ஈடிபஸ் என்ற கிரேக்க மன்னன் தன்னுடைய தாயின் மீது காதல்வயப்பட்டு தன்னுடைய தந்தையை கொன்றுவிட்டு தாயை கட்டாய திருமணம் செய்துகொண்டான்... தன்னுடைய தாயை போல் சற்றே வயது அதிகமான உடல் பருமனான பெண்களின் மீதுகாதல் வயப்படும் தன்மை எல்லா ஆண்களுக்குமே இருக்கிறது.. அடி மனதில் எல்லா ஆண்களுக்குமே இது இருக்கும்.. அதன் அளவு அதிகமாகும் ஆண்கள் தன்னைவிட வயது மூத்த , பருமனான பெண்களின் மீது மோகம் கொள்வார்கள் இதனை மருத்துவ விஞ்ஞானம் "ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ்" என்று சொல்கிறது...
பொதுவாக ஆண்கள் எல்லோருக்குமே உள்ளுக்குள் பெண் தன்மை இருக்கும்.. இதன் விகிதாச்சாரம் அதிகமானவர்கள் தான் திருநங்கைகள் ஆகிறார்கள்.. அதே போல தான் ஒவ்வொரு ஆணுக்கு உள்ளும் தாயின் மீது ஒரு காதல் இருக்கும்.. ஒவ்வொரு ஆண் மகனுக்கும் முதல் காதலி தாய்தான்...
இதன் விகிதாச்சாரம் அதிகமாகிற போது தான் எதிர் விளைவுகள் அதிகமாகிறது
காலம் காலமாய் நம்மை வழிநடத்தும் கலாச்சாரம் தாயுடனோ- சகோதரியுடனோ உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வது ஒரு அசிங்கமான / பாவமான காரியமாக சித்தரித்து வைத்திருக்கிறது..
இந்த கலாச்சாரமே இந்திய கலாச்சாரத்தின் மாண்பை உலகமே வியந்து நோக்க வைத்திருக்கிறது..
தன்னுடைய தாயின் வயதை ஒத்த வேறெந்த பெண்ணை வேண்டுமானாலும் பாலியல் இச்சையோடு பார்க்கும் ஒரு ஆணால் தன்னுடைய தாயை அவ்வாறு பார்க்க முடியாமல் இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்தது நமது இரத்தத்தில் ஊறிய இந்த கலாச்சாரம் தான்...
ஆனால் சமீப காலமாக நவீன கலாச்சாரம் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை எல்லா வகையிலும் சீரழிக்க தொடங்கி, இந்த தாய் -மகன், சகோதரி-சகோதரன் என்ற உறவு முறையான நமது கலாச்சாரத்தின் ஆணி வேரையும் அசைக்க தொடங்கி இருக்கிறது..
தற்போது இணையம் என்ற ஒரு மாபெரும் விஷயம் எல்லோரது வாழ்விலும் அத்தியாவசியமாகி விட்டது...அந்த இணையத்தில் நல்லதும் கெட்டதும் கொட்டிக்கிடக்கிறது.. எந்த ஒரு விஷயத்தையும் இந்த இணையத்தின் தேடுதல் பொறியில் தேடும்போது நாம் தட்டச்சு செய்யும் சொல்லுக்கு தொடர்பான விஷயங்களை அந்த தேடுதல் பொறியே பரிந்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன...
ஆனால் அவைகள் அவ்வாறு பரிந்துரைக்கும் விஷயம் நமது கலாச்சாரத்தை , அதன் ஆணிவேரை அசைப்பது எத்தனை பேருக்கு தெரியும்..?
நாம் ஒரு விஷயத்தை தேட ஒரு சொல்லை தட்டச்ச்சு செய்யும் போது அதுவாக பரிந்துரைக்கும் விஷயம் நமக்கு முற்றிலும் அறிமுகமில்லாததாய் இருக்கும்... அவ்வாறு பரிந்துரைக்கும் விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கும் பட்சத்தில் நமது கவனம் அதன் மீது செல்லும்.. இதுதான் ஒரு சாதாரண மனிதனின் மனோ நிலை..
இணைய தேடுதல் பொறியில் அம்மா என்று தட்டச்சு செய்யும் போது "அம்மா- மகன் உறவு" என்றும், அக்கா என்று தட்டச்சு செய்யும் போது "அக்கா- தம்பி உறவு" என்றும் அவைகள் பரிந்துரைக்கிறது.. அப்படி பரிந்துரைக்கும் விஷயங்கள் எல்லாமே நமது கலாச்சாரத்திற்கும், மானுட நாகரீகத்திற்கும் முரணான பாலியல் உறவு தொடர்பான விஷயங்கள் என்பதுதான் வேதனை...
ஒரு சாதாரண இந்திய கலாச்சாரத்தில் வாழும் ஒரு இளைஞன் இப்படி ஒரு விஷயத்தை இணைய பரிந்துரையின் பேரில் படிக்க நேர்ந்தால் காலம் காலமாக நமக்குள் விதைக்கப்பட்டிருந்த விஷயம் லேசாக தடுமாற தொடங்கும்... ஒருவேளை இது ஒரு சாதாரண விஷயம் தானோ... நமக்குதான் தெரியாமல் இருந்திருக்குமோ.. என்று அந்த இளைஞன் நினைக்க ஆரம்பித்தால் இந்திய கலாச்சாரம் என்ன ஆகும்..?/
அவ்வாறாக கலாச்சார சீரழிவுகள் ஏற்படுமானால் அம்மா- மகன் , சகோதர- சகோதரி உறவுகளே கேள்விக்குறி ஆகி விடாதா??
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்திருக்கும் ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்ற விஷயத்தை இவைகள் கிளறி அதன் விகிதாச்சாரத்தை அதிகப்படுத்தி விடாதா..?
நமது கலாச்சாரத்தை குறிவைத்து அதனை உடைக்கும் வேலையில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றிருக்கும் அந்நிய சக்திகள் கடைசியாக இதிலும் கை வைக்க நாம் அனுமதிகத்தான் போகிறோமா.???
இதற்காக நாம் என்ன செய்ய போகிறோம்.. நமது அரசு என்ன செய்ய போகிறது... எல்லா விஷயத்திலும் கடைசியாக விழித்துக்கொள்ளும் அரசு இதிலும் அப்படித்தான் போகிறதா??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக