செவ்வாய், 28 ஜூலை, 2015

உதவியாளர்கள்



தன்னுடைய "உதவியாளர்கள்" பற்றி இரண்டு கவிஞர்கள் சொன்னது....

முதலாமவர் வைரமுத்து ...

"நண்பர் ஒருவரிடம் ஒரு உதவியாளர் வேண்டுமே... என்று கேட்டேன்.... "என்ன தகுதி வேண்டும்" என்று அவர் கேட்டார்....
"கவிதை என்றால் என்ன என்று தெரிய வேண்டும்.. ஆனால் கவிதை எழுத தெரிந்திருக்க கூடாது... பிழையில்லா தமிழும்....
குறையில்லா கையெழுத்தும் அவசியம்.... நேரம் கணக்கில்லாமல் எந்நேரமும் என்னுடனிருக்க சம்மதிக்க வேண்டும்...."
அப்படியான ஒருவனை அறிமுகப்படுத்தினார் நண்பர்.. அவன் தான் என் உதவியாளன்.. என் இரண்டாம் மூளை.. மூன்றாம் கை.. பாஸ்கரன்...."

(இந்த குளத்தில் கல்லெறிந்தவர்களில் கவிஞர் வைரமுத்து )

இரண்டாமவர் வாலி....

ஒரு உதவியாளரை வைத்துக்கொள்ள கூடாதா என்று நண்பர் கேட்டார்... நான் சொன்னேன்.... வேண்டாமய்யா.... வெளியில் சென்று கண் மறைவில் அவன் "அந்தாளுக்கு எதுவும் தெரியாது.. எல்லாம் நான் எழுதிக்கொடுக்கிறதுதான்...ஆனா அத சொன்னா எவனும் நம்ப மாட்டான்.. அந்தாள் பேர் வாங்கிட்டான்,,," என்று சொல்வான்.... உதவியாளரே வேண்டாம்.. என் கையே எனக்குதவி..."

("வாலி 1000" விழாவில் கவிஞர் வாலி )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக