சனி, 9 மே, 2015

கிணற்று தவளை

ஸ்கூலுக்கு போகலன்னு எங்க அப்பா அடிக்கிறாரு... சாப்பிடவே பிடிக்கல.. ஆனா அதுக்கு போயி அம்மா அடிக்கிறாங்க.. நாட்டார் கடையில கலர் கலரா ஜவ்வு மிட்டாய் விக்குது.. ஆனா வாங்கி திங்க காசு தர மாட்றாங்க..
எங்க ஊரு கோயில் குளத்துல நிறைய தண்ணி இருக்கும்..அங்க போய் பசங்களோட குளிக்க எனக்கு பிடிக்கும்.. ஆனா அதுல ஆழம் அதிகமா இருக்கும்னு எங்க அண்ணன் அடி பின்னிடுவான்.. இங்க என்னோட ஆசைகளை யாருமே மதிக்கிறதில்ல.. என்னை எல்லோரும் கொடுமை பண்றாங்க... ## சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நான் மிக தெளிவாய் சிந்தித்து எடுத்த முடிவு அது.

எனது பிள்ளையை இதையும் விட எப்படி அன்பாய், பாதுகாப்பாய், கண்டிப்பாய் வளர்க்கலாம் என்ற யோசனையில் நான்..

சுதந்திரம் மீதான நிறைய பேரின் பார்வையும் இப்படித்தான் இருக்கிறது. கிணற்று தவளைக்கு எப்படி புரியவைப்பது கடலின் நீள அகலத்தை?? யார் சொல்லுவது இவர்களுக்கு அடிமைத்தனம் என்றால் என்ன.. சுதந்திரம் என்றால் என்ன என்பதை???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக