தடகள போட்டியில் தொடர் ஓட்டம்/அஞ்சல் ஓட்டம் (RELAY RACE ) என்றொரு விளையாட்டு இருக்கும்.. ஒரு நானூறு மீட்டர் சுற்றளவுள்ள வட்டமான ட்ராக்கில் ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் ஒரு நபர் வீதம் நான்கு பேர் கொண்டது ஒரு அணி... முதலில் தொடங்குபவர் ஓடி சென்று தன்னுடைய கையில் இருக்கும் ஒரு குச்சியை இரண்டாவதாய் நிற்கும் தன அணியினரிடம் சேர்க்க வேண்டும்.. இப்படியாக அடுத்தவர்- அடுத்தவர் என்று அந்த குச்சியை தொடங்கிய இடத்திற்கே சேர்க்க வேண்டும்... இதில் யாரொருவர் வேகம் குறைந்தாலும் அடுத்தடுத்து இருப்பவர்கள் அந்த வேகத்தை ஈடு செய்ய வேண்டும்.. அதே நேரம் நம் கையில் குச்சி வந்தவுடன் அடுத்த நபரிடம் அந்த குச்சியை கொண்டு சேர்க்கும் முனைப்போடு ஓட வேண்டும்... மாறாக அந்த குச்சியை வாங்கிக்கொண்டு மெதுவாக நடந்து சென்றாலோ.. இல்லை.... தமக்கு முன்னால் நிற்பவர் ஓடிவந்து வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாலோ.. ஒருவரின் தவறில் ஒட்டுமொத்த அணியும் தோல்வியைத்தழுவ வேண்டும்...
வாழ்க்கையும் இப்படித்தான்... அடுத்தடுத்த இடங்களில் நிற்பவர்கள் உங்களின் அடுத்தடுத்த தலைமுறை... உங்களது பொறுப்பில் ஒரு குடும்பம் வந்த உடன் அதனை நல்ல முறையிலும், நேர்மையான வழியிலும் , முன்னேற்றப்பாதையிலும் வழிநடத்தி உங்களின் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்தால்தான் உங்கள் குடும்பம் சீரான வளர்ச்சியுடன் வெற்றி பெற்ற நிலையை அடைய முடியும்.. மாறாக.. உங்கள் தந்தையார் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் நிதானமாய் நடை போட்டால்.. உங்கள் தந்தையார் வேகமாய் ஓடிய ஓட்டமும் வீண்..... உங்கள் மகன் எவ்வளவுதான் ஓடினாலும் வெற்றிக்கோட்டை அடையவே முடியாது...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக