திங்கள், 27 ஜூலை, 2015

தமிழ் எழுத்துக்கள் - 299 .

"ஸ்" "ஷ்" "ஹ்" "ஜ்" - போன்ற எழுத்துக்கள் எல்லாம் வடமொழி எழுத்து வடமொழி 
எழுத்து என்றே சொல்கிறார்களே.... வடமொழியில் எந்த மொழியில் இருக்கிறது 
இந்த எழுத்து வடிவம்?? சமஸ்கிருதமா?ஹிந்தியா?? ஒரியாவா? பெங்காலியா? 
அஸ்ஸாமியா ? பஞ்சாபியா???மராட்டியா????


என் சிற்றறிவுக்கு எட்டிய வரை இவைகள் எல்லாமே சம்ஸ்கிருத பாஷையை 
எழுதுவதற்காக  பின்னாளில் உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தான்.... 
அப்படி பார்த்தால்.. 
தமிழின் மெய் எழுத்துக்கள் மொத்தம் 18 +4 = 22. 
மொத்த எழுத்துக்கள் 247 +48 +4 = 299 .
இதை மறுப்பவர்கள் , இந்த எழுத்துக்கள் எந்த வடமொழியில் இருக்கின்றன என்று 
சொன்னால் நானும் தெரிந்துகொள்வேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக