சனி, 9 மே, 2015

பெருகி வரும் கள்ள காதல் - உரமிட்டு வளர்க்கும் ஊடகங்கள் - ஏமாறுகிறதா காவல் துறை???

சம்பவம் 1 :- தான் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொள்கிறார் ஒரு பெண்.. தன்னுடைய மகளின் கற்பை பாதுகாக்கும் பொருட்டு அந்த கொலையை செய்த அந்த பெண் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் அவரை விடுவிக்கிறார் மதுரை நகர காவல
்துறை உயரதிகாரி திரு அஸ்ரா கார்க் அவர்கள்..

சம்பவம் 2 : - வெளியில் உட்கார்ந்திருந்த தன்னுடைய மூத்த மகளை கையை பிடித்து உள்ளே இழுத்து சென்ற தந்தை அந்த மூத்த மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், பின்னாலேயே உள்ளே சென்ற இளைய மகள் அக்காவை காக்கும் பொருட்டு தன்னுடைய துப்பட்டாவை தந்தையின் கழுத்தை பிடித்து இருக்கும் போது அவர்களின் தாயும் அவர்களோடு சேர்ந்து கொள்ள.. அந்த தந்தையை கொன்று விட்டதாகவும் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்... அவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டு விடுகிறார் காவல் துறை அதிகாரி திரு. சைலேந்திர பாபு அவர்கள்.

சம்பவம் 3 ;- சன் தொலைக்காட்சியில் இரவு 11 மணிக்கு ஒளி பரப்பாகும் "நினைத்தாலே இனிக்கும்" நேரலை நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு. வெங்கட் அவர்களுடன் மதுரை அலங்காநல்லூரில் இருந்து பிரியா என்ற ஒரு கல்லூரி மாணவி 29 /04 /2012 இரவு 11 .50 ௦ க்கு நடத்திய உரையாடல் கீழே...
வெங்கட் -: வணக்கம்.. யார் பேசுறீங்க.. எங்க இருந்து பேசுறீங்க..
நேயர் : நான் பிரியா பேசுறேன்.. மதுரைல இருந்து..
வெங்கட் : சொல்லுங்க ப்ரியா.. ஏன் சோகமா பேசுறீங்க..
நேயர் : ................................ ( மௌனம் )
வெங்கட் : ப்ரியா.. லைன்ல இருக்கீங்களா..??
நேயர்.. ம்ம்..ம்ம்.. சோகம்தான்.. எனக்கு உங்க கூட வாழனும்.. ( கவனிக்க..- இந்த இடத்தில் அந்த நேயரின் குரல் விரகத்தால் நிரம்பி வழிகிறது )
பதில் சொல்ல தெரியாத வெங்கட் அவர்கள் எதோ சொல்லி இணைப்பை துண்டித்து பாடலை ஒளிபரப்புகிறார்..
அடுத்த நாளும் இதே நள்ளிரவு நேரலை நிகழ்ச்சியில் அதே பிரியா தொடர்பு கொண்டு மீண்டும் இதே தொனியில் பேசுகிறார்..

மேற்கண்ட முதலிரண்டு சம்பவங்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவலாய் பேசப்பட்டு அந்த காவல்துறை அதிகாரிகள் பாராட்டவும் பட்டார்கள்.. ஆனால் இதில் உண்மைத்தன்மை என்ன..?? இப்படித்தான் நடந்திருக்கும் என்று சொல்லவில்லை.. ஆனால் ஏன் இப்படி நடந்திருக்காது என்பதே எமது சந்தேகம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.. முதல் சம்பவம் நிச்சயமாய் நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது,.. ஏன் என்றால் அந்த சம்பவம் நடந்த நேரம், சூழ்நிலை,.. இப்படி ஒரு சம்பவத்தில் என்ன தண்டனை என்பது பற்றியோ வேறு எதையும் பற்றியோ சிந்திக்க அந்த தாய்க்கு நேரம் இல்லை,,, மகளை காப்பாற்றும் வெறி மட்டுமே இருந்திருக்கிறது.. திரு அஸ்ரா கார்க் அவர்கள் சட்டத்தின் விதி விலக்கை பயன் படுத்தி அந்த பெண்ணை விடுவித்தது நிச்சயம் பாராட்ட பட வேண்டிய ஒன்று.. ஆனால் இரண்டாவது சம்பவம் தான் லேசான சந்தேக விதையை ஊன்றி இருக்கிறது..

இரண்டாவது சம்பவம் எப்படி நிகழ்ந்திருக்கும்..??
வீட்டிற்கு வெளியில் இரண்டு மகள்கள் உட்கார்ந்திருக்கும் போது ஒரு மகளை உள்ளே இழுத்து சென்று கற்பழிக்க எந்த தந்தைதான் - அவன் எவ்வளவு பெரிய காமுகனாக கூட இருக்கட்டும் - முயற்சி செய்வான்..??

பெருகி விட்ட தகவல் தொடர்பு சாதனங்களும், சமூக வலைத்தளங்கள் தரும் சுதந்திரமான அறிமுகங்களும் பல குற்றங்களுக்கு வித்திடுவதை யாரும் மறுப்பதற்கில்லை.. இதில் நிறைய கள்ள காதல்கள், முறை தவறிய பாலியல் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டு இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை...

முதல் சம்பவத்தில் கிடைத்த விடுதலையை இரண்டாவது சம்பவ கொலை காரர் ஏன் புத்திசாலித்தனமாக உபயோகித்திருக்க கூடாது..?/ அந்த பெண்மணியோ - அந்த மகள்களில் ஒருவரோ இது போன்ற ஒரு வலையில் விழுந்து அதற்கு அந்த வீட்டில் இருந்த ஆண் ( ஒரு வேளை இவரால் அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியில் எந்த பயனும் இல்லாமல் இருந்திருக்கலாம் ) அதற்கு தடை என நினைத்து அவரை ஒழித்துக்கட்டும் ஒரு புத்திசாலித்தனமான கொலையாய் ஏன் இது இருந்திருக்க கூடாது...

ஒரு நேரலை தொலைகாட்சி நிகழ்ச்சியில் உலகில் எத்தனை பேர் பார்த்துகொண்டிருப்பார்கள் என்ற கவலையோ பயமோ இன்றி ஒரு பெண் இவ்வாறான உரையாடலை நிகழ்த்துகிறார் என்றால் பெண்கள் எவ்வளவு சீரழிந்திருக்கிறார்கள்..??
இதனை ஏன் காவல் துறை இந்த கோணத்தில் விசாரிக்க வில்லை.. காவல் துறை நற்பெயர் சம்பாதிக்க எண்ணி குற்றவாளியை தப்பிக்க விட்டிருக்கிறதா?? இல்லை ஏமார்ந்திருக்கிறதா/காவல் துறை எப்படி எளிதாய் எடுத்துக்கொண்டு அந்த விஷயத்தை மூடிவிட்டிருக்கிறது..?? இது இன்னும் எத்தனை குற்றவாளிகளுக்கு துணிச்சலை தரும்??

ஊடகங்களையும் , தொலை தொடர்பு வளர்ச்சியையும், சமூக வலைத்தளங்களையும் பெண்கள் எவ்வாறு உபயோகிக்கிறார்கள்..?? பொழுது போக்கு என்பதையும், அத்தியாவசியம் என்பதையும் தாண்டி தவறான பாதையில் உபயோகிக்க தொடங்கி அது மேலும் குற்ற வளையத்திற்குள் அவர்களை இழுத்து ஒரு மோசமான சமூக சீர்கேட்டிற்கு வித்திடுகிறார்களா..??
பொறுத்திருப்போம்... ஒரு நாள் வெளியில் வரும்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக