1952- 1957 ஆண்டுகளில் திரு இராஜகோபாலாச்சாரியார்(1952-1954)மற்றும் திரு காமராஜர் (1954-1957) ஆட்சிகாலத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய திரு ஜீவா அவர்கள் (பொதுவுடைமை கட்சி) ஒளவை ஆரம்பப்பள்ளி என்ற ஒரு பள்ளியின் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.... அதன் பிறகு வந்த (1957) தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்...
அடுத்து வந்த ஆட்சியில் முதல்வராக இருந்த திரு காமராஜர் அவர்கள் அந்த பள்ளிக்கூட கட்டிடத்தை திறந்துவைக்க வந்தார்.... அப்போது, திரு ஜீவா அவர்கள் குடியிருந்த பகுதி வழியாக செல்ல நேர்ந்தது... தன்னுடைய காரை நிறுத்திவிட்டு திரு ஜீவா அவர்கள் வசித்த குடிசை பகுதிக்கு தானே நேரில் சென்றார்... திரு ஜீவா அவர்களிடம்..." நீ அடிக்கல் நாட்டிய பள்ளி கட்டிடத்தை திறந்துவைக்க போகிறேன்.. நீயும் வா..." என்று அழைத்தார்.. ( இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் ஒருமையில் அழைக்கும் உரிமை இருந்தது)
"நீ போ.... நான் ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டார் திரு.ஜீவா...
சொன்னபடி ஒருமணி நேரம் கழித்து கட்டிடம் திறக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்.. அதுவரை காத்திருந்த திரு காமராஜர் அதன் பிறகே அந்த கட்டிடத்தை திறந்துவைத்தார்...
"நான் வந்தபோதே நீயும் என்னுடன் வந்திருக்கலாமே..." என்று திரு காமராஜரின் கேள்விக்கு திரு.ஜீவா கொடுத்த பதில்... இன்றைய ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை என்றென்றும் செருப்பால் அடிப்பதுபோல அமைந்திருந்தது....
"ஒரு வேட்டிதான் இருக்கிறது... அதை துவைத்து காயவைத்து கட்டிக்கொண்டுவர நேரமாகிவிட்டது.."
அப்படிப்பட்ட தலைவர்களை எல்லாம் புறக்கணிச்சோமே... அந்த பாவம் எல்லாம் நம்மள சும்மா விடுமா.....??????????
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக