபாரம் நடத்தும் மானம் கெட்ட 
அரசியல் வாதிகளோ அவர்கள் பங்கிற்கு ஆகவேண்டியதை செய்கிறார்கள்..

இந்த நாடு நலம் பெற வேண்டும் என்ற ஒரே எண்ணமுடைய ஒரு நல்ல 
தலைவனின் கீழ் அமையும் ராணுவ ஆட்சியையும் அந்த ராணுவ ஆட்சிக்கு நேர்மையானவர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பும் மட்டுமே 
நம் தேசத்தை முன்னேற்றும்.. ராணுவ ஆட்சியில் சில பல கஷ்டங்கள் நிகழலாம்.. 
ஆனால் தேசத்தில் பரவி இருக்கும் புற்று நோயை ஒழிக்க வேறு வழி இல்லை...

ஆனால் இவைகள் சாத்தியமே இல்லை என்பதுதான் நிதர்சனம்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக