சனி, 9 மே, 2015

வரிசையாய் கொலைகள்

சிறுவன் தில்ஷனை சுட்டுக்கொன்ற ராணுவ அதிகாரி...
தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பி இரண்டு பேர் கொலை.. ஒருவர் கவலைக்கிடம் - விவசாயி ரவி கைது..
ஆசிரியயை குத்திக்கொலை செய்த ஒன்பதாம் வகுப்பு மாணவன்..
வரிசையாய் கொலைகள்... ஒரு உளவியல் பார்வை...

------------------------------------------------------------------------------------------
மேற்குறிப்பிட்ட நான்கு கொலைகளிலும் திட்டமிடல் இல்லை, 
பெரிதாக காரணங்கள் இல்லை..., கொலைகளுக்கு பிறகு கொலையுண்டவருக்கு உயிரும் கொலையாளிக்கு எஞ்சிய வாழ்வும் நஷ்டம்...
முதலில் சிறுவன் தில்ஷன்... 
ஒரு ராணுவ அதிகாரி ஒரு சிறுவனுக்கெதிராக துப்பாக்கி பிரயோகம் செய்யுமளவுக்கு மூர்க்கமானது ஏன்...??? சிறுவனை மீறிய ஒரு சாத்தானின் ஆளுகைக்குட்பட்டு அந்த சிறுவனின் வளர்ப்பு முறை... நிறைய முறை தங்களின் குழந்தை ரானுவக்குடியிருப்புக்குள் புகுந்து விரும்பத்தகாத காரியங்கள் செய்வதை புகார் கொடுத்த பின்பும் கண்டிக்காத பெற்றோரும்.. பெரியோர்களை மதிக்க வேண்டுமென சொல்லிக்கொடுக்காத அவர்களின் அறிவீனத்தாலுமே அந்த கொலை.. சிறுவனை சுட்டுக்கொண்டு விட்டார் என்ற நோக்கத்தோடு மட்டும் அணுகாமல் ஏன் செய்தார் என்று யோசித்தால் அவரின் நிலையில் இருந்தால் நாமும் அதைத்தான் செய்திருப்போம் என்பது விளங்கும்... " ஏய்.. ங்கோத்தா... என்ன புட்சுடுவியா நீ..." என்றும்... தன்னுடைய கால் சட்டையை கழற்றி பின்புறத்தை காட்டியும் பலவாறாக தொல்லை கொடுத்த சிறுவனை விரட்டி பிடிபடாத போதும், அவர்களின் வீட்டில் புகார் கொடுத்தான் அவர்கள் கண்டிக்க தயாராயில்லாத போதும் அப்படி ஒரு கொடூர முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார் அந்த ராணுவ அதிகாரி...

இரண்டு கொலைகள் - ஒருவர் கவலைக்கிடம்.. : 

ஒரு தனி மனிதன் மூன்று கொலைகள் செய்யும் அளவுக்கு மூர்க்கம் பெற்றதெப்படி...? தாங்கள் மூன்று பேர் இருக்கும் பலத்தில் ஒருவனாக இருந்த பக்கத்தில் நிலம் வைத்திருக்கும் ஒருவனை அவன் தனியாள் என்பதாலேயே பலவிதமான தொல்லைகளை தொடர்ந்து கொடுத்துவர.. அறையில் அடைக்கப்பட்ட பூனையும் தன்னை காத்துக்கொள்ள புலியாய் மாறுவது போலத்தான் இந்த கொலைகளும் நடந்திருக்கிறது.. பக்கத்து வீட்டில் இருப்பவனும் மனிதன்.. அவனும் வாழ வேண்டும் என்ற எண்ணம் ஒழித்து.. அவன் எப்போது ஒழிந்து போவான்.. அவனுடைய சொத்தையும் நாம் அபகரித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்க அவர்கள் தொடர்ந்து கொடுத்த இன்னல்கள் இன்று அவர்களின் உயிரை காவு கொண்டதோடு... அவர்களால் இடையூருக்கு ஆளாகி.. வாழ வேண்டிய போராட்டத்தின் காரணமாய் மன உளைச்சலால் அரிவாள் எடுக்க தூண்டப்பட்ட ஒரு சாதாரணனின் வாழ்வையும் காவு வாங்கி இருக்கிறது...

ஆசிரியை கொலை...:ஒரு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கொலைகாரனாய் கூண்டிற்குள்... யார் காரணம்..?? 
எந்த ஒரு பெற்றோரும் தம்முடைய பிள்ளைகளை கொடுமை செய்யும் நோக்கில் படி படி என்று தூண்டிக்கொண்டிருப்பதில்லை.. மாறாக.. தம் இடத்தில் அவர்களை வைத்து அழகு பார்க்க வேண்டுமேனவோ.. தனக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகள் தமது பிள்ளைகளுக்காவது கிடைக்க வேண்டுமெனவோ தனக்கு மூடப்பட்ட அந்த கதவுகள் தன்னுடைய பிள்ளைகளுக்காகவாவது திறக்க வேண்டும் என்ற நோக்கோடு அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.. ஏனென்றால்.. மூடிய அந்த கதவுகளை திறக்கும் ஒரே சாவி நிறைய மதிப்பெண்கள் மட்டுமே என்ற ஒரு தவறான எண்ணத்தை சமூகமும், கார்பொரேட் கம்பெனிகளும் விதைத்திருக்கிறார்கள்... எந்த கார்பொரேட் கம்பெனியும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களை திரும்பி பார்க்க கூட தயாராயிருப்பதில்லை.. மனப்பாடம் செய்து வாந்தி எடுத்தவர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.. அவ்வாறு மனப்பாடம் செய்து வாந்தி எடுத்தவர்களில் இருந்து ஒரு திறமை சாலியை அவர்கள் தென்தேடுத்துக்கொள்கிரார்களே தவிர நிஜமான திறமை சாலிகள் அந்த மதிப்பெண் காரணமாக அந்த வளாகத்தின் வெளியேயேநிறுத்தப்பட்டு விடுவதால் அவர்களின் திறமைகள் வெளியிட முடியாமலேயே போய் விடுவதோடு.. மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதன் மூலம் நிறைய சம்பாதிக்கும் வழி கிடைக்கப்பெற்றோரின் வாழ்க்கை தரம் மேலேறிக்கொண்டே போக , எவ்வளவு திறமை இருந்தும் இவர்கள் ஒரு நிலையிலேயே தேக்கப்படுவதால்... திறமைகளை விட மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலைக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் உள்ளாக்கப்படுகிறார்கள்.. இயல்பை மீறி வளைக்கப்பட்ட அல்லது உறுதியாகக முற்பட்ட குழந்தைகள் கடைசியில் உடைந்தே போகிறார்கள்..

எந்த சந்தர்பத்திலும் மனம் என்ற ஒன்றை மிஞ்சி இயந்திரத்தனமான வாழ்வும் , திறமைகளுக்கான அங்கீகாரமும் - சக மனிதனை ஒழித்து தான் வசதியாய் வாழலாம் என்ற ஏதோ ஒன்றின் மிகுதியால் ஏற்படும் ஆதிக்க வெறியும் இருக்கும் வரை இது போன்ற கொலைகளை யாராலும் தடுக்க இயலாது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக